கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 4–07–19

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2019

மன்னிக்க வேண்டுகிறேன்...!

நாம் சென்­றி­ருக்­கும் ஒரு இடத்­திலே  டாய்­லெட் (toilet கழிப்­பறை) எங்­கி­ருக்­கி­றது என்று தெரி­ய­வில்லை.

எதி­ரிலே இன்­னொ­ரு­வர் வரு­கி­றார். அவ­ரி­டம் கேட்­டால் சொல்­லு­வார் என்று நினைக்­கி­றோம்.

திடீ­ரென்று எப்­படி ஒரு­வ­ரி­டம் போய் கேட்­பது.

அவ­ரு­டைய கவ­னத்­தைக் கவர வேண்டி , 'எக்ஸ்­கி­யூஸ் மீ, வேர் இஸ் த டாய்­லெட்' (Excuse me, Where is the toilet?) என்று கேட்­கி­றோம்.

இங்கே 'எக்ஸ்­கி­யூஸ் மீ'  என்­பது, உங்­க­ளு­டைய நேரத்தை எடுத்­துக்­கொள்­வ­தற்கு, உங்­க­ளு­டைய கவ­னத்­தைக் கவர்­வ­தற்கு மன்­னிக்க வேண்­டும் என்று கூறு­வ­தாக அமைந்­தது. ' வேர் இஸ் த டாய்­லெட் ' என்­றால் ' எங்­கி­ருக்­கி­றது டாய்­லெட் ' என்று பொருள்.

இந்த வாக்­கி­யத்­தின் அமைப்பு என்ன?

(யூ You நீ) எக்ஸ்­கி­யூஸ் மீ.

(நீ) என்னை மன்­னித்­து­விடு என்று பொருள். மன்­னிப்பு என்­றால் ஏதோ தவறு செய்­து­விட்­டோம் என்று பொருள் அல்ல. பிற­ரி­டம் அனா­வ­சி­ய­மா­கக் ஒரு தக­வல் கேட்­ப­தைக்­கூட குறுக்­கீ­டா­கக் கொண்டு இப்­ப­டிக் கூறப்­ப­டு­வது. (இப்­ப­டிப்­பட்ட பண்­பாட்­டி­லி­ருந்­த­வர்­கள், எப்­ப­டித்­தான் பிற­ரு­டைய சமய நம்­பிக்­கை­க­ளைக் குற்­றம் என்று கூறி அவற்றை மாற்­ற­வேண்­டும் என்ற மிகக்­கொ­டு­மை­யான எண்­ணத்­தைக் கொண்­டார்­களோ, அறி­யோம்.)

நாம் ஒரு இடத்­தில் முன்னே சென்­று­கொண்­டி­ருக்­கி­றோம். நம் வழி­யில் ஒரு­வர் நிற்­கி­றார். அவர் நகர்ந்­தால்­தான் நாம் முன்னே செல்ல முடி­யும். அவரை இடித்­துக்­கொண்­டும் அவ­ரு­டைய காலை மிதுத்­துக்­கொண்­டும் செல்­லா­மல், ''எக்ஸ்­கி­யூஸ் மீ'' (Excuse me) என்று கனி­வாக அவ­ரி­டம் சொன்­னால், அவர் இடம் கொடுக்க நாம் முன்னே செல்­ல­லாம்.

ஒரு அலு­வ­ல­கத்­திலோ வங்­கி­யிலோ கையெ­ழுத்­துப் போட­வேண்­டி­யி­ருக்­கி­றது. நம்­மி­டம் பேனா இல்­லை…­­அதை வைத்­தி­ருக்­கும் ஒரு­வ­ரி­டம் சென்று, நய­மாக, ''எக்ஸ்­கி­யூஸ் மீ…மே ஐ bபொரோ யுவர் pபென்'' (Excuse me, may I borrow your pen) என்று கேட்­க­லாம். ''எக்ஸ்­கி­யூஸ் மீ…உங்­கள் பேனாவை நான் இர­வ­லாக பெற­லாமா, இர­வல் வாங்­கிக்­க­லாமா'' என்று பொருள்.

