சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 398– எஸ்.கணேஷ்

26 ஜூன் 2019, 03:17 PM

நடி­கர்­கள்  :   விஜய், காஜல் அகர்­வால், வித்­யுத் ஜம்­வால், சத்­யன், ஜெய­ராம், மற்­றும் பலர். இசை : ஹாரிஸ் ஜெய­ராஜ், ஒளிப்­ப­திவு : சந்­தோஷ் சிவன், எடிட்­டிங் : ஏ. ஸ்ரீகர் பிர­சாத், தயா­ரிப்பு : எஸ். தாணு (வி கிரி­யே­ஷன்ஸ்), திரைக்­கதை, இயக்­கம் : ஏ.ஆர். முரு­க­தாஸ்.

இந்­திய ரா­ணு­வத்­தில் அதி­கா­ரி­யாக பணி­பு­ரி­யும் ஜக­தீஷ் தன­பால் (விஜய்) காஷ்­மீ­ரி­லி­ருந்து விடு­மு­றைக்கு தனது இருப்­பி­ட­மான மும்பை வரு­கி­றார். வீடு திரும்­பும் வழி­யில் அவ­ரது பெற்­றோ­ரும், சகோ­த­ரி­க­ளும் பெண் பார்க்க அழைத்­துச் செல்­கி­றார்­கள். பெண் பார்க்­கும் பட­லத்­தின் போது பெண் மாடர்­னாக இல்லை என்று கூறி ஜக­தீஷ் மறுத்­து­வி­டு­கி­றார். நிஜத்­தில் அல்ட்ரா மாடர்ன் பெண்­ணான நிஷா (காஜல் அகர்­வால்), யுனி­வர்­சிட்டி அள­வில் குத்­துச்­சண்டை வீராங்­க­னை­யாக இருக்­கி­றார். உண்மை புரிந்து நிஷா­வி­டம் காதலை தெரி­விக்­கும் ஜக­தீஷை, தன்னை மறுத்த கோபத்­தால் நிஷா­வும் நிரா­க­ரிக்­கி­றார்.

மும்­பை­யில் போலீ­ஸாக இருக்­கும் தனது நண்பன் பாலா­ஜி­யோடு (சத்­யன்) பய­ணம் செய்­யும்­போது அந்த பஸ்­ஸில் திருடு நடக்­கி­றது. திரு­டனை தேடும்­போது தப்­பிக்­கும் நபரை ஜக­தீஷ் துரத்­து­கி­றான். அந்த நேரத்­தில் பஸ்சில் குண்டு வெடித்து பலர் இறக்க, ஜக­தீஷ் துரத்­திய தீவி­ர­வா­தியை போலீ­சிடம் ஒப்­ப­டைக்­கி­றான். ஆஸ்­பி­ட­லில் இருந்து தப்­பிக்­கும் தீவி­ர­வா­தியை தன் வீட்­டில் மறைத்து வைத்­தி­ருக்­கும் ஜக­தீஷ், தன்­னி­டம் மாட்­டி­ய­வ­னைப் போல் பல ஸ்லீப்­பர் செல்­கள் இருப்­ப­தும் அவர்­க­ளுக்கு கொடுத்த வேலை­யின்­படி குண்டு வைப்­ப­தைத் தவிர திட்­டங்­கள் எது­வும் தெரி­யாது என்­றும் தெரிந்து கொள்­கி­றான். அவனை தப்­பிக்­க­விட்ட போலீஸ் அதி­கா­ரி­யி­டம் நானே உன்னை கொன்­றால் உண்மை வெளி­யாகி உனது குடும்­பமே அவ­மா­னப்­பட்டு அழிந்­து­வி­டும் என்று எச்­ச­ரிக்­கி­றான். தீவி­ர­வா­தி­க­ளுக்கு உத­விய குற்­றத்­திற்­காக அந்த அதி­காரி தற்­கொலை செய்து கொள்­கி­றார். ஜக­தீஷ் தன்­னி­டம் உள்ள தீவி­ர­வா­தியை தப்­ப­விட்டு அவனை தனது ரா­ணுவ நண்பர்கள் குழு­வோடு பின்­தொ­டர்­கி­றான். தீவி­ர­வா­தி­யும் அவன் சந்­திக்­கும் நபர்­க­ளு­மாக மொத்­தம் பன்­னி­ரண்டு ஸ்லீப்­பர் செல்­களை ஜக­தீ­ஷும் அவன் நண்பர்களும் ஒரே நேரத்­தில் கொல்­கின்­ற­னர்.

