ஸ்டார்ட் அப் இந்­தியா திட்­டம்: முன்­னேற்­றம் எப்­படி உள்­ளது...

பதிவு செய்த நாள் : 01 ஜூலை 2019

ஸ்டார்ட் அப் இந்­தியா திட்­டம் 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

தற்­போது 3 வரு­டம் 6 மாதம் ஆகி­றது. இதன் முக்­கிய நோக்­கம் தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது, அதன்­மூ­லம் வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது. 2016 ஆம் ஆண்டு இந்த திட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்ட பிறகு இது­வரை 187,004 பேருக்கு நேரடி வேலை வாய்ப்­பு­க­ளை­யும், கிட்­டத்­தட்ட 3 லட்­சத்து 72 ஆயி­ரம் பேருக்கு மறை­முக வேலை வாய்ப்­பு­க­ளை­யும் உரு­வாக்கி உள்­ளது என அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­காக அர­சாங்­கம் எவ்­வ­ளவு செல­வ­ழித்­துள்­ளது? பத்­தா­யி­ரம் கோடி ஒதுக்கி ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்த ஸ்டார்ட் அப் இந்­தியா திட்­டத்­தின் கீழ் இது­வரை 2500 கோடி ரூபாய் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

2016ஆம் வரு­டத்­திற்கு பிறகு 18,861 ஸ்டார்ட் அப்-­கள் இது­வரை அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. 2019 ஆம் வரு­டம் மே மாதம் மட்­டும் 814 ஸ்டார்ட் அப்-­கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன என்­பது குறிப்­பி­ட­தக்­கது. அதா­வது ஒரு மணி நேரத்­திற்கு ஒரு ஸ்டார்ட்­அப் என்ற  விகி­தத்­தில் அங்­கீ­கா­ரம் செய்­யப்­பட்டு வரு­கி­றது.

சிட்பி அழைக்­கி­றது

சுமால் இண்­டஸ்­டீ­ரீஸ் டெவ­லப்­மெண்ட் பாங்க் ஆப் இந்­தியா என அழைக்­கப்­ப­டும் சிட்பி (SIDBI) சிறிய ஸ்டார்ட் அப்­களை ஊக்­கு­விக்­கும் விதத்­தில் ஒரு போட்­டிக்கு அழைத்­துள்­ளது.

எந்­தெந்த கம்­பெ­னி­கள் இந்த போட்­டி­யில் கலந்து கொள்­ள­லாம்?

புது­மை­யான யோச­னை­களை வணிக வடி­வ­மாக்கி, நிலை­யான பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு வழி வகுப்­பது, அதி­கப்­ப­டி­யான வேலை­வாய்ப்­பு­களை ர்உரு­வாக்­கு­வது தான் தொடக்க நிலை வணிக இந்­தியா திட்­டத்­தின் (ஸ்டார்ட் அப் ) முக்­கிய நோக்­க­மா­கும். அப்­படி ஆரம்­பிக்­கப்­ப­டும் கம்­பெனி

* பார்ட்­னர்­ஷிப், லிமி­டெட் லய­பி­லிட்டி பார்ட்­னர்­ஷிப், பிரை­வேட் லிமி­டெட் கம்­பெனி ஆக இருக்க வேண்­டும்.

*      கம்­பெனி லாபம் 1 கோடிக்கு மேலா­க­வும், 10 கோடிக்­கும் கீழா­க­வும் இருக்க வேண்­டும்

*      சீட் பண்­டிங், ஏஞ்­சல் பண்­டிங் 1 கோடி முதல் 5 கோடி­யைத் தாண்டி பெற்­றி­ருக்­கக் கூடாது.

*      கம்­பெனி நடப்­பில் ஒரு வரு­டத்­திற்கு மேலா­க­வும், 3 வரு­டத்­திற்­குள்­ளா­ன­தா­க­வும் இருக்க வேண்­டும்.

*     பழைய கம்­பெ­னியை பிரித்து ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்க கூடாது.

இந்த கண்­டி­ஷன் களுக்கு கீழ் நீங்­கள் வந்­தால் நீங்­கள் இந்த போட்­டி­யில் கலந்து கொள்­ள­லாம்.

போட்­டி­யில் கலந்து கொள்­வ­த­னால் என்ன பயன்?

கலந்து கொள்­ளும் கம்­பெ­னி­க­ளில் இருந்து 25 ஸ்டார்ட்­அப் கம்­பெ­னி­கள் தேர்வு செய்­யப்­பட்டு சிட்­பி­யின் முத­லீட்­டா­ளர்­கள் தினத்­தன்று (இன்­வஸ்­டர்ஸ் டே) அன்று நேர­டி­யாக அழைக்­கப்­பட்டு அவர்­க­ளில் தகுதி உள்­ள­வர்­க­ளுக்கு மேலும் முத­லீ­டு­கள் வழங்­கப்­ப­டும்.

இதற்கு விண்­ணப்­பிக்க கடைசி தேதி ஜூலை மாதம் 7ம் தேதி ஆகும்.

விண்­ண­பிக்க வேண்­டிய இணை­ய­த­ளம் https://www.sidbi.in


https://www.freshtohome.com

ஆடு,கோழி, மீன் கறியை வாங்­கச் செல்­லும் போது  அந்த இடம் சுகா­தா­ர­மாக இருக்­கி­றதா என்­பதை நாம் பல­முறை பார்ப்­போம். சுகா­தா­ர­மாக இல்லை என்­றால் அந்த இடத்­தில் வாங்­கா­மல் அடுத்த கடைக்கு செல்ல நேரி­டும். இதற்­கா­கவே பல கடை­கள் ஏறி இறங்­கிய அனு­ப­வம் பல­ருக்கு இருக்­கும். இவற்றை சுகா­தா­ர­மாக தர வேண்­டும், அது­வும் ஆன்­லை­னில் தர­வேண்­டும், விற்­ப­வர்­க­ளுக்­கும் நல்ல விலை கிடைக்க வேண்­டும், வாங்­கு­வ­ப­வர்­க­ளுக்­கும் நல்ல விலை கிடைக்க வேண்­டும் என்ற எண்­ணத்­தில் ஆரம்­பிக்­கப்­பட்­டது தான் "பிரஷ் டூ ஹோம்" என்ற இணை­யத்­த­ளம். மீன்­க­ளில் மட்­டும் 50 வகைக்­கும் மேல் வைத்­துள்­ளார்­கள்.

பெங்­க­ளூரை தலை­மை­யி­ட­மா­கக் கொண்­டுள்ள இந்த கம்­பெனி தற்­போது சென்னை,மும்பை, கேர­ளா­வில் திரு­வ­னந்­த­பு­ரம், கோழிக்­கோடு, திருச்­சூர் மற்­றும் புனே, டெல்லி ஆகிய இடங்­க­ளி­லும், துபா­யி­லும் தங்­க­ளது ஆன்­லைன் விற்­ப­னையை செய்து வரு­கி­றது.  தற்­ச­ம­யம் ஒரு நாளைக்கு 8000 ஆர்­டர்­கள் வரை இவர்­க­ளுக்கு வரு­கி­றது,  பத்­தா­யி­ரம் டன் ஆடு, கோழி, மீன் கறியை விற்­பனை செய்து வரு­கி­றார்­கள்.