ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்?

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2019

லோக்­சபா தேர்­த­லில் இரண்­டா­வது முறை­யாக வெற்றி பெற்று பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு பத­வி­யேற்­றுள்­ளது. முதல் வேலை­யாக லோக்­சபா, மாநில சட்­ட­ச­பை­க­ளுக்கு ஒரே நேரத்­தில் தேர்­தல் நடத்த ஏது­வாக ‘ஒரே நாடு ஒரே தேர்­தல்’ என்ற திட்­டத்தை அமல்­ப­டுத்­தும் முயற்­சி­யில் தீவி­ர­மாக பிர­த­மர் மோடி ஈடு­பட்­டுள்­ளார்.

ஒரே நாடு ஒரே தேர்­தல் திட்­டத்தை அமல்­ப­டுத்த பல்­வேறு இடை­யூ­று­கள் உள்­ளன. இதற்­காக அர­சி­யல் சட்­டத்­தி­லும், மக்­கள் பிர­தி­நி­தித்­துவ சட்­டம்–1951விலும் பல்­வேறு திருத்­தங்­களை செய்ய வேண்­டும். இந்த திட்­டத்­திற்கு தேசிய அள­வி­லும், மாநில அள­வி­லும் அங்­கீ­கா­ரம் பெற்­றுள்ள அர­சி­யல் கட்­சி­கள் ஒப்­பு­தல் அளிக்க வேண்­டும். இதை விட முக்­கி­ய­மான பிரச்னை ஜம்­மு–­­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு சிறப்பு அந்­தஸ்து வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த மாநில சட்­ட­ச­பை­யின் பதவி காலம் ஆறு ஆண்­டு­கள். அப்­படி இருக்­கை­யில் இந்த மாநி­லத்­தில் எப்­படி ஐந்­தா­வது ஆண்­டில் தேர்­தல் நடத்த முடி­யும் என்ற கேள்­வி­யும் எழு­கி­றது.

பார­திய ஜனதா ஒரே நாடு ஒரே தேர்­தல் திட்­டத்தை வலி­யு­றுத்த கார­ணம் என்ன?

2014, 2019ம் ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லின் முடி­வு­க­ளில் இருந்து மாநில சட்­ட­சபை தேர்­தல்­களை விட, லோக்­சபா தேர்­த­லில் பா.ஜ., அதிக இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­தல்­க­ளில் பல மாநி­லங்­க­ளில் பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்­துள்­ளது. இருப்­பி­னும் சட்­ட­சபை தேர்­தல்­க­ளில் வாங்­கிய வாக்­கு­களை விட, லோக்­சபா தேர்­தல்­க­ளில் அதிக வாக்­கு­களை வாங்­கி­யுள்­ளது.

பீகார், மகா­ராஷ்­டிரா மாநி­லங்­க­ளில் பா.ஜ., கூட்­டணி கட்­சி­க­ளுக்கு கணி­ச­மான தொகு­தி­களை ஒதுக்­கி­யது. இத­னால் இந்த மாநி­லங்­க­ளில் பா.ஜ., குறைந்த அளவு வாக்­கு­களை வாங்­கி­யுள்­ளது. இதே போல் திரி­புரா மாநி­லத்­தில் மாநில கட்­சி­யு­டன் பா.ஜ,, கூட்­டணி சேர்ந்­துள்­ளது. இந்த மாநி­லத்­தில் 2014 லோக்­சபா தேர்­த­லில் வாங்­கிய வாக்­கு­களை விட, தற்­போது வாக்கு சத­வி­கி­தம் அதி­க­ரித்­துள்­ளது. இவற்றை எல்­லாம் பார்க்­கும் போது 2014, 2019 லோக்­சபா தேர்­தல்­க­ளில் பா.ஜ.வின் வாக்கு சத­வி­கி­தம் அதி­க­மாக உள்­ளது.  

அதே நேரத்தில் சட்­ட­சபை தேர்­தல்­க­ளில் வாக்கு சத­வி­கி­தம் குறை­வாக உள்­ளது. இவற்­றில் ஒடிசா, ஆந்­திரா, சிக்­கிம், அரு­ணா­சல பிர­தே­சம் ஆகிய மாநி­லங்­க­ளில் லோக்­சபா தேர்­த­லும், சட்­ட­சபை தேர்­த­லும் ஒரே நேரத்­தில் நடை­பெற்­ற­தால், இந்த மாநி­லங்­க­ளில் வாக்­கு­கள் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வில்லை.    

