பிசினஸ் : வேளாண்மை சார்ந்த தொழில்கள்...!

பதிவு செய்த நாள் : 20 ஜூன் 2019

வேளாண்மை என்­பது தொன்­று­தொட்டு நம் நாட்­டில் நடப்­பில் இருக்­கும் தொழில். உழ­வின்றி உல­கம் இல்லை என்­பது உண்­மை­யான கூற்று. வேளாண்­மை­யில் உற்­பத்தி செய்­யப்­ப­டும் பொருட்­கள் அனைத்­தும் நம் வயிற்­றுக்கு உண­வாக செல்­வ­தில்லை. எல்லா இடத்­தி­லும் எல்லா பொரு­ளும் விளை­வ­தில்லை. உணவை பதப்­ப­டுத்­து­வது இந்த குறைக்கு ஒரு சிறந்த நிவா­ர­ண­மாக இருக்­கி­றது. வேளாண்மை பொருட்­களை மூல­த­ன­மாக வைத்து இயங்­கும் தொழில்­கள் வேளாண் சார்ந்த தொழில்­கள் எனப்­ப­டும். இவை வேளாண் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுப் பொருட்­களை ஏற்­று­மதி செய்­யும் நிறு­வ­னங்­கள், வேளாண் இடு­பொ­ருட்­கள் (விதை­கள், உரங்­கள்) தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­கள் ஆகும்.

வேளாண் விதைத் தொழில்

விளை பொருட்­களை உற்­பத்தி செய்­வ­தில் பெரும் பங்கு வகிப்­பது விதை­கள் மற்­றும் உரங்­கள். நல்ல விதை­யின்றி விளைச்­சல் இல்லை. தர­மான விதை­கள் தான் விளை பொருட்­க­ளின் உற்­பத்­திக்கு முன்­னோ­டி­யா­கத் திகழ்­கி­றது. விதை­கள் உற்­பத்தி செய்­யும் தொழி­லின் வயது சுமார் நாற்­பது வருட காலம். விதைத்­தொ­ழி­லில் முக்­கிய பங்கு வகிப்­பது பொதுத்­துறை. பொதுத்­து­றை­யில் தேசிய விதைக் கழ­கம், இந்­திய மாநில பண்ணை கூட்­டவை, மாநில விதைக் கழ­கங்­கள் மற்­றும் மாநில பண்­ணைக் கழ­கம் ஆகி­யவை அடங்­கும். இவை மாநில வேளாண் பல்­க­லைக் கழ­கங்­கள் மற்­றும் இந்­திய வேளாண் ஆராய்ச்சி நிறு­வ­னம் முத­லி­யவை கண்­டு­பி­டிக்­கும் விதை­களை உற்­பத்தி செய்து விற்­பனை செய்­கின்­றன. இந்­தி­யா­வில் சுமார் இரு­நூறு முதல் ஐநூறு தனி­யார் விதை நிறு­வ­னங்­கள் உள்­ளன. இந்­தி­யா­வில் 50 லட்­சம் மதிப்­புள்ள விதைத் தொழில் மக்­க­ளின் உண­வுப் பழக்­க­வ­ழக்க மாறு­த­லி­னால் வியக்­கத்­தக்க மாற்­றத்தை அடைந்து கொண்டு இருக்­கி­றது.

தமி­ழ­கம், மேற்கு மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா, குஜ­ராத், தெற்கு ராஜஸ்­தான் மற்­றும் ஆந்­தி­ரா­வில் விவ­சா­யி­கள் வியா­பார குறி­யிட்ட விதை­களை அதி­கம் பயி­ரி­டு­கின்­ற­னர். சின்­ஜென்டா, இண்டோ - அமெ­ரிக்­கன் விதை­கள், மான்­சான்டோ இந்­தியா, பய­னி­யர் விதை­கள் முத­லிய பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் இந்த முன்­னேற்­றத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தில் முன்­னோ­டி­யாக இருக்­கின்­றன. இத்­த­கைய சூழ்­நி­லை­யில் இந்­திய நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய ஆராய்ச்­சித்­தி­றன், வியா­பார யுக்தி முத­லி­ய­வற்­றில் அதிக கவ­னம் செலுத்தி முன்­னேற வேண்­டிய சூழ்­நி­லை­யில் இருக்­கின்­றன. இனி­வ­ரும் காலங்­க­ளில் மர­பு­வழி மாற்­றப்­பட்ட விதை­க­ளின் ஆதிக்­கம் அதி­க­மாக இருக்­கும் என்­பது ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளின் கூற்­றாக இருக்­கி­றது.

