ஈஸ்டர் தற்கொலை தாக்குதல்: பேஸ்புக் பங்கு?

பதிவு செய்த நாள் : 15 ஜூன் 2019

இலங்கையில் சென்ற ஈஸ்டர் தினத்தன்று நடை­பெற்ற தற்­கொலை வெடி­குண்டு தாக்­கு­த­லில் பேஸ்­புக் முக்­கிய பங்கு வகித்து இருப்­ப­தற்­கான வாய்ப்பு உள்­ள­தாக கெவின் சான் தெரி­வித்­துள்­ளார்.

கனடா நாட்டு நீதிக்­க­மிட்­டி­யின் முன் பேஸ்­புக் குளோ­பல் டைரக்­ட­ரும், கனடா பப்­ளிக் பாலிசி பிரிவு தலை­வ­ரு­மான கெவின் சான் சாட்­சி­ய­ம­ளித்­தார். அப்­போது அவர் கூறு­கை­யில்,

பேஸ்­புக் வன்­மு­றையை தூண்டி வெறுப்பை வளர்க்க கூடி­யது என்­பது ஏற்­க­னவே எங்­க­ளுக்கு தெரி­யும். மியான்­ம­ரில் ரோஹிங்­கியா முஸ்­லீம் இனத்­த­வ­ருக்கு எதி­ராக நடந்த வன்­முறை தொடங்கி, வன்­மு­றை­யைத் தூண்டி வெறுப்பை வளர்ப்­ப­தற்­காக பேஸ்­புக் பயன்­ப­டுத்­து­வதை நாங்­கள், சென்ற வரு­டமே (2018) அறிந்­தி­ருந்­தோம். இலங்­கை­யில் ஈஸ்­டர் தினத்­தன்று நடந்த தற்­கொலை வெடி­குண்டு தாக்­கு­த­லில் பேஸ்­புக் முக்­கிய பங்கு வகித்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்பு உள்­ளது.

இலங்­கை­யில் நடந்த துயர சம்­ப­வத்­தில், எங்­கள் பேஸ்­புக் தவ­றாக பயன்­ப­டுத்­தப்­பட்டு இன, மத குழுக்­க­ளுக்கு இடையே பகையை ஊதிப்­பெ­ரித்­தாக்­கப்­பட்டு இருக்­க­லாம், அதன் விளை­வாக உல­கின் பல பகு­தி­க­ளில் பிரச்னை ஏற்­பட்டு இருக்­க­லாம். முதன் முறை­யாக இணை­யத்தை பயன்­ப­டுத்­தும் இலங்கை போன்ற நாடு­க­ளில் வெறுப்பை பரப்­ப­வும், பதற்­றத்தை அதி­க­ரிக்­க­வும் சமூக ஊட­கங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு இருக்­க­லாம் என்­பது உண்­மை­தான் என்று கெவின் சான் கூறி­யுள்­ளார்.