தங்­க­ளது சதித்­திட்­டம் தோற்­ற­தோடு தனது தம்­பி­யும் அதில் இறந்­த­தால் கோப­மா­கும் தீவி­ர­வா­தக்­குழு தலை­வன் (வித்­யுத் ஜம்­வால்) இதில் ஈடு­பட்­ட­வர்­கள் ரா­ணு­வத்­தி­னர் என்­பதை அறிந்து அவர்­கள் குடும்ப நபர்­க­ளுக்கு குறி­வைக்­கி­றான். இந்த திட்­டத்தை அறிந்து கொள்­ளும் ஜக­தீஷ் தனது நண்பனின் தங்­கைக்கு பதி­லாக தன் தங்­கையை அனுப்­பு­கி­றான். கடத்­தப்­பட்ட பெண்­களை கொல்­லும் நேரத்­தில் தனது வளர்ப்பு நாயின் உத­வி­யு­டன் ஜக­தீஷ் அந்த இடத்­திற்கு வந்து தீவி­ர­வா­தி­களை கொன்று பெண்­களை காப்­பாற்­று­கி­றான். இதற்­கி­டையே ஜக­தீ­ஷும், நிஷா­வும் ஊடல்­க­ளுக்­குப் பிறகு ஒரு­வரையொரு­வர் நேசிக்­கத் தொடங்­கு­கின்­ற­னர்.

தனது திட்­டங்­க­ளின் தோல்­விக்கு பின்­னால் இருப்­பது ஜக­தீஷ் என்று தெரிந்து கொள்­ளும் தீவி­ர­வா­தி­கள் தலை­வன், ஜக­தீ­ஷின் நண்பன் ஒரு­வனை பொது­மக்­க­ளோடு குண்டு வைத்து கொல்­கி­றான். பிற நண்பர்களை காப்­பாற்­று­வ­தற்­காக ஜக­தீஷ் அவர்­கள் சொல்­லும் வேலை­களை செய்­கி­றான். எதி­ரி­களை சந்­திக்க செல்­வ­தற்கு முன்­னால், போரில் காய­ம­டைந்த முன்­னாள் ரா­ணுவ வீரர்­கள் உத­வி­யு­டன் தீவி­ர­வா­தி­கள் தலை­வ­னை­யும் ஸ்லீப்­பர் செல்­க­ளுக்கு ஆணை­யி­டும் திட்­டங்­க­ளை­யும் மொத்­த­மாக அழிப்­ப­தற்கு திட்­டம் தீட்­டு­கி­றான். அதன்­படி, ஜக­தீ­ஷின் உட­லுக்­குள் உள்ள சிப் மூல­மாக அவனை பின்­தொ­ட­ரும் அவ­னது நண்பன் அவர்­கள் சந்­திக்­கும் கப்­ப­லில் குண்டு வைக்­கி­றான்.

தீவி­ர­வா­தி­கள் தலை­வன் மூல­மாக அவர்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருக்­கும்  பாது­காப்பு துறை இணை செய­லா­ளர் கமா­ரு­தீன் பற்றி தெரியவரு­கி­றது. கமா­ரு­தீன் மூல­மாக தன்­னை­யும், நண்பர்களையும் தீவி­ர­வா­தி­க­ளாக சித்­த­ரித்து கொல்­வ­தோடு ரா­ணு­வத்­தி­லும் ஸ்லீப்­பர் செல்­களை உண்­டாக்­கப்­போ­வது பற்றி தெரிந்து அதிர்ச்சி அடை­கி­றான் ஜக­தீஷ். எதி­ரியை உணர்ச்­சி­வ­யப்­பட வைத்து அவ­னோடு சண்­டை­யிட்டு பட­கில் தப்­பிக்­கி­றான். ஜக­தீ­ஷின் திட்­டப்­படி குண்டு வெடித்து கப்­ப­லோடு எதி­ரி­க­ளின் திட்­டங்­க­ளும் அழிந்து ஸ்லீப்­பர் செல்­கள் செயல்­பட முடி­யா­மல் போகி­ன்றன. கமா­ரு­தீனை சந்­திக்­கும் ஜக­தீஷ் உண்­மை­களை வெளிப்­ப­டுத்­தப்­போ­வ­தாக பய­மு­றுத்­து­வ­தால் கமா­ரு­தீன் தற்­கொலை செய்து கொள்­கி­றார். விடு­முறை முடிந்துபிற ரா­ணுவ வீரர்­க­ளோடு ஜக­தீ­ஷும் காஷ்­மீ­ருக்கு கிளம்­பு­கி­றான். உற­வு­களை பிரிந்து நாட்­டிற்­காக உழைக்­கும் வீரர்­களை சுமந்து ர­யில் புறப்­ப­டு­கி­றது.