உரங்­கள்

வேளாண் இடு­பொ­ருட்­க­ளில் உரங்­கள், உணவு உற்­பத்­தி­யில் பிர­தான பங்கு வகிக்­கி­றது. ஒரு மனி­த­னின் வாழ்க்­கைக்கு உணவு, காற்று, நீர் எப்­படி தேவை­யாக இருக்­கி­றதோ அதே போல் பயிர் வளர்ச்­சிக்கு நிலம், நீர், உரம் மூன்­றும் முக்­கி­ய­மா­கத் திகழ்­கின்­றன. உரங்­கள் இரண்டு வகைப்­ப­டும். அவை, உயிர்­பொ­ருள் உரம் மற்­றும் உயிர்­பொ­ருள் சார்­பில்­லாத உரம்.

வேதி­யி­யல் பொருள் கலந்த உரங்­களை அதி­கம் பயன்­ப­டுத்­தி­ய­தால் கலப்­ப­ட­மற்ற மாட்­டுப்­பா­லி­லும், உன்­ன­த­மான தாய்ப்­பா­லி­லும் வேதி­யி­யல் பொருள் கலந்­தி­ருப்­ப­தாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன. இத்­த­கைய சூழ்­நி­லை­யில் உயிர் உரங்­க­ளின் பங்கு முக்­கி­ய­மா­கக் கரு­தப்­ப­டு­கி­றது.

உணவு பத­னி­டும் தொழில்

உணவு பத­னி­டு­வது தொன்­று­தொட்டு நம் நாட்­டில் நடை­மு­றை­யில் இருந்து வரு­கி­றது. நம் வீட்டு பாட்­டி­யின் கைப்­பக்­கு­வம், இன்று வளர்ந்து வரும் ஒரு தொழில். இன்­றைய கணினி யுகத்­தில் அவ­ச­ர­க­தி­யில் மக்­கள் ஓடிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். இத்­த­கைய சூழ்­நி­லை­யில் உட­னடி உணவு வகை­க­ளும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவு வகை­க­ளும் அவ­சர நேரத்­தில் கைகொ­டுக்­கின்­றன. உணவு பத­னி­டும் தொழில்­க­ளா­னவை பழங்­கள் மற்­றும் காய்­கள் பத­னி­டும் தொழில், மீன் பத­னி­டும் தொழில், பால் பத­னி­டும் தொழில் எனப் பல்­வ­கைப்­ப­டும். இந்­தி­யர்­க­ளி­டம் செல­வி­டக்­கூ­டிய வரு­மா­னம் அதி­கம் இருப்­ப­தால் உணவு பழக்க வழக்­கங்­கள் மாறி வரு­கின்­றன. இத­னால் தானி­யங்­கள், பருப்பு வகை­கள், உப்பு சர்க்­கரை, நறு­ம­ணப்­பொ­ருட்­கள் இவை­க­ளில் செல­வி­டும் தொகை குறைந்து பால் பொருட்­கள், மாமி­சம், முட்டை, மீன், பழங்­கள், பானங்­கள் முத­லி­ய­வற்­றில் செல­வி­டும் தொகை அதி­க­ரித்­து­விட்­டது.