லோக்­சபா, சட்­ட­சபை தேர்­தல்­கள் ஒரே நேரத்­தில் நடை­பெற்­றால், லோக்­சபா தொகு­தி­க­ளுக்கு கிடைக்­கும் வாக்­கு­கள், சட்­ட­சபை தொகு­தி­க­ளுக்­கும் கிடைக்­கும். இத­னால் அதிக மாநி­லங்­க­ளில் ஆட்சி அமைக்­க­லாம். சட்­ட­ச­பை­க­ளில் வெற்றி பெறும் இடங்­க­ளும் அதி­க­ரிக்­கும் என்று பா.ஜ,,கரு­து­கி­றது. ஒரு வாக்­கு­சா­வ­டி­யில் வாக்­க­ளிக்­கும் வாக்­கா­ளர்­கள் லோக்­சபா தேர்­த­லுக்கு மோடிக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கும் போது, சட்­ட­சபை தேர்­த­லுக்­கும் அதே மாதிரி வாக்­க­ளிப்­பார்­கள். லோக்­சபா தேர்­த­லில் பா.ஜ.,வுக்கு ஆத­ர­வா­க­வும், சட்­ட­சபை தேர்­த­லில் மற்ற கட்­சி­க­ளுக்கு ஆத­ர­வா­க­வும் வாக்­க­ளிக்க மாட்­டார்­கள். இரண்­டிற்­கும் ஒரே மாதிரி வாக்­க­ளிப்­பார்­கள் என கரு­து­கின்­ற­னர்.

2019ல் ஒரே சம­யத்­தில் லோக்­சபா, சட்­ட­சபை தேர்­தல் நடை­பெற்ற மாநி­லங்­க­ளில் பூத் அள­வில் பதி­வான வாக்­கு­களை பார்த்­தால், லோக்­சபா, சட்­ட­ச­பைக்கு ஏறக்­கு­றைய ஒரே கட்­சிக்கு வாக்­க­ளித்­துள்­ளது தெரி­ய­வ­ரு­கி­றது. தற்­போது பா.ஜ.,.தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­டணி 19 மாநி­லங்­க­ளில் ஆட்­சி­யில் உள்­ளது. தமிழ்­நாடு, கேரளா, புதுச்­சேரி, ஆந்­திரா, தெலுங்­கானா, ஒடிசா, மேற்கு வங்­கம், மேக­லயா, மிஜோ­ரம், சிக்­கிம், பஞ்­சாப் ஆகிய மாநி­லங்­க­ளில் மற்ற கட்­சி­க­ளின் ஆட்சி நடை­பெ­று­கி­றது. ஜம்­மு–­­காஷ்­மீர் மாநி­லத்­தில் ஜனா­தி­பதி ஆட்சி அம­லில் உள்­ளது.

பா.ஜ, தலை­மை­யி­லான தேசிய ஜன­நாய கூட்­டணி எதிர்­கட்­சி­யாக உள்ள ராஜஸ்­தான், மத்­திய பிர­தே­சம், சத்­திஸ்­கர், கர்­நா­டகா, டில்லி ஆகிய மாநி­லங்­க­ளில் லோக்­சபா தேர்­த­லில் பா.ஜ., அதிக இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. மம்தா பானர்ஜி தலை­மை­யி­லான திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­யில் உள்ள மேற்கு வங்­கத்­தில், 2014ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் பா.ஜ., இரண்டு தொகு­தி­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்று இருந்­தது.  தற்­போது நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் 18 தொகு­தி­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது. இதே போல் 2014ல் பார­திய ஜனதா 16.8 சத­வி­கித வாக்­கு­கள் வாங்­கி­யி­ருந்­தது. இப்­போது 40 சத­வி­கி­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. 2021ல் நடை­பெற உள்ள சட்­ட­சபை தேர்­த­லில் ஆட்­சியை பிடித்­து­வி­ட­லாம் என்று கரு­து­கி­றது. அதே நேரத்­தில் சட்­ட­சபை தேர்­த­லில் மம்தா பானர்­ஜியை எதிர் கொள்­வது கடி­னம் என்ற கருத்­தும் பா.ஜ.,வினர் மத்­தி­யில் நில­வு­கி­றது.  

