பாட்டிமார் சொன்ன கதைகள் – 222 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 28 ஜூன் 2019

 சூரியனை நோக்கி மலரும் செந்தாமரை!

உடனே ஜரத்­காரு, `` பிதிர்­களே, அந்­தக் கொடும்­பாவி நான் தான். இந்த ஆபத்­தான நிலை­யில் உங்­களை எப்­படி காப்­பாற்ற முடி­யும் என்று தெரி­ய­வில்­லையே! நான் என்ன செய்­வேன்?’ என்று ஏஙித் தலை­யில் அடித்­துக் கொண்­டார்.

 பளிச்­சென்று தியா­னம் கலைந்­து­விட்­டது . தாம் இருந்த மரத்­த­டியை விட்டு வேறு எங்­கும் போக­வில்­லை­யென்­றும், உள்­ளம்­தான் அப்­படி அலைந்து திரிந்­த­தென்­றும் தெரிந்து கொண்­டார்.

` ஜரத்­கா­ருவே! உன்­னு­டைய குலத்­திற்­குப் புத்­திர சந்­தா­னம் வேண்­டு­மென்­றா­வது விவா­கம் செய்து கொண்டு, தர்­ம­ப­ரி­பா­ல­ன­மும், சாஸ்­திர பரி­பா­ல­னும் செய்ய வேண்­டி­ய­து­தான். அது­தான் உன்­னு­டைய பிதிர்­க­ளுக்கு  நீ இனி­மே­லா­வது செய்ய வேண்­டிய பெரிய நன்மை!’ என்று தமக்­குள் தாமே சொல்­லிக்­கொண்­டார். இவர் உள்­ளம் அந்த வேத­னையை அப்­ப­டியே அனு­ப­வித்­துக் கொண்­டி­ருந்­தது.

 ஆனால் பெண்­க­ளின் பெயர்­களை கேட்­ட­துமே ஜரத்­கா­ரு­வுக்­குப் பிடிக்­க­வில்லை. அவர்­க­ளோடு வாழும் சொர்க்­க­மும் வேண்­டா­மென்­றும் தோன்­றி­யது. மறு­ப­டி­யும் உலக முழு­வ­தும் சுற்­றத் தொடங்­கி­னார். எந்த கன்­னி­கையை மணம் செய்து கொள்­ள­லா­மென்று கவ­லை­யோடு.

 அந்த உத்­த­ம­மான பிரம்­ம­சா­ரிக்­குப் பெண் கொடுக்க வேணு­மென்று பல முனி­வர்­க­ளும், அர­சர்­கள் போட்டி போட்­டார்­கள். செல்­வ­மான – சிங்­கா­ர­மான – அந்­தப் பெயர்­க­ளைக் கேட்­ட­தும் `` வேண்­டாம், ஐயோ வேண்­டாம் ‘ என்று ஓடிப் போய்­வி­டு­வார். பேய் கண்­ட­வர் போலே.

 ஒரு சம­யம் வாசுகி என்ற நாக­ராஜா இவ­ரி­டம் வந்து, ` என் தங்­கையை விவா­கம் செய்து கொடுக்­கச் சித்­த­மா­யி­ருக்­கி­றேன். என்று சொன்­னான். ` அவள் பெய­ரென்ன ?’ என்று வெறுப்­போடு கேட்­டார். அவன் சொன்­ன­தும் திடுக்­கிட்­டார். ` அது என் பெய­ரல்­லவா > அவள் பெய­ரைச் சொல்­லும்’ என்று மறு­ப­டி­யும்­கேட்­டார்.

 அவள் பெய­ரும் ஜரத்­காரு தான் என்று உறு­தி­யா­யிற்று. அந்­தப் பெய­ரி­லும் புக­ழி­லும் உள்ள மோகம் அவ­ளையே விவா­கம் செய்து கொள்­ளும்­படி தூண்­டி­யது. பிதிர்­க­ளூக்­கா­கத் துற­வை­யும் துறந்து ஓர் ஆசி­ர­மம் அமைத்­துக் கொண்டு இல்­ல­றம் நடத்த எண்­ணி­னார்.

 சாஸ்­தி­ரோக்­த­மாக அக்­கினி சாட்­சி­யாய் ஜரத்­கா­ரும் ஜரத்­கா­ருவை பாணிக்­கி­ர­ணம் செய்து கொண்­டார். அவளோ கை கொடுத்த்­தோடு, இரு­த­யத்­தை­யும் இவ­ருக்கே உரி­மை­யாக்­கி­னாள். தர்ம பரி­பா­ல­னத்­தி­லும் சாஸ்­திர பரி­பா­ல­னத்­தி­லும் கூட இவ­ருக்­குக் கை கொடுத்து உதவி, உண்­மை­யான வாழ்க்­கைத் துணை­வி­யா­னாள். நாள­டை­வில் அவள் குணத்­தி­லும் இவ­ருக்கு மோகம் ஏற்­பட்­டது. அவ­ளு­டைய பரி­சுத்­த­மான காத­லை­யும் காத­லிக்­கத் தொடங்­கி­னார். இப்­போது இல்­ல­றத்­திற்­கும் நல்ல மந்­தி­ர­மாகி விட்­டது ஜரத்­காரு என்ற பெயர்!