உணவு மற்­றும் வேளாண் பொருட்­க­ளுக்­கான மதிப்பு மக்­க­ளி­டையே உயர்ந்து கொண்டு வரு­கி­றது. ஏனென்­றால் விற்­ப­னை­யில் உணவு பத­னி­டும் தொழில் 150 சத­வீ­தத்­திற்கு மேல் வளர்ந்து வரு­கி­றது. பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் பல இத் தொழி­லில் நுழைந்­துள்­ளன. வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பப்­ப­டும் உண­வுப் பொருட்­கள் இந்­திய தயா­ரிப்பு என்ற முத்­தி­ரை­யோடு அனுப்­பப்­ப­டு­கின்­றன. பாலி­லி­ருந்து, பால்­ப­வு­டர், வெண்­ணெய், நெய், பன்­னீர், ஐஸ்­கி­ரீம் முத­லி­யவை தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இந்­தி­யா­வில் தொன்று தொட்டு இந்­தத் தொழில் குடி­சைத் தொழி­லாக இருந்து வந்­தி­ருக்­கி­றது. இந்­தி­யா­வில் வரும் 2020ல் பால் உற்­பத்தி 220-250 மில்லி லிட்­டரை எட்­டும் என்று கருத்­துக் கணிப்பு கூறு­கி­றது.

வேளாண் சார்ந்த தொழி­லில் வாய்ப்­பு­கள்

இந்­தி­யா­வின் மாறு­பட்ட தட்­ப­வெப்­ப­நிலை, பல­வகை உண­வுப் பொருட்­கள் உற்­பத்­திக்கு வழி­வ­குக்­கி­றது. 900 மில்­லி­யன் மக்­கள் தொகை­யும் அதில் 250 மில்­லி­யன் மத்­திய வர்க்­கத்­தி­ன­ரும் இந்­தி­யா­வின் வளர்ந்து வரும் சந்­தைத் திற­னுக்கு எடுத்­துக்­காட்டு. ஒரு சரா­சரி இந்­தி­யன் வீட்டு செல­வில் சுமார் ஐம்­பது சத­வீ­தம் உண­வுப்­பொ­ருட்­க­ளுக்கு செல­வி­டு­கி­றான். இந்­தி­யா­வின் மக்­கள் தொகை தொழி­லுக்­குத் தேவை­யான ஆட்­கள் பற்­றாக்­கு­றை­யைக் குறைக்­கி­றது. பழங்­கள் மற்­றும் காய்­க­றி­கள் பத­னி­டும் வர்த்­த­கத்­தில் இந்­தி­யா­வின் பங்கு ஒரு சத­வீ­தத்தை விட குறை­வா­னது. பழங்­க­ளில் மாம்­ப­ழம், திராட்சை, வாழைப்­ப­ழம், சப்­போட்டா, இலந்­தைப்­ப­ழம், மாதுளை, சீதாப்­ப­ழம் முத­லி­ய­வற்­றிற்கு அதிக ஏற்­று­மதி வாய்ப்­பு­கள் உள்­ளன. காய்­க­றி­க­ளில் வெண்டை, பாகற்­காய், பச்சை மிள­காய் முத­லி­ய­வை­க­ளுக்கு ஏற்­று­மதி வாய்ப்­பு­கள் அதி­கம் உள்­ளன.

வேளாண் சார்ந்த தொழில்­க­ளில் இந்­தி­யா­வில் வாய்ப்­பு­கள் அதி­க­ரிப்­ப­தற்­கான முக்­கி­யக் கார­ணங்­கள் பின் வரு­மாறு : திட­மான விவ­சா­யம், நிறைய வேளாண் விளை பொருட்­களை விளை­விப்­ப­தற்­கான சூழ்­நிலை, வரு­டம் முழு­வ­தும் எளி­தில் கிடைக்­கக் கூடிய பொருட்­கள், நிலப்­ப­கு­திக்கு கட்­டுப்­பா­டில்லை, அதி­க­மான மனி­த­வ­ளம், தேவைக்கு அதி­க­மாக ஏற்­று­மதி செய்­யக் கூடிய பொருட்­கள், மாநில அர­சின் உதவி, துடிப்­புள்ள பொரு­ளா­தா­ரம், திட­மான உள்­நாட்டு சந்தை, உலக சந்­தைக்­குள்ள பொருட்­கள், இந்­தி­யா­வில் பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளின் இருப்பு, பதப்­ப­டுத்­து­வ­தற்கு உள்ள திறமை.

