‘வெள்ளை யானை’ பேசும் விவசாய பிரச்னை!

19 ஜூன் 2019, 02:14 PM

தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ படத்­தின் மூலம் இயக்­கு­ன­ராக அறி­மு­க­மா­ன­வர் சுப்­பி­ர­ம­ணி­யம் சிவா. அதன் பிறகு ‘பொறி,’ ‘யோகி,’ ‘சீடன்’ படங்­களை இயக்­கி­னார். ‘வட­சென்னை’ படத்­தில் நடித்­தார். ‘அசு­ரன்’ படத்­தில் நடித்து வரு­கி­றார்.

தற்­போது ‘வெள்ளை யானை’ என்ற படத்தை இயக்கி வரு­கி­றார். இதனை வொயிட் லேம்ப் டாக்­கீஸ் என்ற நிறு­வ­னத்­தின் சார்­பில் எஸ். வினோத்­கு­மார் தயா­ரிக்­கி­றார். இதில் சமுத்­தி­ர­கனி, ஆத்­மியா, ‘யோகி’ பாபு, இயக்­கு­னர் மூர்த்தி, பாவா செல்­லத்­துரை உட்­பட பலர் நடிக்­கி­றார்­கள். விஷ்ணு ரங்­க­சாமி ஒளிப்­ப­திவு செய்­கி­றார்.

தஞ்­சா­வூர் மற்­றும் பெங்­க­ளூ­ரு­வில் இரண்டு கட்­டங்­க­ளாக நடந்து வந்த படப்­பி­டிப்பு இறுதி கட்­டத்­திற்கு வந்­துள்­ளது. இது விவ­சா­யத்தை அடிப்­ப­டை­யாக கொண்ட படம். சோழ மண்­ணில் விளைச்­சல் அதி­க­மாக இருக்­கும்­போது, சோழ மன்­னன் தனது வெள்ளை யானை­யில் மகிழ்ச்­சி­யு­டன் வலம் வரு­வா­ராம். அத­னால் படத்­திற்கு ‘வெள்ளை யானை’ என்று டைட்­டில் வைத்­தி­ருக்­கி­றார்­கள். மழை­யின்மை, காவி­ரி­யில் தண்­ணீர் இல்­லா­தால் தஞ்சை மண்­ணில் இருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்த விவ­சா­யி­களை பற்­றிய கதை இது­வா­கும்.