விவசாயத்தில் கல்லூரி மாணவி கலக்கல்! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2019

ஒரத்­த­நாடு அருகே நடவு செய்­வ­தற்கு ஆட்­கள் கிடைக்­கா­த­தால் கல்­லூரி மாணவி ஒரு­வர் தனக்­குச் சொந்­த­மான ஒரு ஏக்­கர் நிலத்­தில் தனி ஆளாக நின்று நெற்­ப­யிரை நடவு செய்­தது ஆச்­சர்­யத்தை ஏற்­ப­டுத்­தி­ய­து­டன் பல­ரும் அந்த மாண­வியை பாராட்டி வரு­கின்­ற­னர்.

ஒரத்­த­நாடு அருகே உள்ள அக்­க­ரை­வட்­டம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் கருப்­பை­யன், இவ­ரின் மனைவி காந்­தி­மதி. இவர்­க­ளுக்கு விவ­சா­யம்­தான் முக்­கிய தொழி­லாக இருந்து வரு­கி­றது. இவர்­க­ளுக்கு ராஜ­லட்­சுமி என்ற மகள் இருக்­கி­றார். அவர் ஒரத்­த­நாடு அரசு கலைக் கல்­லூ­ரி­யில் பி.எஸ்சி மூன்­றாம் ஆண்டு படித்து வரு­கி­றார். மகள் கல்­லூ­ரி­யில் படித்து வந்­தா­லும் அவ­ருக்கு கருப்­பை­யன் விவ­சா­யப் பணி­களை கற்­றுக் கொடுத்தே வளர்த்து வந்­துள்­ளார். இத­னால் படிக்­கிற நேரம் தவிர மற்ற நேரங்­க­ளில் தந்­தைக்கு உத­வி­யாக ராஜ­லட்­சு­மி­யும் அவ்­வப்­போது விவ­சா­யப் பணி­க­ளைச் செய்­வார்.

இந்த நிலை­யில், கருப்­பை­யன் தனக்­குச் சொந்­த­மான ஒரு ஏக்­கர் நிலத்­தில் ஆழ்­கு­ழாய் மூலம் தண்­ணீர் பாய்ச்சி நெற்­ப­யிர் நடவு செய்­வ­தற்­கான பணி­யைத் தொடங்­கி­னார். நட­வுப் பணி­யைச் செய்­வ­தற்­காக விவ­சா­யத் தொழி­லா­ளர்­க­ளி­ட­மும் சொல்லி வைத்­தி­ருந்­தார். ஆனால், அவர்­கள் வர­வில்லை எனத் தெரி­கி­றது. பின்­னர், தொடர்ந்து தேடி­யும் நட­வுக்கு ஆள் கிடைக்­க­வில்லை. இதை கருப்­பை­யன் தனது வீட்­டில் உள்­ள­வர்­க­ளி­டம் சொல்லி புலம்பி வந்­துள்­ளார். இதைக்­கேட்ட ராஜ­லட்­சுமி  `இதுக்கு ஏம்பா கவ­லைப்­ப­டுற நான் நடவு நடு­கி­றேன்’ எனக் கூறி­யுள்­ளார். நட­வுப் பணி செய்­வது தன் மளுக்­கும் தெரி­யும் என்­றா­லும் `ஒரு ஏக்­கர் வய­லில் எப்­படி நீ மட்­டுமே நடவு செய்­வாய், விளை­யா­டா­தம்மா’ என தன் மக­ளி­டம் கருப்­பை­யன் கூறி­யி­ருக்­கி­றார். ஆனா­லும் ராஜ­லட்­சுமி விடாப்­பி­டி­யாக பெற்­றோரை சம்­ம­திக்க வைத்­தார். இதை­ய­டுத்து, அப்பா நட­வுக்கு உத­வி­யாக இருக்க மகள் மூன்று நாள்­க­ளில் ஒரு ஏக்­கர் நிலத்­தி­லும் தனி மனு­ஷி­யாக நின்று நெற்­ப­யிர்­களை நடவு செய்­யும் பணியை வெற்­றி­க­ர­மாக செய்­து­மு­டித்­தார். இந்­தத் தக­வல் அக்­கம் பக்­கத்­தில் உள்­ள­வர்­க­ளுக்­குத் தெரி­ய­வந்­த­தும், விவ­சா­யம் என்­றாலே தலை­தெ­றிக்க ஓடு­ப­வர்­க­ளுக்கு மத்­தி­யில் தனி ஆளாக நின்று நடவு செய்த ராஜ­லட்­சு­மியை அனை­வ­ரும் பாராட்­டி­னர்.

இது குறித்து மாணவி ராஜ­லட்­சுமி கூறி­ய­தா­வது, ``நடவு செய்ய நாற்று எல்­லாம் தயா­ராக இருந்த நிலை­யில், நட­வுக்கு ஆட்­கள் வர­வில்லை. ஆள்­பாற்­றாக்­குறை அடிக்­கடி ஏற்­ப­டு­கி­றது. நாற்று விடு­வது தொடங்கி நடவு நட்டு அதை வளர்த்து அறு­வடை செய்­வ­தற்­குள் விவ­சா­யி­கள் படும் கஷ்­டத்­துக்கு அளவே இல்லை. இந்த வேலை தெரிந்­த­தால் அந்த கஷ்­டத்தை நான் நன்கு உணர்­வேன். பயிர் தயா­ராக இருந்­தும் நட முடி­ய­வில்லை என அப்பா கவ­லைப்­பட்­ட­தைப் பார்த்த பிறகு, ஏன் நாமே நடவு நட்­டால் என்­ன­வென்று தோன்­றி­யது அதை அப்­பா­வி­டம் கூறி­னேன். வேண்­டாம்மா இது ஒரு ஆள் செய்­கிற வேலை கிடை­யாது என்­ற­வரை சம்­ம­திக்க வைத்து பணி­யில் இறங்­கி­னேன்.ஜூன் 23-ம் தேதி காலை தொடங்­கிய வேலையை மாலை வரை செய்­தேன் ஆனால், ஒரு பகுதி மட்­டுமே செய்ய முடிந்­தது. இதைத்­தொ­டர்ந்து அடுத்த இரண்டு நாள்­கள் காலை கல்­லூ­ரிக்­குச் சென்­று­விட்டு மதி­யம் வந்த பிறகு நட­வுப் பணி­யைத் தொடங்­கு­வேன். மூன்று நாள்­க­ளில் ஒரு ஏக்­கர் நிலத்­தை­யும் நட்டு முடித்­தேன். அப்பா உடன் இருந்து மற்ற வேலை­க­ளைச் செய்­த­தோடு உற்­சா­க­மும் படுத்­தி­னார். `இதே மாதிரி தன்­னம்­பிக்­கை­யோடு இரு' என அம்­மா­வும் அரு­கில் இருந்­த­வர்­க­ளும் பாராட்டி வாழ்த்­தி­னர்” என தெரி­வித்­தார்.