நம்­மி­டம் பேசிக்­கொண்­டி­ருப்­ப­வர் தொடர்ந்து பேசிக்­கொண்டே இருக்­கி­றார். இடை­யில் நாம் ஒன்று கூற விரும்­பு­கி­றோம்.. ''எக்ஸ்­கி­யூஸ் மீ ஃபார் இன்­ட­ரப்­டிங்'' (Excuse me for interrupting) என்று நாம் தொடங்­கி­னால், இடை­யில் குறுக்கே பேசு­வ­தற்கு மன்­னிக்­க­வேண்­டும் என்று பொருள்.

ஒரு நல்ல ஓட்­ட­லில் சாப்­பி­டு­தற்கு ஒன்றை ஆர்­டர் செய்­கி­றோம். ஆனால் ஸர்­வர் கொடுத்­து­விட்­டுச் சென்­றதோ வேறு உணவு வகை­யாக இருக்­கி­றது. ''எக்ஸ்­யூஸ் மீ, ஐ டிட் நாட் ஆர்­டர் ஃபார் திஸ்'' (Excuse me, I did not order for this இதற்­காக நான் ஆர்­டர் செய்­ய­வில்லை) என்று கூறும் போது, கூறு­ப­வர் அல்ல, கொடுத்­த­வர் மன்­னிப்­புக் கேட்­க­வேண்­டிய நிலை­யில் இருக்­கி­றார் !

அலு­வ­ல­கத்­தில் ஒரு உயர் அதி­கா­ரிக்கு போன் அழைப்பு வந்­தி­ருக்­கி­றது. ஆனால் அவர் வேறொ­ரு­வ­ரு­டன் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார். அழைப்­பும் முக்­கி­ய­மா­ன­தா­கத் தெரி­கி­றது. அப்­போது அவ­ரி­டம்….''எக்ஸ்­கி­யூஸ் மீ ஸர்…­­தேர் இஸ் அ போன் கால் ஃபார் யூ'' (Excuse me, Sir, there is a phone call for you) என்று கூற­லாம். ''இடை­யில் வந்­த­தற்கு மன்­னிக்­க­வேண்­டும், உங்­க­ளுக்கு ஒரு போன் கால் வந்­தி­ருக்­கி­றது'' என்று பொருள்.

நாம் கூறாத ஒன்றை நாம் கூறி­னோம் என்­கி­றார் ஒரு­வர்.

அவ­ரி­ட­மி­ருந்து வேறு­ப­டு­வ­தற்கு, ''எக்ஸ்­கி­யூஸ் மீ…ஐ நெவர் செட்d ஸம்­திங் லைக் தேட்'' (Excuse me, I never said something like that) என்று கூற­லாம்… நான் அப்­ப­டி­யே­தும் கூற­வே­யில்லை என்று நாக­ரி­மா­கச் சொல்­லும் முறை இது.

பொது இடத்­தில் இருக்­கும்­போது தொண்­டை­யில்  சளி­யின் கார­ண­மாக கொஞ்­சம் கூடு­தல் ஓசை­யு­டன் செருமி விட்­டோம் என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள், அரு­கில் இருப்­ப­வர்­க­ளி­டம் 'எக்ஸ்­கி­யூஸ் மீ' என்று மன்­னிப்பு கேட்­க­லாம்.

இன்­னொ­ரு­வ­ரு­டன் பேசிக்­கொண்­டி­ருக்­கும் போது நமக்கு ஒரு போன் அழைப்பு வரு­கி­றது. யார் என்று பார்க்­கி­றோம். உடனே பேசி­யாக வேண்­டிய அழைப்­பாக உள்­ளது. அத­னால், 'எக்ஸ்­கி­யூஸ் மீ, ஐ ஹேவ் டு டேக் திஸ் call' என்று கூறி அழைப்பை ஏற்­க­லாம்.

