பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 30–6–19

பதிவு செய்த நாள் : 30 ஜூன் 2019

உலக விமா­னப்­படை சாக­சங்­க­ளைப் பார்த்­துக் கொண்­டி­ருந்த போது­தான் இந்த தக­வல் வாட்ஸ் அப்­பில் வந்­தது. இந்த செய்தி ஒரு குறு­கிய வட்­டத்­திற்­குள் சிக்­கி­வி­டக்­கூ­டாது என்­ப­தால் இதைச் சொல்­லியே ஆக­வேண்­டும். உல­கத்­தி­லேயே விமா­னப்­படை மூலம் பல சாக­சங்­களை செய்து காட்­டு­வ­தில் வல்­ல­வர்­கள் இஸ்­ரே­லி­யர்­கள்­தான்.  இஸ்­ரே­லி­யர்­கள் விமா­னப் படை மூலம் தங்­க­ளது சக்­திக்கு அப்­பாற்­பட்ட, எதி­ரா­ளி­யின்  கற்­ப­னைத் திற­னுக்கு எட்­டாத வகை­யில் தாக்­கு­தல் நடத்­து­வ­தற்கு பெயர் பெற்­ற­வர்­கள்!

உதா­ர­ணம் – என்­டெ­பே­யில் 1976ம் வரு­டம் நடந்த பய­ணி­கள் விமா­னக் கடத்­தல். 246 பய­ணி­க­ளைக் கொண்ட  ஏர் பிரான்ஸ் விமா­னத்தை பாலஸ்­தீ­னிய விடு­தலை இயக்­கத்­தின் ஒரு பிரி­வைச் சேர்ந்­த­வர்­கள் கடத்­தி­னார்­கள். அவர்­களை உகாண்­டா­வின் என்­டெபே விமான நிலை­யத்­தில் வைத்­தார்­கள். அதில் யூதர்­கள் இல்­லா­த­வர்­களை மட்­டும் விடு­வித்து மீத­முள்ள 146 யூத பய­ணி­களை மட்­டும் பண­யக்­கை­தி­க­ளாக வைத்து இஸ்­ரே­லி­டம் ஏரா­ள­மான கோரிக்கை வைத்­தார்­கள். இந்த பண­யக்­கை­தி­களை இஸ்­ரே­லின் விமா­னப்­படை அதன் உள­வுத்­து­றை­யான மொஸாட்­டின் உதவி யோடு 146 பய­ணி­களை மீட்ட கதை உல­க­ம­றிந்­தது.

எதி­ரா­ளி­யின் கற்­ப­னைத் திற­னுக்கு எட்­டாத வகை­யில் தாக்­கு­தல் நடத்­து­வ­தில் உல­கத்­தி­றன் வாய்ந்­த­வர்­கள் இஸ்­ரே­லி­யர்­கள். அதே போல  ஈரா­னிய அணு உலை மீது துல்­லி­யத் தாக்­கு­தல் நடத்­திக் காட்­டி­னார்­கள் இஸ்­ரே­லி­யர்­கள். இது நடந்­தது 2007ம் வரு­டம். ரஷ்­யர்­கள் மிக­வும் மூர்க்­கத்­த­னம் கொண்­ட­வர்­கள். அது அவர்­க­ளின் ரத்­தத்­தில் ஊறி­யது. பல இடங்­க­ளில் அவர்­கள் மூர்க்­கத்­த­ன­மாக தாக்­கு­தல் நடத்தி இருக்­கி­றார்­கள்.  அமெ­ரிக்­கர்­களோ அதி­ந­வீன தொழில்­நுட்­பம் கொண்ட ஆயு­தங் களால் உலகை மிரட்டி வரு­ப­வர்­கள்.  இவர்­க­ளோடு ஒப்­பி­டும்­போது நமது இந்­திய விமா­னப்­படை எப்­படி உள்­ளது  எத்­தனை பலம் பொருந்­தி­யது?