இதே போல் கர்­நா­டா­கா­வில் லோக்­சபா தொகு­தி­க­ளில் பா.ஜ., அதிக இடங்­க­ளில் வெற்றி பெற்று இருந்­தா­லும், அடுத்து சில நாட்­க­ளுக்கு பிறகு நடை­பெற்ற உள்­ளாட்சி தேர்­த­லில் பா.ஜ., தோல்­வியை தழு­வி­யது. இதில் இருந்து மக்­கள் எல்லா தேர்­தல்­க­ளி­லும் ஒரே மாதி­ரி­யாக, ஒரே கட்­சிக்கு வாக்­க­ளிப்­ப­தில்லை என்­பது புல­னா­கி­றது. லோக்­சபா தேர்­த­லில் மத்­தி­யில் எந்த கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்­புள்­ளது என்­பதை பார்த்து வாக்­க­ளிக்­கின்­ற­னர். சட்­ட­சபை தேர்­த­லில் மாநில கட்­சி­க­ளில் செல்­வாக்­குள்ள மாநில கட்­சிக்கு வாக்­க­ளித்து ஆட்­சி­யில் அம­ர­வைக்­கின்­ற­னர். உள்­ளாட்சி தேர்­தல்­களை பொருத்த மட்­டில் மாநில ஆளும் கட்­சிக்கு அதிக அளவு வாக்­க­ளிக்­கின்­ற­னர். மாநில ஆளும் கட்சி மீதுள்ள வெறுப்­பால், லோக்­சபா தேர்­த­லில் தேசிய கட்­சி­கள் பல­மாக இல்­லாத தமிழ்­நாடு போன்ற மாநி­லங்­க­ளில் மக்­கள் பிர­தான எதிர்­கட்­சிக்கு வாக்­க­ளிக்­கின்­ற­னர் என்­பது புல­னா­கி­றது.

இதில் இருந்து பா.ஜ., கரு­து­வது போல் லோக்­சபா, சட்­ட­சபை தேர்­தல்­கள் ஒரே நேரத்­தில் நடை­பெற்­றால், இரண்­டி­லும் அதிக இடங்­க­ளில் வெற்றி பெற்று விட­லாம் என்று கூற­மு­டி­யாது. அதே நேரத்­தில் இரண்டு தேர்­த­லும் ஒன்­றாக நடை­பெ­றும் போது, மாநில பிரச்­னை­க­ளும், லோக்­சபா தேர்­த­லில் எதி­ரொ­லிக்­க­வும் வாய்ப்பு உள்­ளது என்­ப­தை­யும் மறுப்­ப­திற்­கில்லை.

உதா­ர­ண­மாக தெலுங்­கானா மாநி­லத்தை எடுத்­துக் கொள்­வோம். ஒரே நேரத்­தில் லோக்­சபா, சட்­ட­ச­பைக்கு தேர்­தல் நடை­பெற்ற போதும், தனித்­த­னி­யாக நடை­பெற்ற போதும் முடி­வு­கள் வெவ்­வேறு மாதி­ரி­யாக வந்த மாநி­லம் தெலுங்­கானா. 2014, லோக்­சபா தேர்­த­லும், தெலுங்­கானா சட்­ட­சபை தேர்­த­லும் ஒரே­நே­ரத்­தில் நடை­பெற்­றது. தற்­போது (2019ல்) லோக்­சபா தேர்­தல் நடை­பெ­று­வ­தற்கு சில மாதங்­க­ளுக்கு முன் சட்­ட­சபை தேர்­தல் நடந்து முடிந்து விட்­டது.

2014ல் லோக்­சபா, சட்­ட­சபை தேர்­தல்­கள் ஒரே நேரத்­தில் நடை­பெற்ற போது தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமீதி, காங்­கி­ரஸ், அகில இந்­திய மஜ்­லிஸ்–­­இ–­­இத்­தே­ஹாத் உல் முஸ்­லீம் ஆகிய கட்­சி­கள் வாங்­கிய வாக்­கு­கள் அதிக அளவு வேறு­ப­ட­வில்லை. பார­திய ஜன­தா­வும்,தெலுங்கு தேசம் ஆகிய கட்­சி­கள் லோக்­சபா தேர்­த­லில் அதிக வாக்­கு­கள் வாங்­கி­யி­ருந்­தன.

