மேற்கு வங்க புலி – சுமதி

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2019

அர­சி­ய­லுக்­குள் வரு­வேன் என்­பதை நான் அறிந்து வைத்­தி­ருந்­தேன். முப்­பது வய­தா­ன­போது, இது­தான் சரி­யான நேரம் அர­சி­ய­லில் காலடி எடுத்து வைக்க என்று தோன்­றி­யது. என் எண்­ணத்தை என் வீட்­டா­ரி­டம் தெரி­வித்த போது, மிகக் கடு­மை­யாக தங்­கள் ஆட்­சே­ப­னை­யைத் தெரி­வித்­தார்­கள்."கைநி­றைய சம்­ப­ளம், அமெ­ரிக்க வேலை, பெற்­றோ­ரின் எதிர்ப்பு! - மஹுவா மொய்த்­ரா­வின் அர­சி­யல் பய­ணம்

மக்­க­ள­வைத் தேர்­தல் முடி­வ­டைந்­தி­ருக்­கும் நிலை­யில் புதிய எம்.பிக்­களை கொண்ட நாடா­ளு­மன்­றத்­தின் முதல் மழைக்­கா­லக் கூட்­டத்­தொ­டர் கடந்த ஜூன் 21ம் தேதி தொடங்­கி­யது. முதல் கூட்­டத்­தொ­டர் என்­ப­தால் குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் உரை­யு­டன் தொடங்­கிய கூட்­டத்­தில், அடுத்­த­டுத்து எம்.பிக்­கள் வரி­சை­யாக தங்­க­ளின் நன்­றி­யு­ரை­யைக் கூறிக்­கொண்­டி­ருந்­த­னர். 25-ம் தேதி நண்­ப­கல் 12.57 மணிக்கு எழுந்­தார் திரி­ணா­மூல் காங்­கி­ரசை சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா. அடுத்த சில நிமி­டங்­க­ளில் புய­லா­கப் புறப்­பட்ட அவ­ரு­டைய ஆங்­கி­லம் பாஜ­க­வின் கொள்­கை­களை அனல்­ப­றக்­கச் சாடி பிறகே ஓய்ந்­தது. வழக்­க­மாக சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்­ற­வர்­கள் மக்­க­ள­வை­யின் நட்­சத்­தி­ரப் பேச்­சா­ளர்­க­ளா­கக் கரு­தப்­பட்டு வந்த நிலை­யில், தன்­னு­டைய முதல் பேச்­சால் மஹுவா அவர்­க­ளைப் பின்­னுக்­குத் தள்­ளி­யி­ருப்­ப­தா­கக் கொண்­டா­டு­கி­றது சமூக வலை­த­ளங்­கள். 10 நிமி­டங்­கள் இடை­வி­டா­மல் அவர் பேசிய தக­வல்­கள் சமூக வலை­த­ளங்­க­ளில் மீண்­டும் மீண்­டும் பகி­ரப்­பட்டு டிரெண்ட் ஆகி வரு­கின்­றன. நெட்­டி­சன்­கள் பல­ரும் மஹு­வா­வைப் பாராட்டி வரு­கின்­ற­னர்.``50 வரு­டங்­க­ளாக ஒரு மாநி­லத்­தில் பிறந்து அங்­க­கேயே வாழ்­ப­வர்­கள் தாங்­கள் அந்த மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள்­தான் என்­பதை நிரூ­பிக்க சான்­றி­தழ்­கள் தேவைப்­ப­டு­கின்­றன. ஆனால் இதே நாட்­டில் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்­கள் தாங்­கள் பெற்ற கல்­விச்­சான்­றி­தழ்­களை காட்ட வேண்­டும் என்று யாரும் கேட்­கத்­த­யா­ராக இல்லை" என்­ற­வ­ரின் பின்­னணி சுவா­ரஸ்­ய­மா­னது.    

