சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 1– 7–19

பதிவு செய்த நாள் : 01 ஜூலை 2019

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

சென்ற வாரம் எழு­தும் போது கூறி இருந்­தோம், அடுத்த வாரம் சந்­தை­கள் மேலும் கீழு­மா­க­வும் இருக்­க­லாம் இல்லை கூட­வும் செய்­ய­லாம் என்று. நாம் கூறி­யி­ருந்­தது சரி­யாக இருந்­தது. சந்­தை­கள் மேலும் கீழு­மாக இருந்­தா­லும், வார இறு­தி­யில் கூடியே முடி­வ­டைந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை 191 புள்­ளி­கள் குறைந்து 39394 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. தேசி­ய­பங்­குச்­சந்தை 52 புள்­ளி­கள் குறைந்து 11788 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. சென்ற வாரத்தை விட இந்த வாரம் சுமார் 200 புள்­ளி­கள் கூடி மும்பை பங்­குச் சந்தை முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது.

முந்­தைய மூன்று வாரங்­க­ளாக சந்­தை­கள் வார அள­வில் குறைந்தே  இருந்­தது. ஆனால் இந்த வார இறு­தி­யில் மும்பை பங்­குச் சந்தை சுமார் 200 புள்­ளி­கள் கூடி முடி­வ­டைந்­தது ஒரு ஆறு­த­லான விஷ­யம்.

என்­பி­எப்சி கம்­பெ­னி­கள்

வாங்­கிய கடனை கொடுக்க முடி­யா­மல் பல கம்­பெ­னி­கள் குறிப்­பாக என்­பி­எப்சி கம்­பெ­னி­கள் தள்­ளா­டு­வது தெள்ள தெளி­வாக தெரி­கி­றது. டிஎச்­எப்­எல் கம்­பெ­னியை அடுத்து காக்ஸ் அண்டு கிங்ஸ் என்ற டிரா­வல் கம்­பெ­னி­யும் தாங்­கள் கமர்­ஷி­யல் பேப்­பர் மூல­மாக வாங்­கி­யி­ருந்த ரூபாய் 150 கோடியை கொடுக்க முடி­யா­மல் 50 கோடி ரூபாய் வரை­தான் கொடுத்­துள்­ளது.

இத­னால் பல கம்­பெ­னி­க­ளில் ரேட்­டிங் குறைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­மால், எடில்­வி­யஸ் ஆகிய கம்­பெ­னி­க­ளின் ரேட்­டிங் குறைக்­கப்­பட்­டுள்­ளது முக்­கி­ய­மான செய்­தி­யா­கும்.

முன்­பெல்­லாம் என்­பி­எப்சி கம்­பெ­னி­கள் தங்­க­ளுக்கு பணம் தேவை என்­றால் மியூச்­சு­வல் பண்­டில் சென்று டெப்ட் ஃபண்­டில் பணம் பெற்­றுக் கொள்­வார்­கள். இது அவ­ச­ரத் தேவை­க­ளுக்கு அவர்­க­ளுக்கு மிக உத­வி­யாக இருந்­தது. ஆனால் தற்­போது செபி, மியூச்­சு­வல் ஃபண்­டு­க­ளில் என்­பி­எப்சி கம்­பெ­னி­கள் டெப்ட் பண்­டு­கள் பணம் வாங்­கு­வதை மிக­வும் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளது. இத­னால் என்­பி­எப்சி  கம்­பெ­னி­க­ளுக்கு தாரா­ள­மாக கிடைத்து வந்த பண  உத­வி­கள் தற்­போது குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இது அவர்­க­ளுக்கு ஒரு மிகப்­பெ­ரிய அடி­யா­கும். அதே சம­யம் பைனான்ஸ் கம்­பெ­னி­க­ளில் பெரிய கம்­பெ­னி­கள் தங்­க­ளது தேவை­களை கேபி­டல் மூல­மாக பண்டு ரைசிங் செய்து வரு­கின்­றன.