தெலுங்­கானா சட்­ட­ச­பை­யின் பதவி காலம் முடி­வ­தற்கு முன்பே சட்­ட­சபை கலைக்­கப்­பட்டு, தேர்­தல் நடை­பெற்­றது. சட்­ட­சபை தேர்­தல் முடிந்து நான்கு மாதங்­க­ளுக்கு பிறகு நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் கட்­சி­கள் வாங்­கிய வாக்­கு­க­ளில் அதிக அளவு வித்­தி­யா­சம் உள்­ளது. பா.ஜ.,வின் வாக்­கு­கள் 12.5 சத­வி­கி­தம் அதி­க­ரித்­துள்­ளது. காங்­கி­ரஸ் கட்­ச­யின் வாக்­கு­கள் 1.1 சத­வி­கி­தம் அதி­க­ரித்­துள்­ளது. ஆளும் கட்­சி­யான தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமீ­தி­யின் வாக்­கு­கள் 5.6 சத­வி­கி­தம் குறைந்­துள்­ளது. சட்­ட­சபை தேர்­த­லில் 3.5 சத­விகி வாக்­கு­கள் வாங்­கிய தெலுங்கு தேசம், லோக்­சபா தேர்­த­லில் போட்­டி­யி­ட­வில்லை. இதன் வாக்­கு­கள் காங்­கி­ரஸ் அல்­லது பா.ஜ.,விற்கு சென்று இருக்க வாய்ப்­புள்­ளது. அகில இந்­திய மஜ்­லிஸ்–­­இ–­­இத்­தே­ஹாத் உல் முஸ்­லீம் கட்சி வாங்­கிய வாக்­கு­க­ளில் வித்­தி­யா­சம் இல்லை.

தெலுங்­கா­னா­வில் லோக்­சபா, சட்­ட­சபை தேர்­த­லில் கட்­சி­கள் வாங்­கிய வாக்­கு­கள் பற்­றிய விப­ரங்­களை பரி­சீ­லிப்­போம். 2014, 2018 சட்­ட­சபை தேர்­த­லில் பா.ஜ., வாங்­கிய வாக்­கு­கள் 7 சத­வி­கி­தம் என்ற அள­வில் உள்­ளது. 2014 சட்­ட­சபை தேர்­த­லில் தெலுங்கு தேசம் கட்­சி­யு­டன் கூட்­டணி சேர்ந்­த­தால், பா.ஜ., சில தொகு­தி­க­ளில் மட்­டுமே போட்­டி­யிட்­டது. ஆனால் 2018ல் தனி­யாக நின்று எல்லா தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யிட்­டது. இதில் இருந்து சட்­ட­சபை தேர்­த­லில் பா.ஜ..வுக்கு சாத­க­மாக இல்லை என்­பது தெரி­கி­றது.

அதே நேரத்­தில் இரண்டு தேர்­த­லும் தனித்­த­னி­யாக நடை­பெற்­ற­தால் சட்­ட­சபை தேர்­த­லில் வெற்றி பெற்ற தெலுங்­கான ராஷ்­டி­ரிய சமீ­திக்கு, லோக்­சபா தேர்­த­லில் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது. இதன் வாக்­கு­கள் தேசிய கட்­சி­க­ளான பா.ஜ., காங்­கி­ரஸ் கட்­சி­க­ளுக்கு பிரி­வ­தற்கு வாய்ப்பு உள்­ளது. இதில் இருந்து இரண்டு தேர்­தல்­க­ளும் ஒரே நேரத்­தில் நடை­பெற்­றால் தேசிய கட்­சி­க­ளுக்கு சாத­க­மாக இருக்­கும் என்ற கருத்து தவ­றா­னது என்­பது தெரி­கி­றது. இரண்டு தேர்­தல்­க­ளும் ஒரே நேரத்­தில் நடை­பெற்று இருந்­தால், தெலுங்­கான ராஷ்­டி­ரிய சமீதி, அதிக லோக்­சபா தொகு­தி­க­ளில் வெற்றி பெற்று இருப்­ப­தற்­கும் வாய்ப்பு உள்­ளது.

