தண்ணீர் பிரச்னைக்கு புதிய ஜலசக்தி அமைச்சகம் தீர்வு காணுமா?

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2019

பார­திய ஜனதா லோக்­சபா தேர்­த­லுக்கு முன் அறி­வித்­த­படி, நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அரசு தண்­ணீர் பிரச்­னை­களை கையாள்­வ­தற்கு பல அமைச்­ச­ர­கங்­களை இணைத்து, புதி­தாக ‘ஜல சக்தி’  என்ற அமைச்­ச­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளது. இந்த புதிய அமைச்­ச­ர­கம் கங்கை நதியை சுத்­த­க­மாக்­கு­தல், எல்­லோ­ருக்­கும் குழாய் மூல­மாக தண்­ணீரை வழங்­கு­தல், சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட குடி­தண்­ணீர் வழங்­கல், நதி­கள் இணைப்பு ஆகி­ய­வை­களை மேற்­கொள்­ளும்.

இந்த நட­வ­டிக்­கைக்கு நிபு­ணர்­கள் சந்­தே­கத்தை எழுப்­பு­கின்­ற­னர். ஏற்­க­னவே உள்ள சில அமைச்­ச­ரங்­களை ஒன்­றாக இணைத்து புதிய ஒரே அமைச்­ச­ர­கத்தை உரு­வாக்­கு­வ­தாலோ, பெயரை மாற்­று­வ­தாலோ எவ்­வித பல­னும் ஏற்­பட போவ­தில்லை. தண்­ணீர் பிரச்­னைக்கு தீர்­வு­காண பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்­டும் என்­கின்­ற­னர்.

இந்­தி­யா­வில் தண்­ணீர் தொடர்­பாக பல்­வேறு பிரச்­னை­கள் உள்­ளன. தண்­ணீர் பற்­றாக்­குறை, நீர் வளத்தை வரை­முறை இல்­லா­மல் பயன்­ப­டுத்­து­தல், நிலத்­தடி நீர் மாச­டைந்து இருப்­பது, நதி­க­ளில் மாசு ஏற்­பட்டு இருப்­பது. நன்­னீர் கிடைப்­பது குறைந்து வரு­வது போன்ற பிரச்­னை­கள் உள்­ளன.

சென்ற லோக்­சபா தேர்­த­லுக்கு முன் பா.ஜ.,வெளி­யிட்ட தேர்­தல் அறிக்­கை­யில், தண்­ணீர் தொடர்­பான எல்லா விஷ­யங்­க­ளை­யும் அணு­கு­வ­தற்கு ஒரே அமைச்­ச­கம் அமைக்­கப்­ப­டும் என்று கூறி­யி­ருந்­தது. லோக்­சபா தேர்­த­லில் வெற்றி பெற்று நரேந்­திர மோடி ஆட்சி அமைத்த உடனே, ஏற்­க­னவே உள்ள நீர்­வ­ளத்­துறை, கங்கை சுத்­தி­க­ரிப்பு மற்­றும் நதி­கள் மேம்­பாடு, குடி­தண்­ணீர் மற்­றும் சுத்­தி­க­ரிப்பு ஆகிய அமைச்­ச­கங்­களை ஒன்­றாக சேர்த்து புதி­தாக ‘ஜல சக்தி’  அமைச்­ச­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளார். ஜல சக்தி அமைச்­ச­ராக கஜேந்­திர சிங் செக­ாவத் பத­வி­யேற்­றுள்­ளார்.

பா.ஜ,,தேர்­தல் அறிக்­கை­யில், “நீர் வளம் முக்­கி­ய­மான ஆதா­ரம். ஆனால் இதன் நிர்­வா­கம் மத்­தி­யி­லும், மாநி­லங்­க­ளி­லும் பல்­வேறு துறை­களை சார்ந்­துள்­ளது. நீர் வளத்தை முழு­மை­யாக நிர்­வ­கிப்­ப­தற்­கும். பல்­வேறு துறை­கள் ஒருங்­கி­னைந்து செயல்­ப­ட­வும் புதிய அமைச்­ச­ர­கம் அமைக்­கப்­ப­டும் என்று கூறி­யி­ருந்­தது. தேர்­தல் பிர­சா­ரத்­தின் போது நரேந்­திர மோடி, தனது அரசு சுகா­தா­ர­மான குடி­தண்­ணீர் கிடைப்­ப­தற்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் என்று கூறி­யி­ருந்­தார்.