 கடந்த காலங்­க­ளைப் பார்க்­கும்­போது தேவைப்­பட்ட நேரங்­க­ளில் எல்­லாம் இந்­திய விமா­னப் படை ஏரா­ள­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. சாத்­தி­ய­மற்­றது என்று நினைத்­த­தை­யெல்­லாம் சாத்­தி­ய­மாக்கி காட்டி உள்­ளது.  அந்த சம­யங்­க­ளில் எல்­லாம் நமது விமா­னப்­ப­டையை கண்டு உல­கமே அதி­ச­யித்­தது.  மற்ற நாடு­களை விட நமது ராணுவ வீரர்­க­ளின் அர்ப்­ப­ணிப்­பும், தியாக உணர்­வும் எல்லா நாட்டு சாக­சங்­க­ளை­யும் மிஞ்சி விடும்.  அதற்கு சமீ­பத்­திய உதா­ர­ணம்  புல்­வா­மா­வில் 41 இந்­திய வீரர்­கள் தீவி­ர­வா­தி­க­ளால் கொல்­லப்­பட்­ட­தற்கு பதி­லடி கொடுத்­தார்­கள் இந்­திய விமா­னப் படை­யி­னர். இந்த தாக்­கு­தல் பாகிஸ்­தா­னின் பால­கோட்­டில் நடந்­தது.  இந்த தாக்­கு­த­லுக்கு இரண்டு நாட்­க­ளுக்கு முன்பே பல்­வேறு பயிற்­சி­கள் ஈடு­பட்­டி­ருந்­தது நமது விமா­னப்­படை.  படைத்­த­ளங்­க­ளில் ஒவ்­வொரு பிரி­வும் இரண்டு நாட்­க­ளாக இரவு – பக­லாக இயங்­கிக் கொண்டே இருந்­தது.  அந்த விமான தளத்­தில் இருந்த தரைப்­பணி வீரர்­கள் கூட அந்த இரண்டு நாட்­கள் தூங்­க­வில்லை.

 தரைப்­பணி வீரர்­க­ளும் தூங்­கா­மல் இருந்­த­தற்கு கார­ணம் இருந்­தது.  பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரில் மட்­டும் தாக்­கு­தல் நடத்­தா­மல் பாகிஸ்­தான் மண்­ணி­லும் தாக்­கு­தல் நடத்த நமது ராணு­வத்­தி­னர் தயா­ரா­கவே இருந்­தார்­கள்.

 பிர­த­மர் அலு­வ­ல­கம்  தாக்­கு­த­லுக்கு பச்­சைக் கொடி காட்­டி­ய­தும் இந்­திய விமா­னப்­படை   செய­லில் இறங்­கி­யது.  தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது அதி­காலை நேரம். ஆனால், முதல் நாள் இர­வில் பல்­வேறு தளங்­க­ளில்  இருந்து இந்­திய விமா­னப்­ப­டை­யில் பல்­வேறு பிரி­வு­க­ளின் நிபு­ணத்­து­வம் வாய்ந்த விமா­னி­கள் தலை­மை­யில் இந்­திய விமா­னி­கள் தங்­க­ளது விமா­னங்­க­ளில் புறப்­பட்­ட­னர். இந்த நிபு­ணத்­து­வம் வாய்ந்த  விமா­னி­கள் அதா­வது  master pilotsதான் இந்­திய விமா­னப்­ப­டை­யின் போர் தந்­தி­ரங்­கள், வான்­வழி போர் உத்­தி­கள் ஆகி­ய­வற்றை வகுக்­கும் விமா­னி­கள்.

இவர்­க­ளு­டைய ஸ்குவாட்­ரன்­கள் அதற்­குப் பெயர்   green line squadron. இது போன்று எத்­தனை ஸ்குவாட்­ரன்­கள் இருக்­கின்­றன. என்­பது பரம ரக­சி­யம். இந்த மாஸ்­டர் பைலட்­கள் அனை­வ­ரும் குவா­லி­ய­ரில் அமைந்­துள்ள  Tactics and Air combat Development school  அதா­வது ` தந்­தி­ரோ­பாய  மற்­றும் வான்­வழி போர் மேம்­பாட்டு பள்­ளி’­யின் மாண­வர்­கள்.  இந்­தப் பள்ளி என்­பது அமெ­ரிக்க கடற்­ப­டை­யின் `Top Gun’  திட்­டத்­துக்கு இணை­யா­னது.  அன்று பால­கோட்­டிற்கு கிளம்­பிய நமது இந்­திய விமா­னப் ப­டை­யின் படை­யணி 1971க்குப் பிறகு இந்த துணைக்­கண்­டம் கண்ட மிகப்­பெ­ரிய தாக்­கு­தல் படை­யணி.

