பிசினஸ் : தொழில்வளர்ச்சிக்கு முக்கிய பிரமுகர்களின் தொடர்பு வேண்டும்!

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2019

தொழிலைப் பொருத்தவரை ஒருங்கிணைந்திருப்பது தவிர்க்க முடியாததும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். நீங்கள் தனித்திருக்க விரும்பும் புத்தகப்பிரியராக இருப்பினும் உங்களது வட்டத்தில் இருந்து வெளியேறி மக்களுடன் இணைந்திருப்பது அவசியம். ஏனெனில் சக நண்பர்கள் அல்லது துறையில் முன்னணியில் இருக்கும் தலைவர்களிடமிருந்து அறிவைப் பெறுவதற்கு இதுவே சிறந்த வழி. இந்த இணைப்பானது நீங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல உதவும். இப்படிப்பட்ட இணைப்புகளை நீங்கள் உருவாக்கிக்கொண்டால் உங்களுக்கு உதவி தேவைப்படும்போது இவர்களை அணுகலாம். முன்னணித் தலைவர்களுடன் பேசினால் அவர்களை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும் என நீங்கள் நினைக்கலாம் ஆனால் உண்மை அதற்கு நேர் எதிரானதாகும். பெரும்பாலான தலைவர்கள் பிறருடன் பேசி தங்களது எண்ணங்களையும் அறிவையும் பகிர்ந்துகொண்டு உதவ மகிழ்ச்சியாகவே முன்வருவார்கள். முன்னணி தலைவர்களுடன் தொழில் ரீதியான இணைப்புகளை உருவாக்குவதற்கான ஏழு வழிகள் இடம்பெற்றுள்ளன. மக்களுடன் அர்த்தமுள்ள விதத்தில் ஆதரவுடன் கூடிய உறவுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள இவை உதவும்.

டிவிட்­ட­ரில் தீவி­ர­மாக செயல்­ப­டுங்­கள்...

துறை­யைச் சேர்ந்த முன்­ன­ணித் தலை­வர்­க­ளு­டன் தொழில் ரீதி­யான இணைப்பை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள சமூக ஊட­கம் சிறந்த வழி­யா­கும். டிவிட்­டர் என்­பது பிர­ப­ல­மா­ன­வர்­கள், இளம் வய­தி­னர் போன்­றோ­ருக்­கான பகுதி என நினைப்­ப­வ­ராக நீங்­கள் இருந்­தால் ஒரு செய்­தியை நினை­வில் கொள்­ளுங்­கள்.

பெரும்­பா­லான தலை­வர்­கள் மக்­க­ளு­டன் இணை­ய­வும் அவர்­க­ளி­டையே தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வும் உத­வும் என்­கிற கார­ணத்­தி­னா­லேயே டிவிட்­ட­ரில் தீவி­ர­மாக உள்­ள­னர்.

எனவே இந்த தலை­வர்­களை டிவிட்­ட­ரில் பின் தொடர்ந்து அவர்­க­ளது பதி­வு­களை தொடர்ந்து கவ­னிக்­க­வும். அர்த்­த­முள்ள கருத்­துக்­க­ளு­டன் அவர்­க­ளது பதி­விற்கு பதி­ல­ளி­யுங்­கள். கேள்வி கேட்­ப­தற்கோ ஒன்­றி­ணை­வ­தற்­காக நேர­டி­யான தக­வல் அனுப்­பு­வ­தற்கோ தயங்­க­வேண்­டாம். உங்­க­ளது எல்­லையை கடந்­து­வி­டா­மல் பார்த்­துக்­கொண்­டால் போதும். அமை­தி­யா­க­வும் புரொ­ப­ஷ­ன­லா­க­வும் நடந்­து­கொள்­ளுங்­கள்.

லிங்க்ட் இன் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளுங்­கள்

உங்­க­ளது லிங்க்ட் இன் சுய­வி­வ­ரங்­களை கடை­சி­யாக எப்­போது அப்­டேட் செய்­தீர்­கள்? தொழில் ரீதி­யான இணைப்­பு­களை உரு­வாக்­கிக்­கொள்ள இந்த தளத்தை நீங்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தில் ஆர்­வ­மாக இருந்­தீர்­க­ளா­னால் உங்­க­ளது சுய­வி­வ­ரங்­கள் தொடர்ந்து அப்­டேட் செய்­யப்­ப­டு­வதை உறு­தி­செய்­து­கொள்­ளுங்­கள்.

உங்­க­ளுக்கு பொருத்­த­மான குழுக்­க­ளில் இணைந்­து­கொள்­ளுங்­கள். விவா­தங்­க­ளில் அர்த்­த­முள்ள வகை­யில் பங்­கேற்­க­வும். பய­னுள்ள வளங்­களை பகிர்ந்­து­கொள்­ளுங்­கள். மற்ற பதி­வு­க­ளுக்கு விருப்­பம் தெரி­வித்து கருத்­துக்­களை பதிவு செய்­ய­லாம். உங்­க­ளுக்கு தொழி­லில் உள்ள ஈடு­பாட்டை காட்­டு­வ­தற்கு இது சிறந்த வழி­யா­கும்.