ஜல சக்தி அமைச்­ச­ராக பத­வி­யேற்ற பின் கஜேந்­திர சிங் செகா­வத் செய்­தி­யா­ளர்­க­ளி­டம், “புதிய அமைச்­ச­ர­கத்­தின் முன், சுகா­தா­ர­மான குடி தண்­ணீர் வழங்­கு­வது, சர்­வ­தேச, மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான நதி நீர் தாவா, கங்கை நதியை சுத்­தப்­ப­டுத்­தல் ஆகி­யவை உள்­ளன” என்று தெரி­வித்­தார்.

இது போன்று பெயர் மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­து­டன், சுதந்­தி­ரத்­திற்கு பிறகு நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­கம் பல மாற்­றங்­களை சந்­தித்­துள்­ளது. 1951ல், தேசிய வளங்­கள் மற்­றும் அறி­வி­யல் ஆராய்ச்சி அமைச்­ச­கத்­தின் கீழ், நீர் பாச­னம் மற்­றும் மின் உற்­பத்தி இருந்­தது. பிறகு 1985ல் தனி­யாக நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

தற்­போது நரேந்­திர மோடி அரசு நீர்­வ­ளத்­துறை அமைச்­கத்தை முதன்­மு­றை­யாக மாற்­ற­வில்லை. சென்ற 2014ல் ஆட்­சிக்கு வந்த பிறகு, ஜூலை மாதம் நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­கத்­தின் பெயரை, நீர்­வ­ளத்­துறை, நதி­கள் மேம்­பாடு, கங்கை சுத்­தி­க­ரிப்பு என மாற்­றி­னார். கங்கை நதியை சுத்­தி­க­ரிக்க பல வாக்­கு­று­தி­கள் அளிக்­கப்­பட்டு, கோடிக்­க­ணக்­கான ரூபாய் செல­வ­ழிக்­கப்­பட்ட பிற­கும் கூட, அந்த புனித நதி மாச­டைந்தே உள்­ளது. மத்­திய மாசு­கட்­டுப்­பாடு வாரிய தக­வல்­படி, உத்­த­ர­காண்­டில் இருந்து மேற்கு வங்­கம் வரை பாயும் கங்கை நதி­யின் நீர் குடிப்­ப­தற்கு லாயக்­கற்­றது. அதன் பிறகு கங்கை நதி பாயும் பல மாநி­லங்­க­ளில், அந்த நதி நீரில் குளிக்­க­வும் லாயக்­கற்­றது என்று கூறி­யுள்­ளது.

வாட்­டர்­மேன் என்று அழைக்­கப்­ப­டும், சுற்­றுச்­சூ­ழ­லி­ய­லா­ளர் ராஜேந்­திர சிங், கங்கை நதியை சுத்­தப்­ப­டுத்த அரசு பொய்­யான வாக்­கு­று­தி­களை கொடுக்­கின்­றது என்­கின்­றார். இது பற்றி அவர் கூறும் போது, “மத்­திய அரசு கங்கை நதியை சுத்­தப்­ப­டுத்­து­வ­தாக தவ­றான தக­வல்­களை கூறு­கி­றது. ஆனால் எது­வும் நடக்­க­வில்லை. அவர்­கள் கங்கை சுத்­தி­க­ரிப்பு அமைச்­ச­கத்தை ஏற்­ப­டுத்­திய போது, லட்­சக்­க­ணக்­கா­ன­வர்­கள் உத்­வே­கம் பெற்­ற­னர். இதை அரசு தீவி­ர­மாக பார்ப்­ப­தாக கரு­தி­னர். அத­னால் தான் நாங்­கள் கங்­கையை சுத்­தப்­ப­டுத்த வலி­யு­றுத்தி நடத்­திய இயக்­கத்தை நிறுத்­தி­னோம். கடந்த ஐந்து வரு­ட­கால ஆட்­சி­யில் நரேந்­திர மோடி அரசு, கங்­கையை சுத்­தப்­ப­டுத்த எது­வும் செய்­ய­வில்லை. அதன் மாசு அதி­க­ரித்­துள்­ளது. அளித்த வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்­றப்­ப­டாத கார­ணத்­தால், கங்கை சுத்­தி­க­ரிப்பு அமைச்­ச­கம் மீது குறை கூறப்­பட்­டன. அத­னால் அவர்­கள் தற்­போது ‘ஜல சக்தி’ என்று பெயரை மாற்­றி­யுள்­ள­னர். தண்­ணீரே இல்­லாத போது, அர­சால் எப்­படி எல்­லோ­ருக்­கும் குழா­யில் தண்­ணீர் வழங்க முடி­யும். இது காண்­டா­ரக்ட் கொடுக்­கும் மற்­றொரு திட்­டமே. அரசு பெரிய கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு குழாய் சப்ளை செய்ய ஆர்­டர் கொடுக்க மட்­டுமே உள்­ளதா?” என்று அவர் கேட்­டார்.