வேறொ­ரு­வ­ருக்கு வந்த கடி­தத்­தைத் தவ­று­த­லாக பிரித்து விட்­டோம் என்­றால்,  ''பிளீஸ் எக்ஸ்­கி­யூஸ் மீ ஃபார் ஓபெ­னிங் யுவர் லெட்­டர் பை மிஸ்­டேக்'' (Please excuse me for opening you letter by mistake) என்று கூற­வேண்­டும். தவ­று­த­லாக உங்­கள் கடி­தத்­தைப் பிரித்­த­தற்கு என்னை மன்­னி­யுங்­கள் என்று பொருள்.

ஒரு பெரி­ய­வர் வய­துக்­குத் தகாத சிறு தவறை செய்­து­விட்­டார். அவ­ரு­டைய வய­தைக் கருதி பாதிக்­கப்­பட்­ட­வ­ரும் மன்­னித்­து­விட்­டார் என்று வைத்­துக்­கொள்­ளுங்­கள். ''த ஓல்ட் மேன் வாஸ் எக்ஸ்­கி­யூஸ்ட் பிகாஸ் ஆஃப் ஹிஸ் ஏஜ்'' (The old man was excused because of his age) என்று கூற­லாம்.

எக்ஸ்­கி­யூஸ் என்ற சொல்லை பொறுத்­த­வரை அதற்கு வேறு சில பொருள்­க­ளும் உள்­ளன.

ஹீ வாஸ் லுக்­கிங் ஃபார் ஆன் எக்ஸ்­கி­யூஸ் நாட் டு அட்­டென்ட் த மீட்­டிங். He was looking for an excuse not to attend the meeting. அந்த மீட்­டிங்­கில் கலந்­து­கொ­ளள்­ளா­மல் இருக்க அவன் ஒரு சாக்­குப்­போக்­கைத்  தேடிக்­கொண்­டி­ருந்­தான் என்று பொருள். இந்த இடத்­தில் எக்ஸ்­கி­யூஸ் என்ற சொல்­லுக்கு சாக்­கு­போக்கு என்று பொருள்.

''ஐ வான்ட் dத வர்க் டு bபீ கம்ப்­ளீ­டெdட் . ஐ dடோன்ட் வான்ட் டு ஹியர் யுவர் எக்ஸ்­கி­யூ­ஸஸ்''. I want the work to be completed. I don’t want to hear your excuses. எனக்கு வேலை செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டும். உன்­னு­டைய சாக்­குப்­போக்­கு­க­ளைக் கேட்க நான் விரும்­ப­வில்லை.

ஒரு கடமை அல்­லது பொறுப்­பி­லி­ருந்து ஒரு­வர் விடு­விக்­கப்­பட்­டார் என்­ப­தை­யும் எக்ஸ்­கி­யூஸ் குறிக்­கி­றது.

த பீ.டி. டீச்­சர் எக்ஸ்­கி­யூஸ்ட் மணி ஃபிரம் ஃபுட்­பால் பிராக்­டிஸ். The PT teacher excused him from taking part in the football practice.

கால்­பந்து பயிற்­சி­யில் பங்­கு­கொள்­ளா­மல் இருக்க பீ.டி. டீச்­சர் அவ­னுக்கு அனு­மதி அளித்­தார் என்று பொருள். அதா­வது கால்­பந்து பயிற்­சி­யி­லி­ருந்து விலக்­குக்­கொ­டுத்­தார் என்று பொருள். ஆனால் ஆங்­கில மொழி பயிற்­சி­யில் எந்த வித விலக்­கை­யும் எதிர்­பார்க்­கா­மல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வாருங்­கள். வெற்றி நிச்­ச­யம்.

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in