பிள்ளைகள் ஊதாரி செலவாளியாக மாறாமல் தடுக்க... – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2019

வீட்­டில் நம் பெற்­றோ­ரும், பள்­ளி­யில் நமது ஆசி­ரி­யர்­க­ளும், சமூ­கத்­தில் நமது பெரி­யோர்­க­ளும் நமக்கு சொல்­லித் தராத ஒரு பாடம் என்­றால் அது பணத்­தைக் கையா­ளும் நிதிக் கல்­வி­தான். பல தவ­று­க­ளைச் செய்து, சம்­பா­தித்­தை­யெல்­லாம் தொலைத்­துக் கற்­றுக்­கொண்ட அந்த பாடத்தை, அடுத்த தலை­மு­றைக்­கா­வது நாம் அவ­சி­யம் கற்­றுத் தர­வேண்­டும். சாதி, மதம், அர­சி­யல் என பல விஷ­யங்­களை டீன் ஏஜ் குழந்­தை­க­ளி­டம் பேசத் தயங்­காத பெற்­றோர்­கூட, பணம் மற்­றும் அதைக் கையா­ளும் விதம் பற்றி அதி­க­மா­கப் பேசு­வ­தில்லை. இதற்­குக் கார­ணம், நாமே பணம் பற்றி சரி­யா­கப் புரிந்­து­கொள்­ளா­மல் இருப்­ப­து­தான். 45 வய­தில் கஷ்­டப்­பட்டு சம்­பா­திக்­கும் ஒரு அப்­பா­வுக்கு, 15 சத­வீத தள்ளி எடுத்த சீட்­டுப் பணத்தை வங்கி எப்.டி-யில் போட்டு வைக்­கக்­கூ­டாது என்­பது தெரி­ய­வில்லை. கண­வர் தரும் வீட்­டுச் செல­வில் கொஞ்­சம் கொஞ்­ச­மாக மிச்­சம் பிடித்து, குந்­து­மணி அள­வுக்­கா­வது தங்­கம் வாங்­கி­விட வேண்­டும் என்று நினைக்­கும் அம்­மா­வுக்கு, கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் தங்­கம் விலை பெரிய லாபம் தந்­து­வி­ட­வில்லை எனத் தெரி­ய­வில்லை. தவிர, தப்­பாக எது­வும் சொல்­லித் தந்­து­வி­டு­வோமோ என்­கிற அச்­ச­மும் அவர்­க­ளி­டம் இருக்­கி­றது. ஆகவே அவற்றை எவ்­வாறு கையாள வேண்­டும் என்­பதை விவ­ரிக்­கி­றார் பொரு­ளா­தார நிபு­ணர் முத்­து­கி­ருஷ்­ணன்.

"பணத்தை ஒழுங்­கா­கக் கையா­ளும் விதம், சேமிப்­புக்­கும், முத­லீட்­டுக்­கும் உள்ள வித்­தி­யா­சம், பட்­ஜெட் போட்­டுச் செல­வ­ழிக்­கும் கலை இவற்றை அறி­யா­விட்­டால், லட்­சக் கணக்­கில் சம்­பா­தித்­தா­லும் பிர­யோ­ஜ­ன­மில்லை.  

அதி­லும் இந்த காலத்­தில் வேலை­யில் சேரும்­போதே ஐந்து இலக்­கச் சம்­ப­ளங்­க­ளும், பிளாஸ்­டிக் மணி எனப்­ப­டும் கார்­டு­க­ளும் வந்­த­பின், பணத்­தின் மீதான மரி­யாதை குறைந்­துள்­ளது. நம் காலம் முழு­மைக்­கும் கொட்­டிக் கொண்­டி­ருக்க பணம் ஒன்­றும் நயா­கரா நீர்­வீழ்ச்சி இல்லை; அது வருங்­கா­லத்­தி­லேயே அதை சேமிக்க வேண்­டும் என்ற விழிப்பு உணர்வு பல இளை­ஞர்­க­ளுக்கு இல்லை. பணத்தை சரி­யா­கக் கையா­ளத் தெரி­யா­த­தா­லேயே மன அழுத்­தம், விவா­க­ரத்து, குற்­றங்­கள் பெரு­கு­தல் போன்­றவை அதி­க­ரிப்­ப­தாக ஒரு சர்வே கூறு­கி­றது. ‘‘பேங்க்ல இருந்து பேசு­றோம். நீங்க புதுசா ஏ.டி.எம் கார்டு வாங்­கி­யி­ருக்­கீங்க. உங்க கார்டு நம்­ப­ரை­யும், பின்­நம்­ப­ரை­யும் கொஞ்­சம் சொல்­லுங்க’’ என்று சொன்­ன­வு­டன் நம்­பிச் சொல்லி, பிற்­பாடு “பணம் போச்சே, பணம் போச்சே” என்று மெத்­தப் படித்­த­வர்­கள்­கூட புலம்­பக் கார­ணம், போதிய அளவு நிதிக் கல்­வி­யும், விழிப்பு உணர்­வும் இல்­லா­த­து­தான்.