பா.ஜ.,வின் தேர்­தல் அறிக்­கை­யில், ஜல் ஜீவன் மிஷின் (Jal Jivan Mission) திட்­டத்­தின் கீழ், 2024ம் ஆண்­டிற்­குள் எல்­லோ­ருக்­கும் குழாய் மூலம் தண்­ணீர் வழங்­கும் ‘நல் சி ஜல்’ (Nal se Jal) திட்­டத்தை அறி­வித்­துள்­ள­னர். “நாங்­கள் கிரா­மப்­புற நீர் நிலை­கள், நிலத்­தடி நீரை சேமித்­தல் போன்­ற­வை­க­ளின் மூலம் தொடர்ந்து தண்­ணீர் கொடுப்­போம்” என்று தேர்­தல் அறிக்­கை­யில் கூறி­யுள்­ள­னர்.    

உலக அள­வில் தண்­ணீர் இருப்­பில், இந்­தி­யா­வில் நான்கு சத­வி­கி­தம் தண்­ணீர் உள்­ளது. உலக அள­வில் மக்­கள் தொகை­யில் 18 சத­வி­கி­தம் இந்­தி­யா­வில் உள்­ள­னர். கடந்த காலங்­க­ளில் பல்­வேறு ஆய்­வு­க­ளின் மூலம் இந்­தியா நீர் பற்­றாக்­கு­றை­யான நாடு என உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. நிலத்­தடி நீர் மட்­டம் மிக ஆபத்­தான நிலை­யில் உள்­ளது. தேசிய பசுமை தீர்ப்­பா­யத்­தில் நடை­பெற்ற ஒரு வழக்­கில் சென்ற டிசம்­பர் மாதம் மத்­திய அரசு, உல­கத்­தி­லேயே இந்­தியா அதிக அளவு நிலத்­தடி நீரை பயன்­ப­டுத்­தும் நாடு என்­றும், வரு­டத்­திற்கு 253 பில்­லி­யன் கன மீட்­டர் நிலத்­தடி நீரை பயன்­ப­டுத்­து­கி­றது என்­றும் கூறி­யுள்­ளது. இது உலக அள­வில் எடுக்­கப்­ப­டும் நிலத்­தடி நீரில் 25 சத­வி­கி­தம்.

சென்ற வரு­டம் ஜூன் மாதம் நிதி ஆயோக், இது வரை வர­லா­று­கா­ணாத அளவு தண்­ணீர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­வின் மக்­கள் தொகை­யில் பாதி பேர், அதா­வது 60கோடி பேர் கடு­மை­யான தண்­ணீர் பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தி­யா­வில் 75 சத­வி­கித வீடு­க­ளில் குடி­தண்­ணீர் குழாய் இணைப்பு இல்லை. 84 சத­வி­கித வீடு­க­ளில் குழாய் மூலம் தண்­ணீர் பெறும் வசதி இல்லை. கிடைக்­கும் தண்­ணீ­ரில் 70 சத­வி­கி­தம் மாசு­பட்­டது என்று கூறி­யுள்­ளது.

இந்த வரு­டம் பிப்­ர­வரி மாதம் ‘இன்­டர்­நே­ஷ­னல் சென்­டர் பார் இன்­டி­கி­ரே­டட் மவுண்­டன் டெவ­லப்­மென்ட்’ [International Centre for Integrated Mountain Development (ICIMOD) ] அறிக்­கை­யில், உலக அள­வில் நிலத்­தடி நீரை எடுப்­ப­தில் பாதி அளவு (50 சத­வி­கி­தம்) இந்­தியா, வங்­கா­ள­தே­சம், பாகிஸ்­தான், சீனா ஆகிய நான்கு நாடு­க­ளும் உறிஞ்சி எடுக்­கின்­றன என்று கூறப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு துறை­களை ஒருங்­கி­னைத்து புதிய துறையை உரு­வாக்­கு­வது சிறந்­ததே. அதே நேரம் நாட்­டின் தண்­ணீர் பிரச்­னைக்கு தீர்­வு­காண, பல்­வேறு வழி­க­ளில் நட­வ­டிக்கை எடுக்­காத வரை பெரிய அளவு பலன் கிடைக்­காது என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