நமது அட்­வைஸ் என்­ன­வென்­றால் பைனான்ஸ் கம்­பெ­னி­க­ளின் (அதா­வது என்­பி­எப்சி கம்­பெ­னி­க­ளில்) பங்­கு­க­ளில் முத­லீ­டு­களை சிறிது காலத்­திற்கு நிறுத்தி வைக்­க­வும்.

இந்­தியா மார்ட் இண்­டர்­மெஷ் புதிய வெளி­யீடு

சமீ­பத்­தில் வெளி­வந்த இந்­தியா மார்ட் இண்­டர்­மெஷ் என்ற கம்­பெ­னி­யின் புதிய வெளி­யீடு அப­ரி­த­மாக செலுத்­தப்­பட்டு முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது மொத்­த­மாக இந்த கம்­பெ­னி­யின் வெளி­யீடு 36 தட­வை­கள் செலுத்­தப்­பட்டு முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது இதில் சிறிய முத­லீட்­டா­ளர்­க­ளின் பகுதி 14 தட­வை­க­ளும், அங்கு வேலை செய்­யும் எம்­ளா­யீஸ்­க­ளின் பகுதி ஆறு தட­வை­யும் செலுத்­தப்­பட்டு முடிந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. சாதா­ர­ண­மாக வேலை செய்­ப­வர்­கள் பகுதி ஒரு மடங்கு அல்­லது இரண்டு மடங்கு செலுத்­தப்­பட்டு முடி­வ­டை­யும். ஆனால் இந்த கம்­பெ­னி­யின் எம்ப்­ளா­யீஸ் கோட்டா ஆறு தட­வை­கள் செலுத்­தப்­பட்டு முடிந்­தி­ருப்­பது இது ஒரு சிறந்த கம்­பெனி என்­பதை குறிக்­கி­றது.

வரும் வாரம் அலாட்­மெண்ட் வெளி­வ­ரும். உங்­க­ளுக்கு கிடைத்­தி­ருந்­தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்­பு­கள் இருக்­கின்­றது.

என்ன பங்­கு­கள் வாங்­க­லாம்?

அக்­சிஸ் பாங்க், ஹெக்­ஸா­வேர் டெக்­னா­லஜி, டாக்­டர் ரெட்­டீஸ் லாப்ஸ் ஆகிய பங்­கு­கள் உங்­கள் தொகுப்­பில் நீண்ட கால அடிப்­ப­டை­யில் இருக்­க­லாம்.

மழை

மழை கடந்த நான்கு வாரங்­க­ளாக குறை­வாக இருக்­கி­றது. சென்ற வாரம் 43 சத­வீ­தம் டெபி­சிட்­டாக இருந்­தது இந்த வாரம் 36 சத­வீ­த­மாக குறைந்து இருக்­கி­றது. இருந்­தா­லும் குறைவு குறைவு தான்.

மும்­பை­யில் சாதா­ர­ண­மாக பத்­தாம் தேதி அள­வில் வரும் மழை தற்­போது 27, 28ம் தேதி­க­ளில் தான் வந்­தி­ருக்­கி­றது. வரும் வாரங்­க­ளில் நன்கு பெய்­யும் மழை தான் நாட்­டை­யும் மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருக்­கும், சந்­தை­க­ளை­யும் மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருக்­கும்

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

அடுத்த வாரம் மிக­வும் முக்­கி­ய­மான வாரம். மத்­திய பட்­ஜெட் சமர்­பிக்­கப்­பட இருக்­கி­றது. இதில் இன்­பிரா திட்­டங்­க­ளுக்கு அதிக பண்­டு­கள் ஒதுக்­கப்­பட்­டால் அது சந்­தை­களை மலர்ச்­சி­யாக்­கும். காத்­தி­ருப்­போம்.

அடுத்த வாரம் மேலும், கீழு­மாக இருக்க வாய்ப்­பு­கள் அதி­கம். சந்­தை­கள் குறை­யும் போது சிறிது சிறி­தாக முத­லீடு செய்து வாருங்­கள்.


உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com