இன்ஸ்­டன்ட் காபி, டூ மினிட்ஸ் நூடுல்ஸ், ஏ.டி.எம்-­மில் பணம், ஆன்­லை­னில் பொருள்­கள் என்று உரு­வா­கும் தலை­மு­றைக்கு செல்­வத்தை உரு­வாக்க, நம்­மி­டம் இருக்­கும் பணத்­தைப் பெருக்க பொறு­மை­யும், அள­வற்ற கண்­கா­ணிப்­பும் எவ்­வ­ளவு அவ­சி­யம் என்­பது இன்­றைய தலை­மு­றைக்­குப் புரி­வ­தில்லை. பாட்டி வாங்­கிய தங்க நகையை கொள்­ளுப் பேத்­திக்கு போய்ச் சேரு­கிற மாதிரி, பாட்­டன் வாங்­கிய இடம் கொள்­ளுப் பேர­னுக்­குச் சென்று சேரு­கி­ற­மா­திரி, ஒரு நிறு­வ­னத்­தின் பங்­கையோ, ஒரு மியூச்­சு­வல் பண்ட் முத­லீட்­டையோ வைத்­தி­ருக்க வேண்­டும் என்று நம் குழந்­தை­க­ளுக்கு நாம் என்­றைக்­கா­வது சொல்­லித் தந்­தி­ருக்­கி­றோமா?

மேலை­நா­டு­க­ளில் பிள்­ள­க­ளுக்கு இந்த நிதி நிர்­வா­கத்­தைக் கற்­றுத் தர பல தனி­யார் நிறு­வ­னங்­கள் போட்டி போடு­கின்­றன. அமெ­ரிக்­கா­வில் வேன்­கார்டு எனப்­ப­டும் மிகப் பெரிய மியூச்­சு­வல் பண்ட் நிறு­வ­னம், பள்­ளி­க­ளி­லேயே செயல்­ப­டுத்­தும் வித­மாக அன்­றா­டப் பொரு­ளா­தா­ரத்தை வடி­வ­மைத்து, ஆசி­ரி­யர்­க­ளுக்­கும், அவர்­கள்­மூ­லம் மாண­வர்­க­ளுக்­கும் கற்­றுத் தரு­கி­றது.

நம் நாட்­டில் பள்ளி, கல்­லூ­ரி­க­ளில் இப்­ப­டிப்­பட்ட முயற்­சி­கள் இல்­லாத நிலை­யில், பட்­ஜெட் போட்டு செலவு செய்­வது, அதி­கம் கடன் வாங்­கா­மல் இருப்­பது, கிரெ­டிட் கார்­டி­னைக் கையா­ளு­வ­தில் கவ­னம் போன்ற நல்ல பழக்­கங்­க­ளின் அரு­மை­யைப் பெற்­றோ­ரும், ஆசி­ரி­யர்­க­ளும் எடுத்­துச் சொல்ல வேண்­டும்.

பணம் தொடர்­பான விஷ­யங்­கள் குழந்­தை­க­ளுக்­குப் புரி­யுமா என்று நாம் சந்­தே­கப்­ப­டத் தேவை­யில்லை. ஆரம்­பக் கல்­வி­யைப் படித்து முடிக்­கும்­முன்பே பணத்­தின் முக்­கி­யத்­து­வத்­தைக் குழந்­தை­கள் தெளி­வா­கத் தெரிந்­து­கொள்ள ஆரம்­பித்­து­வி­டு­வ­தா­கச் சொல்­கின்­றன ஆராய்ச்­சி­கள். ஐந்து வய­துக் குழந்­தை­கள்­கூட வங்கி, ஏ.டி.எம், டெபிட் கார்டு போன்ற பணம் சம்­பந்­தப்­பட்ட எல்லா விஷ­யங்­களை யும் புரிந்­து­கொள்­கி­றார்­கள். நீங்­கள் கற்­றுத் தரத்­தான் தயா­ராக வேண்­டும்.

