சென்னை மருத்துவர் ஆந்திராவில் இலவச மருத்துவ முகாம்!

பதிவு செய்த நாள் : 30 ஜூன் 2019

ஓங்கோல்,            

சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தில் இலவச மருத்துவ முகாமை இன்று நடத்தியுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

சென்னை அண்ணா நகரில் பிரபல பெண்கள் மருத்துவமனை மற்றும் கருவுறுதல் மையம் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை நிர்வாக இயக்குநர், மருத்துவர் சுரக்‌ஷித் பட்டினா. கைனெகாலஜிஸ்டான இவர், இம்மையத்தின் லாப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சைப் பிரிவு இயக்குநராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் என்னும் கிராமத்தில், மருத்துவர் சுரக்‌ஷித் பத்தினா தலைமையில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஆர்திரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணரும் கலந்துகொண்டார்.

இதில் சுமார் 150 நோயாளிகள் இந்த முகாமிற்கு வந்து பயனடைந்தனர். இதுகுறித்து மருத்துவர் சுரக்‌ஷித் பத்தினா கூறுகையில்,”ஓங்கோல் கிராமத்து மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.