வேளாண் சார்ந்த தொழில்­களை ஊக்­கு­விக்­கும் நிறு­வ­னங்­கள்

விளை பொருட்­கள் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுப் பொருட்­க­ளின் வளர்ச்சி மற்­றும் ஏற்­று­மதி முத­லி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக 1986-ஆம் ஆண்டு வேளாண் உண­வுப் பொருட்­களை பதப்­ப­டுத்­து­தல் மற்­றும் ஏற்­று­மதி நிறு­வ­னம் உரு­வாக்­கப்­பட்­டது. வேளாண் ஏற்­று­ம­தியை அதி­கப்­ப­டுத்­து­வ­தற்­கும், அந்­நிய செலா­வ­ணியை அதி­கப்­ப­டுத்­து­வ­தற்­கும், வேளாண் பெரு­மக்­க­ளுக்­கும் அதிக வரு­வாய் ஈட்­டு­வ­தற்­கும் விளை பொருள்­க­ளின் ஏற்­று­ம­தியை ஊக்­கப்­ப­டுத்­து­வது மிக­வும் அவ­சி­யம்.

தேங்­காய் உற்­பத்தி மற்­றும் அத­னைச் சார்ந்த தொழில்­களை முன்­னேற்­று­வ­தற்­காக 1981-ம் ஆண்டு கொச்­சினை தலை­மை­ய­க­மா­கக் கொண்டு உரு­வாக்­கப்­பட்­டது தேங்­காய் வளர்ச்சி மன்­றம்.

தேங்­காய் வளர்ச்சி மன்­றத்­தின் குறிக்­கோள்­கள். தர­மான தென்­னங்­கன்­று­களை உற்­பத்தி செய்­தல், தேங்­காய் சாகு­படி செய்­யும் நிலங்­களை அதி­க­ரித்­தல், தேங்­காய் உற்­பத்­தியை அதி­க­ரித்­தல், ஒருங்­கி­ணைந்த பூச்சி மற்­றும் நோய் கட்­டுப்­பாடு, தேங்­காய் சார்ந்த தொழில்­களை வளப்­ப­டுத்­து­வது.

இத்­து­டன் வங்­கி­கள் பல வேளாண் தொழில்­க­ளுக்கு பிரத்­யேக கட­னு­தவி அளிக்­கின்­றன. விஞ்­ஞா­னம் வேக­மாக வளர்ந்து கொண்­டி­ருக்­கும் இக்­கா­லத்­தில் வேளாண்­மையை மட்­டும் சார்ந்து விவ­சா­யி­கள் இருக்­கக் கூடாது. அத­னு­டன் வேளாண் சார்ந்த தொழில்­களை செய்ய முன் வர­வேண்­டும். வரும் காலங்­க­ளில் வேளாண்­மைத் தொழில் செய்ய யாருமே இல்லை என்ற நிலை உரு­வா­கக்­கூ­டாது. படித்த இளை­ஞர்­கள் தங்­க­ளுக்­குக் கல்வி அளித்த தந்­தை­யின் விவ­சா­யத் தொழிலை மற­வா­மல் வேளாண்­மை­யில் புது­மையை புகுத்தி வேளாண் சார்ந்த தொழில்­களை செய்ய முன்­வர வேண்­டும். பல நிறு­வ­னங்­கள் வேளாண் தொழி­லுக்கு பல்­வேறு உதவி திட்­டங்­களை அளிப்­பதை அறிந்து அவற்றை நல்ல முறை­யில் பயன்­ப­டுத்தி வேளாண்மை சிறக்­கப் பாடு­பட வேண்­டும்.