பணத்­தைப் பற்றி பள்ளி, கல்­லூ­ரி­க­ளில் பெரி­தாக உரை நிகழ்த்தி அவர்­கள் மன­தில் பதிய வைக்­கத் தேவை­யில்லை. அது அவர்­களை வெறுப்­ப­டை­யவே செய்­யும். அன்­றாட வாழ்­வில் நாம் செய்­யும் வரவு செலவு விஷ­யங்­க­ளில் அவர்­க­ளை­யும் ஈடு­ப­டுத்­து­வது ஒரு நல்ல தொடக்­கம். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்­கும்­போது அவர்­களை அரு­கில் வைத்­தி­ருப்­பது, வங்­கிக்கு பிள்­ளை­களை அழைத்­துச் சென்று அங்கு நடக்­கும் செயல்­பா­டு­களை விளக்­கிச் சொல்­வது, கடை­யில் பொருள்­களை வாங்­கும்­போது, பல விஷ­யங்­க­ளைக் கவ­னிக்­கச் சொல்­வது என நமது வாழ்க்­கை­யில் நடக்­கும் அன்­றாட நிகழ்­வுக்­களை அவர்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­வ­தன்­மூ­லம் அவர்­க­ளி­டம் ஒரு தெளிவை உரு­வாக்க முடி­யும். பள்ளி, கல்­லூ­ரி­க­ளில் இந்த விஷ­யத்தை இன்­னும் கொஞ்­சம் விரி­வான செயல்­பா­டு­கள் மூலம் செய்­ய­லாம்.  

மின்­சா­ரம், தண்­ணீர், பால், பேப்­பர் இவற்­றுக்­கான பில்­க­ளைக் காட்டி விளக்கி, கட்­ட­வேண்­டிய தேதி­யில் நினை­வு­ப­டுத்­தும்­படி பழக்­கப்­ப­டுத்­தப் பட்ட பிள்­ளை­கள், தம் வாழ்­நாள் முழு­வ­தும் கிரெ­டிட் கார்டு பில்­க­ளைச் சரி­யா­கக் கட்­டு­வார்­கள். எது வாங்­கு­வ­தாக இருந்­தா­லும், ஒரு பட்­ஜெட் தொகையை முன்­ன­தா­கவே குறிப்­பிட்­டு­விட்­டால், அவர்­கள் அதை மீறு­வ­தில்லை. ஒரு­படி மேலே சென்று, “பட்­ஜெட்­டில் மீத­மி­ருக்­கும் தொகை உன் உண்­டி­ய­லுக்கு” என்று கூறி­விட்­டால், அதி­கம் செலவு செய்­தால் நஷ்­டம் என்ற எண்­ணம் அவர்­க­ளுக்­குள் ஆழ­மா­கப் பதிந்­து­வி­டும். எதிர்­கா­லத்­தில் நமது குழந்­தை­கள் பணம் தொடர்­பான விஷ­யங்­க­ளில் கஷ்­டப் படா­மல் இருக்க வேண்­டு­மெ­னில், பின்­வ­ரும் பாடங்­களை நாம் அவர்­க­ளுக்கு அவ­சி­யம் சொல்­லித் தர­வேண்­டும்.

பணம் சம்­பா­திப்­பது அவ­சி­யம்; அதை நேர்­வ­ழி­யில் சம்­பா­திப்­பது இன்­னும் அவ­சி­யம்.

பணத்தை மதிக்க வேண்­டும்; ஆனால், அதற்கு அடி­மை­யா­கி­வி­டக் கூடாது.

கடன் வாங்­க­லாம்; ஆனால், கழுத்தை நெறிக்­கிற அள­வுக்கு வாங்­கக் கூடாது.

தேவை­யா­ன­வற்றை உடனே வாங்கு; ஆசை­க­ளைத் தள்­ளிப் போடு.

பிற­ருக்கு நிச்­ச­யம் உத­வ­வேண்­டும்; ஆனால், அதி­லும் நிதா­னம் வேண்­டும்.

இன்­றைக்கு நம் குழந்­தை­க­ளி­டம் பணம் இல்­லை­யென்­றால், நாம் தந்து உத­வ­லாம். எதிர் காலத்­தி­லும் அவர்­க­ளி­டம் பணம் இல்லை என்­றால், நம்­மால் உதவி செய்­து­கொண்டே இருக்க முடி­யாது. பணத்­தைக் கையா­ளும் கல்­வி­யைத் தந்­து­விட்­டால், அவர்­கள் நம்­மி­ட­மி­ருந்து பணத்தை எதிர்­பார்க்­க­மாட்­டார்­கள்" என்றார்.