ஜரத்­கா­ரு­வுக்கு ஜரத்­கா­ரு­வி­டம்  ஒரு புத்­தி­ரர் பிறந்­தார். அந்­தப் புத்­தி­ரரை நல்ல முறை­யில் வளர்த்து வித்­தி­யாப்­பி­யா­ச­மும் சாஸ்­தி­ரங்­க­ளி­லும் கரை கண்­ட­வ­ராய், உயர்ந்த மன­முள்­ள­வ­ராய்  இருந்­தார். பிதா­வைக் காட்­டி­லும் மேலான  குணத்­தோடு, எல்லா ஜனங்­க­ளி­டத்­தி­லும் அரு­ளு­டை­ய­வ­ரா­க­வும், தர்­மத்­தில் பற்­றுள்­ள­வ­ரா­க­வும் தியாக புத்­தி­யுள்­ள­வ­ரா­க­வும் விளங்­கி­னார். இவ­ரு­டைய அறி­வும், அவ­ளு­டைய அன்­பு­வும் எவ்­வ­ளவூ அதி­க­மாய்ப் பிர­கா­சித்­தன. புத்­திர ரத்­தி­னத்­திலே ஆனால் `` கடை­சி­யாக நாமும் முழ்­கிப் போவோமோ சம்­சார் சமுத்­தி­ரத்­திலே ‘ என்று கவலை ஏற்­பட்­டது முனி­வ­ருக்­கும்

 பிறகு ஒரு நாள் ஜரத்­காரு முனி­வர் தியா­னத்­தில் அமர்ந்­த­போது, எப்­ப­டியே மறு­ப­டி­யும் பழைய காட்­டை­யும் அந்த பயங்­க­ர­மான பள்­ளத்­தை­யும் கண்­டார். எனி­னும் அங்கே தலை­கீ­ழா­கத் தொங்­கிக் கொண்­டி­ருந்த ரிஷி­களை காண­வில்லை. அப்­போது ` ஜரத்­கா­ருவே உன் பிதிர்க்­கல் கரை­யே­றிப் போய்­விட்­டார்­கள்’ என்று ஒரு குரல் வந்­தது. அந்த பள்­ளத்­தை­யும் மோனத்­தை­யும் கடைந்து கொண்டு ஏதோ ஒர் ஆகாச வாணியோ பாதாள வாணியோ வரு­வது போல.

 ` உன் பெய­ரைக் காப்­பாற்­றிக் கொண்­டார் ஜரத்­காரு, நீயும் கரை­யே­றி­விட்­டாய்’ என்று முனி­வர் தமக்­குத் தாமே சொல்­லிக்­கொண்­டார்.

 காத­லும் கங்­கை­யும்

 ` அடடா என்ன களைப்பு ‘ என்று எண்­ணிக்­கொண்டே கரை­யோ­ர­மாக வந்­த­வன் தாக சாந்தி செய்து கொள்ள வேண்­டு­மென்ற்ம் கங்­கை­யின் வெள்­ளத்தை நோக்­கி­னாள். அதே சம­யத்­தில் ` அது என்ன ஜோதி ? செள­த­ரி­யமே அப்­ப­டிக் கரை­பு­ரண்டு வெள்­ள­மி­டு­கி­றதா ? என்று பிர­மித்­தான்.’

` அப்­ச­ரஸா ? கந்­தர்வ கன்­னி­கையா ? நாக கன்­னி­கையா ? லட்­சுமி தேவியே வந்து விட்­டாளோ ? என்­றெல்­லாம்  மயங்­கு­வது காத­லர்­க­ளுக்கு இயல்­பு­தானே ! மெள்ள மெள்­ளச் சித்­தம் நிலை பெற்­றது. புத்தி கொஞ்­சம் நிதா­ன­ம­டைந்­தது.

 அப்­போ­து­தான் நீரா­டிச் சுத்­த­மான மேனி­யில் சுத்­த­மான ஆடை தரித்து வரு­கி­ற­வ­ளைப் போல், கூந்­த­லை­விட்டு அவித்து இரண்டு கைக­ளி­னா­லும் கோதி ஆற்­றிக்­கொண்­டி­ருந்­தாள். அந்­தக் கூந்­தல் அலை­ய­லை­யா­கச் சுருண்டு புர­ளக் கங்­கை­யின் வெண்­மை­யான நுரை போலி­ருந்த மெல்­லிய ஆடை, தீச்­சு­டர் போன்ற தேகக் காந்­தியை விசி­றிச் சுவாலை செய்­வது போல் அந்­தக் காற்­றில் அலைந்து கொண்­டி­ருந்­தது. ` எந்த அர­சி­ளங்­கு­ம­ரிக்கு இந்­தத் தெய்­வீக அழகு உண்டு ?’ என்ற ஆலோ­ச­னை­யில் மூழு­கிப் போனான் அர­சன்.

 தனித்­தி­ருந்த அப்­பெண்­மணி தனி­மை­யாக வந்த அர­ச­னைப் பார்த்­து­விட்­டாள். ஆ, ஆ, அந்த கடைக்­கண் ஓட்­டம் ஏதோ ஒரு மாய­மான கங்­காப் பிர­வாக போலப் பொங்கி வந்து அர­ச­னுள்­ளத்­திற்­குள்­ளேயே பிர­வே­சித்து விட்­டது. அப்­போது தோன்­றிய அந்­தப் புன்­சி­ரிப்­பை­யும் சூரி­யனை நோக்கி மல­ரும் செந்­தா­ம­ரைப் போல் தன்னை நோக்கி மலர்ந்த முக­ம­ல­ரை­யும் ஏதொ ஒரு சொப்­பன லோகத்­தில் பார்ப்­பது போலப் பார்த்­தார்.

(தொட­ரும்)