“அமைச்­ச­கத்­தின் பெயரை மாற்­று­வ­தால் எந்த மாற்­ற­மும் ஏற்­பட போவ­தில்லை. இந்­தி­யா­வில் நீர் மேலாண்மை முறை­யாக இல்லை. தேசிய அள­வில் தண்­ணீர் பிரச்னை தீர்ப்­ப­தற்கு பன்­முக தன்மை நட­வ­டிக்கை தேவை என்று பிர­திப் புரான்­டாரே தெரி­வித்­தார். இவர் மகா­ராஷ்­டிரா மாநி­லம் அவு­ரங்­கா­பாத்­தில் உள்ள வாட்­டர் அண்ட் லேண்ட் மேனெஜ்­மென்ட் இன்ஷ்­டி­யூ­டிட்­டின் ஓய்வு பெற்ற பேரா­சி­ரி­யர்.

மத்­திய அரசு (2018, மே வரை) அளித்­துள்ள புள்ளி விப­ரத்­தில் 69 ஆயி­ரத்து 258 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த 4 கோடியே 50லட்­சம் பேர் நிலத்­தடி நீரில் கலந்­துள்ள புளோ­ரைட், ஆர்­ச­னிக், இரும்பு, உப்­புத்­தன்மை, நைட்­ரேட், ஆபத்­தான உலோ­கங்­கள் போன்­ற­வை­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று கூறப்­பட்­டுள்­ளது.

பூனா­வில் உள்ள சொசைட்டி பார் புரோ­மோ­டிங் பார்­டி­சி­பே­டிவ் எகோ­சிஸ்­டம் மேனெஜ்­மென்ட் அமைப்­பைச் சேர்ந்த கே.ஜே.ஜாய், இந்­தி­யா­வில் தண்­ணீரை பற்­றிய பார்வை முழு­மை­யாக மாற வேண்­டும் என்­கின்­றார். இவர் மேலும் தொடர்ந்து கூறு­கை­யில், “பல நிபு­ணர்­கள் குழுக்­கள் கூறி­யது போல், தண்­ணீர் தொடர்­பான எல்லா துறை­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து இருப்­பது வர­வேற்­கத்­தக்­கதே. அதே நேரத்­தில் நாம் தண்­ணீர் தொடர்­பான எல்லா அணு­கு­மு­றை­க­ளை­யும், நீர் மேலாண்மை பற்­றிய பார்­வை­யை­யும் மாற்­றிக் கொள்­ளா­த­வரை, பெயரை மாற்­று­வ­தால் எது­வும் நடந்­து­வி­டாது. தண்­ணீர் பிரச்­னைக்கு தீர்வு காண­வும், நீர் வளத்தை நிர்­வ­கிக்­க­வும் பன்­முக தன்மை கொண்ட, முழு­மை­யான அணு­கு­முறை தேவை” என்று அவர் கூறி­னார்.

இந்­தி­யா­வில் ஓடும் நதி­களை இணைக்­கும் மாபெ­ரும் திட்­டத்தை மத்­திய அரசு தீட்­டி­யுள்­ளது. சில வரு­டங்­க­ளுக்கு முன் சுப்­ரீம் கோர்ட் கூட, நதி நீர் இணைப்பு திட்­டத்தை விரைவு படுத்­து­மாறு கூறி­யது. இந்த திட்­டத்­தின் கீழ் பெரிய நதி­கள் உட்­பட 30 நதி­கள் இணைக்­கப்­ப­டும். இந்த திட்­டத்­திற்கு கோடிக்­க­ணக்­கான ரூபாய் தேவைப்­ப­டும்.  

நதி­களை இணைக்­கும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக மத்­திய அரசு கென்–­­பட்வா நதி­களை இணைக்­கும் திட்­டத்தை அமல்­ப­டுத்­து­கி­றது. இதற்கு பல்­வேறு துறை­க­ளின் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தியா முழு­வ­தி­லும் குடி­தண்­ணீர், பாச­னத்­திற்­கான தண்­ணீர் பிரச்­னைக்கு தீர்­வு­காண முன்­னாள் பிர­த­மர் வாஜ்­பாய் ஆட்சி காலத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­திய நதி­கள் இணைப்பு திட்­டத்தை புதிய அமைச்­ச­ர­கம் நிறை­வேற்­றும் என்று பா.ஜ,தேர்­தல் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

நன்றி: மயாங்க் அகர்­வால் எழு­திய இந்த கட்­டுரை முத­லில் மோங்­கா­பே–­­இந்­தியா இணை­ய­த­ளத்­தில் வெளி­யா­னது. லாஜி­கல்­இந்­தி­யன் டாட் காம்.