கருத்­த­ரங்­கு­கள் வாயி­லாக

அதிக பய­ன­டை­யுங்­கள்

நீங்­கள் எந்த துறை­யைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தா­லும் அது தொடர்­பான வர்த்­தக நிகழ்ச்­சி­கள் அல்­லது கருத்­த­ரங்­கு­கள் கட்­டா­யம் இருக்­கும். யார் பங்­கேற்­கி­றார்­கள், யார் உரை­யாற்­று­கி­றார்­கள் போன்ற தொடர்­பு­டைய பட்­டி­யலை உரு­வாக்­கிக்­கொள்­ளுங்­கள். எதில் பங்­கேற்­க­லாம் என தீர்­மா­னித்­துக்­கொள்­ளுங்­கள்.

அதி­க­ளவு பட்­ட­றை­க­ளி­லும் அமர்­வு­க­ளி­லும் பங்­கேற்­க­லாம். சிந்­த­னை­யைத் தூண்­டும் வகை­யி­லான கேள்­வி­க­ளைக் கேட்­கத் தயங்­க­வேண்­டாம். முன்­ன­ணித் தலை­வர்­களை சந்­திக்­க­வும் இணைப்பை ஏற்­ப­டுத்­திக் கொள்­ள­வும் கருத்­த­ரங்­கு­கள் சிறப்­பான இட­மா­கும்.

திட்­டம் குறித்த ஒரு குறு­கிய விளக்­கத்­தைத் தயார்­நி­லை­யில் வைத்­தி­ருக்­க­வேண்­டும். செல்­வாக்­குள்­ள­வர்­க­ளைச் சந்­திக்க நேரும்­போது பயன்­ப­டும். அர்த்­த­முள்ள உரை­யா­ட­லில் ஈடு­பட்டு அடுத்­த­கட்ட சந்­திப்­பை­யும் திட்­ட­மிட்­டுக்­கொள்­ள­லாம்.

உங்­க­ளது பிசி­னஸ் கார்டை கொடுக்க மறக்­க­வேண்­டாம். பேப்­ப­ரால் தயா­ரிக்­கப்­பட்ட கார்டை காட்­டி­லும் உலோ­கத்­தால் தயா­ரிக்­கப்­பட்ட கார்ட் புரொ­ப­ஷ­ன­லாக இருக்­கும். நீங்­கள் சந்­திக்­கும் நப­ரி­டம் நிச்­ச­யம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். உங்­களை நினை­வில் வைத்­துக்­கொள்ள இது ஒரு சிறப்­பான வழி. மை மெட்­டல் பிசி­னல் கார்­டில் பல வகை­யான கார்­டு­கள் உள்­ளது. இது நிச்­ச­யம் உங்­களை தனித்­துக் காட்­டும்.

மீட் அப், விஸ்­டேஜ் அல்­லது இண்டி ஹேக்­கர்ஸ் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளுங்­கள்

மீட் அப், விஸ்­டேஜ் அல்­லது இண்டி ஹேக்­கர்ஸ் போன்­றவை இணைப்­பு­களை உரு­வாக்­கிக்­கொள்ள சிறப்­பான பகுதி என்­ப­தால் இந்த தளங்­க­ளில் இணைந்­து­கொள்­ளுங்­கள்

மீட் அப் - ஒத்த சிந்­த­னை­யு­டைய மக்­கள் அடங்­கிய குழுக்­க­ளு­டன் இணைந்து தொடர்பு ஏற்­ப­டுத்­திக்­கொள்ள மீட் அப் தளம் உத­வு­கி­றது. இந்த நிகழ்­வு­க­ளில் மக்­கள் ஒரு­வரை ஒரு­வர் சந்­தித்து ஆர்­வ­முள்ள பகு­தி­கள் குறித்து விவா­தித்­துக்­கொள்­ள­லாம்.

விஸ்­டேஜ் - பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த முன்­ன­ணித் தலை­வர்­களை சந்­திக்­க­வும் அவர்­க­ளி­ட­மி­ருந்து கற்­க­வும் உத­வும் தள­மா­கும். நீங்­கள் உற்­சா­கத்­து­டன் தீவி­ர­மாக பங்­கேற்­றால் மட்­டுமே மக்­க­ளால் உங்­களை நினை­வில் நிறுத்­திக்­கொள்ள முடி­யும்.

இண்டி ஹேக்­கர்ஸ் - வெவ்­வேறு துறை சார்ந்த தொழில்­மு­னை­வோர் தங்­க­ளது பய­ணம் குறித்து பகிர்ந்­து­கொள்ள உத­வு­கி­றது. இவை திற­மை­யாக தொழில் நடத்­து­வது குறித்த மதிப்­பு­மிக்க நுண்­ண­றிவை வழங்­கு­வ­து­டன் மதிப்­பு­மிக்க தொடர்­பு­க­ளை­யும் உரு­வாக்­கித் தரு­கி­றது.