ஒரு முழு அள­வி­லான போருக்கே இந்­திய விமா­னப்படை தயா­ராக இருந்­தது.  பால­கோட்­டில் இந்­திய விமா­னப்­படை பயங்­க­ர­வாத முகாம்­களை சிதைத்­து­விட்டு திரும்பி வரும் வழி­யில் பாகிஸ்­தான் விமா­னப்­ப­டை­யின் Cap – CLOSE AIR PROTECTION UNIT)  அரு­கில் இருந்து  வான் பாது­காப்பு வழங்­கும் படை­யணி இந்­திய படையை இடை­ம­றித்­தது. ஆனால் அடுத்­த­டுத்த நொடி­க­ளில் அவர்­க­ளு­டைய ராடா­ரில் பல விமா­னங்­கள் தென்­பட, பாக் படை­யணி தலை தெறிக்க பறந்து ஒளிந்து கொண்­டது.  இது­தான் அந்­தத் தாக்­கு­த­லில் இருந்த தீவி­ரம்.

பால­கோட் தாக்­கு­தல் என்­பது இந்­தி­யா­விற்கு கிடைத்த மிகப்­பெ­ரிய வெற்றி. பாகிஸ்­தா­னுக்­குள் நுழைந்து தாக்­கி­னா­லும் அது தீவி­ர­வா­தி­க­ளின் முகாம் மீது நடத்­திய துல்­லிய தாக்­கு­தல் அதா­வது  surgical strike.  இந்த வெற்றி என்­பது  நமது ராணுவ வர­லாற்­றில்  பொன் எழுத்­துக்­க­ளால் பொறிக்­கப்­பட வேண்­டிய பக்­கங்­கள். இந்­தி­யா­வின் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்கை கண்டு உலக நாடு­களே வியந்­தன.  அதே நேரத்­தில் நமது விமா­னப்­ப­டை­யின்  அரு­மை­க­ளை­யும், பெரு­மை­க­ளை­யும் உல­கம் உணர்ந்து கொண்­டது.

 பல­ருக்­கும் தெரி­யாத விஷ­யம் ஒன்­றுண்டு. கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக உலக நாட்டு விமா­னப் படை­க­ளு­டன்  பல்­வேறு பயிற்­சி­கள் மற்­றும் போட்­டி­க­ளில் பங்­கு­பெற்று வல்­ல­ரசு நாடு­க­ளையே  ( அமெ­ரிக்கா உட்­பட )  வீழ்த்தி பதிவு செய்த வெற்­றி­கள் நம் இந்­திய விமா­னப்­படை  விமா­னி­க­ளின் போர்த்­தி­றன் மற்­றும் சிறந்த போர் உத்­தி­க­ளுக்கு சாட்சி! அமெ­ரிக்க விமா­னப்­ப­டை­யின் கர்­னல் கிரெக் நியூ­பெக் சில வரு­டங்­க­ளுக்கு முன்பு குவா­லி­ய­ரில் நடை­பெற்ற  விமா­னப்­படை பயிற்சி நிறை­வுக்கு வந்­தி­ருந்­தார். அப்­போது அவர் பேசும்­போது `கடந்த இரண்டு வாரங்­க­ளாக இந்த பயிற்சி முகா­மைப் பார்த்­தேன்.  இந்­திய விமா­னப் படை உல­கின் சிறந்த விமா­னப் படை­யு­டன் கூட கடி­ன­மாக மோதும் ஆற்­ற­லும், திற­னும் கொண்­டது.  இந்­திய விமா­னப் படை­யு­டன் போரி­டும் இன்­னொரு நாட்டு விமானி அவர்­களை குறைத்து மதிப்­பிட்­டால், அவ­ருக்­காக நான் வருத்­தப்­ப­டு­வேன்.  கார­ணம், அவர்  நிச்­ச­ய­மாக திரும்­பிச் செல்ல மாட்­டார்.’ அமெ­ரிக்­கா­வின் அலாஸ்கா மாநி­லத்­தில் உள்ள எல்­மாண்­டார்பே படைத்­த­ளத்­தில் நிலை­நி­றுத்­தப்­பட்­டுள்ள அமெ­ரிக்க விமா­னப்­ப­டை­யின் மூன்­றா­வது படை­ய­ணி­யின் தள­பதி கர்­னல், மைக் ஸ்நாட்க்­ராஸ் அவர்­கள், `இந்த பயிற்­சி­யின் முடிவு மிகப்­பெ­ரிய அதிர்ச்சி அளித்­தது. கார­ணம் இந்­தி­யர்­க­ளின் போர் உத்­தி­கள் நாங்­கள் நினைத்­தி­ருந்­ததை விட­வும் பன்­ம­டங்கு மேம்­பட்டு இருந்­தது. ஒரு திட்­டம் வேலை செய்­யா­விட்­டால் நொடிப்­பொ­ழு­தில் அதில் சிறு மாற்­றங்­கள் செய்து  திண­ற­டிப்­ப­தில் இந்­திய விமா­னி­கள் வல்­ல­வர்­கள் என்­ப­து­தான்.