மஹுவா மொய்த்ரா பிறந்­தது அஸ்­ஸா­மில், வளர்ந்­தது கோல்­கட்­டா­வில், வேலை பார்த்­தது அமெ­ரிக்­கா­வில்... பொரு­ளா­தா­ரம் மற்­றும் கணி­தம் படித்த இவர், அமெ­ரிக்­கா­வில் இன்­வெஸ்­மென்ட் பேங்­க­ராக கைநி­றைய சம்­ப­ளத்­து­டன் வேலை செய்து வந்­தி­ருக்­கி­றார். ``அர­சி­ய­லுக்­குள் வரு­வேன் என்­பதை நான் அறிந்து வைத்­தி­ருந்­தேன். முப்­பது வய­தா­ன­போது, இது­தான் சரி­யான நேரம் அர­சி­ய­லில் காலடி எடுத்து வைக்க என்று தோன்­றி­யது. என் எண்­ணத்தை என் வீட்­டா­ரி­டம் தெரி­வித்த போது, மிகக் கடு­மை­யாக தங்­கள் ஆட்­சே­ப­னை­யைத் தெரி­வித்­தார்­கள். அதை­யும் மீறி நான் என் அமெ­ரிக்க வேலை­யைத் துறந்­து­விட்டு இந்­தியா வந்­த­போது என்­னு­டன் பேசு­வதை பல வரு­டங்­க­ளாக நிறுத்தி வைத்­தி­ருந்­தார்­கள். ஆனால் எனக்கு தெரி­யும், நான் எதை விரும்­பு­கி­றேன் என்று!" என்று ஆணித்­த­ர­மாக தன்­னு­டைய விருப்­பத்தை ஒரு பத்­தி­ரிகை பேட்­டி­யில் தெரி­வித்­தி­ருந்­தார் மஹுவா.

சமூக சேவை மற்­றும் மதச்­சார்­பின்மை மீது அதிக ஆர்­வம் கொண்ட மஹீவா முத­லில் தன்னை இணைத்­துக்­கொண்­டது காங்­கி­ர­ஸில். ராகுல் காந்தி ஆரம்­பித்த `Aam Aadmi ka sipahi' என்­கிற புரா­ஜக்­டில் வங்­கா­ளத்­தின் இன் சார்­ஜாக பொறுப்­பேற்­றுக்­கொண்­டார். பிறகு, திரி­ணா­மூல் காங்­கி­ர­ஸில் தன்னை இணைத்­துக்­கொண்­டார். அக்­கட்­சி­யின் எம்.எல்.ஏ ஆனார். ``ஒரு எம்.எல்.ஏ எப்­ப­டிச் செயல்­பட வேண்­டும், மக்­க­ளு­டன் மக்­க­ளாக எப்­ப­டிக் கலந்து பணி­யாற்ற வேண்­டும் என்­பதை நான் அறி­வேன். என்­னைப் பொறுத்­த­வரை வங்­கிப் பணி­யும், களத்­தில் மக்­க­ளு­டன் நிற்­பது என இரண்­டும் ஒன்­று­தான். தேவை சுய ஒழுக்­கம் மட்­டுமே'' என்­ற­வர் மக்­க­ளு­டன் மக்­க­ளா­கத் தொகு­திப் பணி­களை முன்­னெ­டுத்­துச் செய்­தார். விளைவு கிருஷ்­ணா­ந­கர் தொகு­தி­யில் 63,218 ஆயி­ரம் வாக்கு வித்­தி­யா­சத்­தில் ஜெயித்து தான் மக்­க­ளின் பிர­தி­நிதி என்­பதை நிரூ­பித்­தார்.

தன் கருத்­து­களை முன் வைக்­கும் போது சர்ச்­சை­யில் சிக்­கு­வது அர­சி­யல்­வா­தி­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளில் ஒன்­றா­கிப் போயி­ருக்­கி­றது. அதற்கு மஹு­வா­வும் தப்­ப­வில்லை. தொலைக்­காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்ற இவர், தொகுப்­பா­ளர் தன் கருத்தை சொல்ல போதிய அவ­கா­சம் தர­வில்லை என்­கிற கோபத்­தில் தன் நடு­வி­ர­லைத் தொகுப்­பா­ள­ருக்கு காட்டி சர்ச்­சை­யில் சிக்­கி­னார் மஹுவா. சில்­ஷர் விமனா நிலை­யத்­தில் நடந்த போராட்­டத்­தில் தன்­னைத் தடுக்க முயன்ற பெண் போலீசை தடுத்து நிறுத்தி அவரை காயப்­ப­டுத்­திய வீடி­யோ­வில் வைரல் ஆனார். தற்­போது மக்­க­ள­வை­யில் பிஜே­பி­யின் கொள்­கை­களை எதிர்த்து உரை­யா­டிப் பிர­ப­ல­மா­கி­யி­ருக்­கி­றார்.