எப்­போ­தும் மதிப்­பைக் கூட்ட

முயற்சி செய்­யுங்­கள்

முன்­ன­ணித் தலை­வர்­களை சந்­திக்­கும் வாய்ப்பு கிடைத்­தால் அர்த்­த­முள்ள விதத்­தில் நீண்ட நாள் உறவை உரு­வாக்­கிக்­கொள்­ள­வேண்­டும் என்­பதே முக்­கி­யம் என்­பதை நினை­வில் கொள்­ளுங்­கள். செல்­வாக்கு நிறைந்­த­வர்­கள் தின­மும் பல­ரைச் சந்­திப்­பார்­கள். அவர்­க­ளு­ட­னான உங்­க­ளது சந்­திப்பு உங்­களை நினை­வில் கொள்­ளும் விதத்­தில் அமை­ய­வேண்­டும்.

அவர்­க­ளைப் பற்றி போது­மான தக­வல்­களை சேக­ரித்­துக்­கொள்­ளுங்­கள். அவர்­க­ளு­ட­னான உரை­யா­ட­லின்­போது இதை நீங்­கள் பயன்­ப­டுத்­த­லாம். பணி­வாக நடந்­து­கொள்­ளுங்­கள். முற்­றி­லு­மாக உங்­களை மட்­டுமே கவ­னத்­தில் கொண்டு செயல்­ப­ட­வேண்­டாம். கேள்வி கேட்­க­லாம். அறி­வைப் பெற முயற்­சிக்­க­லாம். அவர்­க­ளுக்கு நீங்­கள் எவ்­வாறு உத­வ­லாம் என்­ப­தை­யும் கருத்­தில் கொள்­ள­லாம்.

தொடர்ந்து தொடர்­பில் இருக்­க­வும்

சில முன்­ன­ணித் தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­தும் அவர்­க­ளு­டன் தொடர்ந்து தொடர்­பில் இருப்­பதை உறு­தி­செய்­து­கொள்­ள­வும். அவர்­க­ளது ஆர்­வத்தை அறிந்­து­கொண்டு உங்­க­ளது உரை­யா­டல் அதைச் சார்ந்தே இருக்­கு­மாறு பார்த்­துக்­கொள்­ள­வும்.

contactually அல்­லது Refer போன்ற செய­லி­களை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம். அதில் உங்­க­ளது தொடர்­பு­களை சேமித்­துக்­கொள்­ள­லாம். நினை­வூட்­டு­வ­தற்­காக நீங்­கள் பதிவு செய்­தி­ருக்­கும் தரு­ணத்­தில் இந்த செயலி குறிப்­பிட்ட நபரை தொடர்பு கொள்ள நினை­வூட்­டும்.

தனிப்­பட்ட விதத்­தில் விடு­முறை கார்­டு­கள் அனுப்­ப­லாம். கைக­ளால் எழு­தப்­பட்ட குறிப்­பு­களே எப்­போ­தும் சிறந்­தது.

ஏற்­க­னவே அறி­மு­க­மா­னோ­ரின் தொடர்பை பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள்

உங்­க­ளுக்கு ஏற்­க­னவே அறி­மு­க­மான நபர்­க­ளு­டன் தொடர்ந்து இணைப்­பில் இருப்­பது சிறப்­பான வணிக தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும். உங்­க­ளது துறை சாராத நபர்­க­ளு­ட­னும் ஒன்­றி­ணைய இந்த குழுக்­கள் உத­வும்.

வெவ்­வேறு பாடப்­பி­ரி­வு­க­ளில் பட்­டம் பெற்­ற­வர்­கள் தங்­க­ளது துறை­யில் முன்­ன­ணி­யில் இருக்­கும் தலை­வர்­கள் போன்­றோர் இதில் அடங்­கு­வர். இத்­த­கைய குழுக்­கள் நீங்­கள் கற்­ப­தற்கு வாய்ப்­ப­ளிப்­ப­து­டன் மதிப்­பு­மிக்க தொடர்­பு­களை உரு­வாக்­கிக்­கொள்­ள­வும் உத­வும்.

இறுதி கருத்து

இந்த இணைப்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளும்­போது முன்­ன­ணித் தலை­வர்­க­ளும் மனி­தர்­களே என்­ப­து­தான் நீங்­கள் நினை­வில் வைத்­துக்­கொள்ள வேண்­டிய முக்­கிய விஷ­யம். அவர்­க­ளும் நம்­மைப் போன்­ற­வர்­களே. அவர்­க­ளது பத­வி­யைத் தாண்டி அவர்­க­ளி­டம் சக மனி­தர்­க­ளைப் போன்றே நடத்­த­வேண்­டும்.

அவர்­க­ளுக்­கும் விருப்­பம் உள்ள விஷ­யங்­களை பகிர்ந்­து­கொள்­ளுங்­கள். தனிப்­பட்ட அக்­கறை எடுத்­துக்­கொண்டு இணைப்­பைத் தொட­ர­லாம். எண்­ணங்­களை குறுக்­கிக்­கொள்ள வேண்­டாம். அதற்கு மாறாக பெருந்­தன்­மை­யு­டன் நடந்­து­கொண்டு அவர்­க­ளுக்கு நீங்­கள் எத்­த­கைய வழி­க­ளில் உத­வ­லாம் என ஆரா­யத் துவங்­குங்­கள்.