 இப்­படி சர்வ வல்­லமை பொருந்­திய அமெ­ரிக்­கா­வின் விமா­னப்­படை இந்­திய விமா­னப்­ப­டை­யி­டம் மண்­ணைக் கவ்­வி­யது. மற்­று­மொரு சிரியா அல்­லது ஈராக்  போல இந்­தியா ஒரு மூன்­றாம் உலக நாடு என அலட்­சி­ய­மாக நினைத்­தி­ருந்த அமெ­ரிக்­கா­வின் பிட­ரி­யின் இந்­திய விமா­னப்­படை காட்­டிய திறம் வித்­தை­யில் அமெ­ரிக்க மற்­றும் மேற்­கு­லக நாடு­க­ளின்  பாது­காப்பு வட்­டா­ரங்­க­ளும் வியந்து போயின. எச்­ச­ரிக்­கை­யாக இருக்க தொடங்­கி­விட்­டது.  இதுவே இந்­திய விமா­னப் படை­யின் தாக்­கு­தல் நுட்­பங்­க­ளின் வெற்­றிக்­கும், அப­ரி­மி­த­மான அர்ப்­ப­ணிப்­புக்­கும் , திற­னுக்­கும் கிடைத்த வெற்றி.

 இதற்கு உதா­ர­ண­மாக ஒரு நிகழ்வை நினைவு கொள்­வோம்.  1971ம் வரு­டம். அப்­போது இந்­தியா – பாகிஸ்­தான் போர் நடந்­தது. அன்று இந்­திய விமா­னப்­ப­டைக்கு துணைக்­கண்­டத்­தில் சவால் விடக்­கூ­டிய அள­வுக்கு எதி­ரி­கள் இல்லை. பாகிஸ்­தான் விமா­னப்­ப­டை­யும் நொறுக்­கப்­பட்டு இருந்­தது.  இந்­தியா ஒரு மாபெ­ரும் வெற்­றியை நெருங்கி கொண்­டி­ருந்த நேரம்.

 அமெ­ரிக்கா பாகிஸ்­தா­னுக்கு ஆத­ர­வாக தனது `யு.எஸ்.எஸ். இண்­டி­பெண்­டன்ஸ்’  என்ற பெயர் கொண்ட 95 ஆயி­ரம் டன் எடை ராட்­சத  விமா­னம் தாங்கி போர்க்­கப்­பலை இந்­தி­யா­வுக்கு எதி­ராக வங்­காள விரி­குடா பகு­திக்கு அனுப்­பி­யது. ரஷ்­யா­வு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­திக் கொண்­டி­ருந்­தா­லும் இந்­திய விமா­னப் படை சும்மா கையை கட்­டிக்­கொண்டு வேடிக்கை பார்க்­க­வில்லை. உட­ன­டி­யாக செய­லில் இறங்­கி­யது. அமெ­ரிக்க கப்­பல் மீது தாக்­கு­தல் நடத்த காமி­காஸே தாக்­கு­தல் ( Kamikaze attack) நடத்த தயா­ரா­னது. அதா­வது தற்­கொ­லைப்­ப­டைத் தாக்­கு­தல். இரண்­டாம் உல­கப்­போ­ரில் ஜப்­பான் இந்த உத்­தியை பயன்­ப­டுத்­தி­யது. அப்­போது நமது விமா­னப்­ப­டை­யி­லி­ருந்த ஏரா­ள­மான வீரர்­கள் இந்த தற்­கொலை படைக்கு தயா­ரா­னார்­கள்.  அதில் 40 பேர் நாங்­கள் தயார் என்று கையெ­ழுத்­துப் போட்­டுக் கொடுத்­தார்­கள். இந்­திய அரசு அவர்­கள் குடும்­பத்தை காக்­கும் என்று உறு­தி­ய­ளித்­தது. ஆனால் அதற்­குள் சோவி­யத் ரஷ்­யா­வின்  கப்­பல் இந்­திய கடல் எல்­லைக்கு வந்­த­தால்  அமெ­ரிக்கா பின்­வாங்­கி­யது. அத­னால் இந்த தற்­கொ­லைத் திட்­டம் கைவி­டப்­பட்­டது. நம் வீரர்­க­ளின் தியா­கங்­க­ளெல்­லாம் எப்­போது பள்­ளிப் பாடங்­க­ளில் வரும்?