ஏற்­று­மதி உல­கம்: அமெ­ரிக்கா சீனா வர்த்­தக போர்

பதிவு செய்த நாள் : 01 ஜூலை 2019

அமெ­ரிக்­கா­வும் சீனா­வும்  அன்று வர்த்­தக பேச்­சு­வார்த்­தை­களை தொடர ஆரம்­பிக்­கும் என சனிக்­கி­ழ­மை­அ­றி­வித்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வின் ஏற்­று­ம­திக்கு புதிய வரி­கள் இனி விதிக்­கப்­பட மாட்­டாது என சீனா அறி­வித்­துள்­ளது. பேச்­சு­வார்த்தை தொட­ரும், ஏற்­று­ம­திக்கு புதிய வரி­கள் இல்லை என சீன அரசு அறி­வித்­துள்­ளது ஆகிய இந்த இரண்­டை­யும் நல்ல திருப்­பங்­கள் ஆக எடுத்­துக் கொள்­ள­லாம். அமெ­ரிக்கா சீனா இரண்டு நாடு­க­ளும் தங்­கள் பிடி­வா­தங்­களை சிறிது தளர்த்தி உள்­ளன.

இதற்­கி­டை­யில் வெள்­ளி­யன்று சீனா அறி­வித்­துள்­ளது இன்­னொரு பாம் ஆகும். அதா­வது அமெ­ரிக்கா ஈரான் மீது தடை­கள் விதித்­துள்­ளது தெரிந்­ததே. இத­னால் ஈரான் நாட்­டி­லி­ருந்து கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செய்­வது எல்லா நாடு­க­ளுக்­கும் தடை­யாக இருந்­தது. ஆனால் சீனா அந்த தடை­க­ளை­யும் மீறி இறக்­கு­மதி செய்­வோம் என்று அறி­வித்­துள்­ளது. கார­ணம்  கச்சா எண்­ணெய் எங்­க­ளுக்கு மிக­வும் முக்­கி­யம், மக்­க­ளு­டைய புட் செக்­யூ­ரிட்­டியை மிக­வும் முக்­கி­யம், ஆத­லால் இறக்­கு­மதி செய்­கி­றோம் என்று கூறு­கி­றது சீனா.  இதை தொடர்ந்து இன்­னும் சில நாடு­க­ளும் இவ்­வாறு செய்­வோம் என்று கூற­லாம். அமெ­ரிக்க இதை எப்­படி எடுத்­துக் கொள்ள போகி­றது, அவர்­க­ளின் ரீயா­க்ஷன் எப்­படி இருக்­கப் போகி­றது என்று பார்க்க வேண்­டும், அது மிக­வும் முக்­கி­யம்.

இந்­தியா, அமெ­ரிக்க வர்த்­தக போரும் வலுத்து வரு­கி­றது. ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் இறக்­கு­மதி, ஏற்­று­மதி வரி­களை விதித்­துள்­ளன.

வரும் வாரங்­க­ளில் அமெ­ரிக்க, சீனா பேச்சு வார்த்­தை­க­ளில் இதற்கு விடை கிடைக்­க­லாம்.

  இறக்­கு­மதி

இது­வரை பைன்  மரங்­களை (தமி­ழில் தேவ­தாரு என அழைக்­கப்­ப­டும் மரம்) நியூ­சி­லாந்து நாட்­டில் இருந்து தான் இறக்­கு­மதி செய்து வந்­தி­ருக்­கி­றோம். தற்­போது நாட்­டி­லி­ருந்த குஜ­ராத்­தில் இருக்­கும் கண்ட்லா துறை­மு­கத்­திற்கு உரு­குவே நாட்­டி­லி­ருந்து பைன் மரங்­கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது முதல்­மு­றை­யாக.

இந்த கன்­சைன்­மெண்ட் மூலம் 35 ஆயி­ரத்து 512 கியூ­பிக் மீட்­டர் பைன் மரங்­கள் இறக்­கு­மதி  செய்­யப்­பட்­டுள்­ளது.

நியூ­சி­லாந்­தில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டும் பைன் மரங்­கள் ஒரு க்யூபிக் மீட்­டர் அமெ­ரிக்க டாலார் 165 முதல் 170 விலை இருக்­கி­றது. ஆனால் தற்­போது உரு­குவே நாட்­டில் இருந்து இறக்­கு­மதி செய்­யப் பட்­டி­ருக்­கும் பைன் மரங்­கள் ஒரு கியூ­பிக் மீட்­டர்  அமெ­ரிக்க டாலர் 145 ஆகத்­தான்  உள்­ளது. இந்த விலை வித்­தி­யா­சத்­தால் இந்­தி­யா­வில் பைன் மரத்­திற்­கான  விலை குறை­யும்.

