சென்னையில் அங்கீகாரமின்றி செயல்படும் 331 பள்ளிகள்: ஆட்சியர் தகவல்

பதிவு செய்த நாள் : 17 ஜூன் 2019 19:18

சென்னை,

சென்னை மாவட்டத்தில் மட்டும் அங்கீகாரமின்றி 331 பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் பள்ளியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் 331 பள்ளிகள் செயல்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

331 பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றோர் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம்பெறாத பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், இந்த பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.