தெலுங்­கா­னா­வில் இரண்டு தேர்­தல்­க­ளும் ஒரே நேரத்­தில் நடை­பெற்று இருந்­தால், சட்­ட­ச­பைக்கு வாக்­க­ளித்த கட்­சி­யின் வேட்­பா­ள­ருக்கே, லோக்­ச­பா­விற்­கும் வாக்­க­ளித்­தி­ருப்­பார்­கள். வாக்­கு­கள் பிரி­வது குறைந்­தி­ருக்­கும். சட்­ட­ச­பைக்கு ஒரு கட்­சிக்­கும், லோக்­ச­பா­வுக்கு வேறு கட்­சிக்­கும் வாக்­க­ளித்­தி­ருக்க மாட்­டார்­கள். மாநில பிரச்­னை­கள் தேசிய மட்­டத்­தி­லும், தேசிய பிரச்­னை­கள் மாநில மட்­டத்­தி­லும் முக்­கி­யத்­து­வம் பெற்று இருக்­கும். இது கட்­சி­க­ளின் பிர­சா­ரத்தை பொருத்து இருந்­தி­ருக்­கும். தெலுங்­கா­னா­வில் சந்­தி­ர­சே­கர ராவ், மேற்கு வங்­கத்­தில் மம்தா பானர்ஜி. ஒடி­சா­வில் நவீன் பட்­நா­யக் போன்ற பல­மான தலை­வர்­கள், மாநில நலனை முன்­னி­றுத்தி, பா.ஜ,.,வின் தேசிய நலனை பின்­னுக்கு தள்­ளி­யி­ருப்­பார்­கள்.

இவை எல்­லாம் அனு­மா­னங்­களே. தேசிய கட்­சி­கள், மாநில கட்­சி­கள் அனைத்­தும் சம்­ம­தித்­தால் மட்­டும் ஒரே நாடு ஒரே தேர்­தல் என்­பது சாத்­தி­யம். உட­ன­டி­யாக ஒரே நாடு ஒரே தேர்­தல் என்­பதை ஒட்டு மொத்த இந்­திய அள­வில் அமல்­ப­டுத்த முடி­யா­விட்­டா­லும் கூட, மத்­தி­யில் ஆட்­சி­யில் உள்ள பார­திய ஜனதா, இந்­தி­யா­வின் பெரும்­பான்மை பகு­தி­யில் அமல்­ப­டுத்த முடி­யும். சத்­திஸ்­கர், கர்­நா­டகா, மத்­திய பிர­சே­தம், மேக­லயா, மிஜோ­ரம், நாக­லாந்து, ராஜஸ்­தான், தெலுங்­கானா, திரி­புரா ஆகிய ஒன்­பது மாநில சட்­ட­சபை பத­வி­கா­லம் வரும் 2023ல் முடி­வ­டை­கி­றது.

தற்­போ­தைய லோக்­ச­பா­வின் பத­வி­கா­லம் வரும் 2024 வரை உள்­ளது. லோக்­ச­பாவை ஒரு வரு­டம் முன்­னரே கலைத்­து­விட்டு, 2023ல் ஒன்­பது மாநில சட்­ட­சபை தேர்­த­லு­டன் சேர்த்து, லோக்­சபா தேர்­தல் நடத்­த­லாம். அத்­து­டன் ஆந்­திரா, அரு­ணா­சல பிர­தே­சம், ஒடிசா, சிக்­கிம் ஆகிய நான்கு மாநில சட்­ட­சபை பத­வி­கா­லம் வரும் 2024ல் முடி­வ­டை­கி­றது. இந்த மாநி­லங்­க­ளின் சட்­ட­ச­பையை ஒரு வரு­டத்­திற்கு முன்பே கலைத்­து­விட்டு, 2023ல் தேர்­தலை நடத்­த­லாம். அப்­படி செய்­யும் போது லோக்­சபா தேர்­த­லு­டன் 13 மாநில சட்­ட­சபை தேர்­தல்­க­ளை­யும் நடத்த முடி­யும். இதன் மூலம் ‘ஒரே நாடு ஒரே தேர்­தல்’ என்­பதை பரீட்­சார்த்­த­மாக சோதித்து பார்க்­க­லாம். இதன் சாதக, பாத­கங்­க­ளை­யும் அனு­பவ ரீதி­யாக எல்லா கட்­சி­க­ளும், தேசிய, மாநில அள­வி­லான கட்­சி­கள் உணர முடி­யும்.