பைன் மரம் என்­பது தமி­ழில் தேவ­தாரு என அழைக்­கப்­ப­டும். இது சாப்ட் மரம் ஆகும். ப்ளஷ் டோர், ப்ளைவுட், பாக்­கே­ஜிங் ஆகி­ய­வை­க­ளுக்கு உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

ஒவ்­வொரு மாத­மும் 3 லட்­சம் கியூ­பிக் மீட்­டர் மரம் கண்ட்லா துறை­மு­கம் மூல­மாக இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது. இதில் பாதி அளவு பைன் வுட் தான் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது.

 இந்­தியா – இந்­தோ­னே­ஷியா வர்த்­த­கம்

2025 ஆம் வரு­டம் இந்­தியா இந்­தோ­னே­ஷியா வர்த்­த­கம் 50 பில்­லி­யன் டாலர் அளவு வள­ரும் என பிர­தம மந்­திரி நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார். சமீ­பத்­தில் நடை­பெற்ற ஜி20 மாநாட்­டில் இந்­தோ­னே­ஷிய அதி­பரை சந்­தித்த பேச்­சு­வார்த்­தை­யின் முடி­வில் இந்த இரு நாடு­க­ளுக்­கி­டையே ஆன வர்த்­தக விரி­வாக்­கம் பற்றி அறி­விக்­கப்­பட்­டது.

இரு நாடு­க­ளுக்கு இடையே இருக்­கும் வர்த்­த­கம் 2016 ஆம் வரு­டம் 13 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ரா­க­வும், 2017 ஆம் வரு­டம் அமெ­ரிக்க டாலர் 18 பில்­லி­யன் டாலர் ஆக­வும் இருக்­கி­றது.

2017 ம் வரு­டம் இரு நாடு­க­ளுக்­கி­டையே இருக்­கும்  வர்த்­த­கம் 18 பில்­லி­யன் டால­ரில் இந்­தோ­னே­ஷி­யா­வி­லி­ருந்து  14 பில்­லி­யன் டாலர் இந்­தி­யா­விற்கு ஏற்­று­ம­தி­யா­க­வும், இந்­தி­யா­வி­லி­ருந்து இந்­தோ­னே­ஷி­யா­விற்கு ஏற்­று­மதி நாலு பில்­லி­யன் டால­ரா­க­வும் இருக்­கி­றது

இந்த இரு நாடு­க­ளுக்­கி­டை­யே­யான வர்த்­த­கத்தை 2025ம் ஆண்டு  ஆண்டு 50 பில்­லி­யன் டால­ராக  கொண்டு செல்ல முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

பல வர்த்­தக வாய்ப்­பு­கள் உய­ரும்.

எல்.சி.யை அட­மா­னம் வைத்து தனி­யா­ரி­டம் கடன் வாங்க முடி­யுமா?

யூ.சி.பி. விதி­க­ளில் 39வது விதி அசைன்­மெண்ட் பற்றி கூறு­கி­றது. அதா­வது எல்.சி. வந்­த­வு­டன் உங்­க­ளுக்கு சரக்­கு­கள் வாங்க, அதை ஏற்­று­மதி பொரு­ளாக மாற்ற பணம் தேவைப்­ப­டு­கி­றது. ஆனால் தேவை­யான பணம் உங்­க­ளி­டம் இல்லை.

இதற்­காக வங்­கிக்கு சென்­றால் ப்ரி ஷிப்­மெண்ட் கடன் வாங்­கிக் கொள்­ள­லாம். ஆனால் வங்­கி­கள் இதைத் தர­வில்லை என்­றால் தனி­யார்­க­ளி­டம், பைனா­னன்ஸ் கம்­பெ­னி­க­ளி­டம் சில சம­யம் கடன்­கள் வாங்க வேண்­டி­யி­ருக்­கும். அது போல சம­யங்­க­ளில் கடன் கொடுத்த அந்த நிறு­வ­னங்­கள் யூ.சி.பி. விதி 39ன் படி எல்.சி.யை அவர்­கள் பெய­ரில் அசைன் பண்­ணிக் கேட்­க­லாம். அதா­வது அந்த எல்.சி.யில் சரக்­கு­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்டு அதற்­கான டாக்­கு­மெண்ட்­கள் வங்­கி­யி­டம் கொடுக்­கப்­பட்ட பின், அந்த டாக்­கு­மெண்ட்­கான பணம் வரும் போது முத­லில் யாருக்கு எவ்­வ­ளவு அசைன் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றாதோ அவ்­வ­ளவு கொடுத்து விட்டு மீதி பணத்தை எல்.சி.யின் பெனி­பி­ஷி­யரி பெற்­றுக் கொள்­வார்.

கட­னுக்கு செக்­யூ­ரிட்டி போலத்­தான் அசைன்­மெண்ட்­டும். வங்­கி­க­ளில் கடன் கிடைக்­காத போது இது போன்ற

செய்­யப்­ப­டு­கி­றது.