மகாராஷ்டிர துணை முதல்வராக ஆதித்யா தாக்கரேவை நியமிக்க சிவசேனா பரிந்துரைக்க திட்டம்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 16:20

மும்பை

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக சிவ சேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும் சிவசேனை இளைஞர் பிரிவின் தலைவருமான  ஆதித்யா தாக்கரேவை நியமிக்க சிவசேனா பரிந்துரை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் வரும் ஜூன் 14, 15 தேதிகளில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மாநில துணை முதல்வர் பதவிக்கு ஆதித்யா தாக்கரேவின் பெயரை பரிந்துரை செய்ய சிவசேனா முடிவு செய்துள்ளது.

பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே நட்புறவு உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

எனினும், பாஜக, சிவசேனாவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளுமா? என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், முதல் முறையாக ஆதித்யா தாக்கரே ஒரு அரசியல் பதவியை ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.