நன்றி: தி கியூன்ட் இணை­ய­த­ளத்­தில் ஆதித்ய மேனன் எழு­திய கட்­டு­ரை­யின் உத­வி­யு­டன்.

ஆலோ­சனை கமிட்டி

பிர­த­மர் நரேந்­திர மோடி சென்ற 19ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்­தல், இந்­தி­யா­வின் 75 வது சுதந்­தி­ர­தி­னம், மகாத்மா காந்­தி­யின் 150 வது பிறந்த தினம் ஆகி­யவை பற்றி ஆலோ­சிக்க அனைத்து கட்சி தலை­வர்­க­ளின் கூட்­டத்தை கூட்­டி­யி­ருந்­தார்.

இந்த கூட்­டத்­திற்கு பிறகு பாது­காப்பு துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் செய்­தி­யா­ளர்­க­ளி­டம்.   இந்த கூட்­டத்­தில் பிர­த­மர் மோடி பேசும் போது, ஒரே நாடு ஒரே தேர்­தல் என்­பதை அமல்­ப­டுத்த குறிப்­பிட்ட கால­வ­ரை­ய­றுக்­குள் ஆலோ­சனை கூற கமிட்டி அமைக்க வேண்­டும் என்று கூறி­ய­தாக தெரி­வித்­தார். மேலும் அவர் பெரும்­பா­லான கட்­சி­கள் ஒரே நாடு ஒரே தேர்­தல் என்­ப­தற்கு ஆத­ர­வாக உள்­ளன. கம்­யூ­னிஸ்ட் கட்சி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­க­ளுக்கு மாற்று கருத்து உள்­ளது. ஆனால் இவை இந்த யோச­னையை எதிர்க்­க­வில்லை. இதை அமல்­ப­டுத்­து­வ­தில் தான் கருத்து வேறு­பாடு உள்­ளது என்று தெரி­வித்­தார்.

இந்த கூட்­டத்­தில் தேசி­ய­வாத காங்­கி­ரஸ், சிபி­எம், சிபிஐ, ஐக்­கிய ஜன­தா­த­ளம், ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ், சிரோ­மணி அகா­லி­த­ளம், பிஜூ ஜன­தா­த­ளம், தேசிய மக்­கள் கட்சி உட்­பட 21 கட்­சி­க­ளின் தலை­வர்­கள் பங்­கேற்று இருக்­கின்­ற­னர். கோவா­வில் பா.ஜ., கூட்­டணி கட்­சி­யான கோவா பார்­வர்ட் கட்சி, ஒரே நாடு ஒரே தேர்­த­லுக்கு முத­லில் எதிர்ப்பு தெரி­வித்­தது. பிறகு ஆத­ரவு தெரி­விப்­ப­தாக அறி­வித்­துள்­ளது. ஓய்.எஸ்.ஆர் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த விஜ­சய்­சாய் ரெட்டி, ஆத­ரவு தெரி­விப்­ப­தாக கூறி­யுள்­ளார். ஒடிசா முதல்­வ­ரும், பிஜூ ஜனதா தள தலை­வ­ரு­மான நவீன் பட்­நா­யக் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார்.      

இந்த ஆலோ­சனை கூட்­டத்­திற்கு அர­சி­யல் கட்சி தலை­வர்­க­ளுக்கு மட்­டுமே அழைப்பு அனுப்­பப்­பட்­டது. இந்த கூட்­டத்­தில் பல எதிர்­கட்­சி­கள் பங்­கேற்­க­வில்லை.  ராகுல் காந்தி (காங்­கி­ரஸ்) மம்தா பானர்ஜி (திரி­ணா­முல் காங்­கி­ரஸ்), ஸ்டாலின்

(திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்) மாயா­வதி

(பகு­ஜன் சமாஜ்), அகி­லேஷ் யாதவ் (சமாஜ்­வாதி), அர­விந்த் கெஜ்­ரி­வால் (ஆம் ஆத்மி) சந்­தி­ர­சே­கர ராவ் (தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமீதி), உத்­தவ் தாக்­கரே ( சிவ­சேனா) சந்­தி­ர­பாபு நாயுடு  (தெலுங்கு தேசம்), தேஜ்ஸ்வி யாதவ் (ராஷ்­டி­ரிய ஜனதா தளம்) ஆகி­யோர் பங்­கேற்­க­வில்லை.