சிறுகதை : மின்னுவதெல்லாம்...! தி. வள்ளி

பதிவு செய்த நாள் : 16 ஜூன் 2019

‘‘என்ன சுந்­த­ரம் அண்ணா, பாத்து நாளாச்சு...’’

‘‘அட முருகா! அண்­ணன் நம்­மள போலவா, ராசா வீட்­டுக் கன்­னுக்­குட்டி! மகா மார்­பிள்ஸ் கம்­பெனி எம்.டி. ராம்­கு­மா­ரோட ெபர்­ச­னல் கார் டிரை­வர். இந்த மாதிரி சாதா­ரண டீக்­க­டைக்கு வரு­வாரா?’’ என்று சிரிக்க...

‘‘எங்கே வேலை பாத்தா என்­னப்பா? பழைய சினே­கி­தர்­களை மறக்க கூடா­துன்­னு­தானே நேரம் கிடைக்­கும்­போது வர்­றேன்.’’

‘‘இப்ப கூட ஐயா ராம்­கு­மார் பெங்­க­ளூரு போயி­ருக்­காரு’’ கொஞ்ச நேரம் பேசிக் கொண்­டி­ருந்து விட்டு கிளம்­பிய சுந்­த­ரம் ‘‘இன்­னைக்கு வெள்­ளிக்­கி­ழ­மை­யிலே மகா­லட்­சுமி அம்மா கரு­மா­ரி­யம்­மன் கோயி­லுக்கு போவாங்க...’’

‘‘உங்­கம்மா குணம் எப்­ப­டிப்பா?’’

‘‘அம்மா தங்­க­மான குணம். பெய­ருக்­கேத்த மாதிரி மகா­லட்­சு­மி­தான். அழ­கி­லே­யும், குணத்­தி­லே­யும் சரி தங்­க­மா­ன­வங்க.’’

‘‘என்னை மட்­டு­மில்­லாம, வீட்ல வேலை பார்க்­கிற எல்­லோ­ரை­யும் அன்­பா­தான் நடத்­து­வாங்க. கொஞ்ச வரு­ஷமா வேலை பார்க்­கி­றேன். அம்மா கல்­யா­ண­மாகி வர்­ற­துக்கு முன்­னா­டி­யி­லி­ருந்து வேலை பார்க்­கி­றேன். முதல்ல பெரிய ஐயா­வுக்கு கார் ஓட்­டி­னேன். இப்ப சின்ன ஐயா ராம்­கு­மா­ருக்கு ஓட்­டு­றேன். சரிப்பா, நேர­மாச்சு கிளம்­ப­றேன்.’’

சுந்­த­ரம் வீட்­டிற்கு போன­போது மகா­லட்­சுமி கோயி­லுக்கு போக தயா­ராக இருந்­தார். காரில் வரும்­போது மகா­வின் முகம் வாடி இருந்­த­தைக் கவ­னித்­தார் சுந்­த­ரம். எப்­போ­தும் கல­க­ல­வென ஏதா­வது பேசிக் கொண்டே வரு­ப­வர் அமை­தி­யாக இருந்­தது உறுத்­த­லாக இருந்­தது.

‘‘பெங்­க­ளூ­ருல நம்ம மகா மார்­பிள்ஸ் பிசி­னஸ் கிளை­யண்ட்ஸ் யாரும் இருக்­காங்­களா?

‘‘அப்­படி யாரும் இருக்­கி­றாப்ல தெரி­ய­லேம்மா எனக்கு.’’

‘‘இல்­லேண்ணா, உங்க அய்யா அடிக்­கடி பெங்­க­ளூரு கிளம்­பி­டு­றாரு. கார­ணம் கேட்டா கிளை­யண்ட்டை பார்க்­கன்னு சொல்­றாரு.’’

‘திக்’­கென்­றது சுந்­த­ரத்­திற்கு. தனக்கு கொஞ்ச நாளாக வந்த சந்­தே­கம் மகா­விற்­கும் வந்­தி­ருக்­கி­றது.

‘‘வேலை விஷ­ய­மா­கத்­தான் போவா­ரும்மா’’ என்­றார் மழுப்­ப­லாக.

‘‘ஆபீஸ்ல விசா­ரிச்சு பாருங்­கண்ணா. நான் கேட்­டேன்னு யாருக்­கும் தெரிய வேண்­டாம் அண்ணா’’ மகா அதற்கு பிறகு ஒன்­றும் பேச­வில்லை.

கொஞ்ச நாளைக்கு முன், ராம்­கு­மார் ஈசி­ஆர் ரோட்­டில் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு வில்லா வாங்கி, ரிஜிஸ்­டர் பண்­ணி­யது அதை மகா­வி­டம் கூட சொல்ல வேண்­டாம் என்று கூறி­யது நினை­வுக்கு வந்­தது.

இரு­வ­ரு­டைய சந்­தே­கத்­திற்­கும் விடை கிடைப்­பது போல ஒரு சந்­தர்ப்­பம் அமைந்­தது. கார் சாவியை ராம்­கு­மா­ரி­டம் கொடுக்க மறந்து கீழே இறங்­கி­ய­வர், ‘அட சாவியை கொடுக்க மறந்­திட்­டோமே’ என திரும்ப படி­யேறி ராம்­கு­மார் அறைக்­க­தவை தட்ட முற்­பட்­ட­போது ராம்­கு­மார் போனில் பேசு­வது தெளி­வா­கக் கேட்­டது.

‘‘யாரு­மில்லே வந்­தனா! மகா அவங்க சித்தி வீட்­டுக்கு போயி­ருக்கா. அடுத்த வாரம் பெங்­க­ளூரு வர்­றது ரொம்ப கஷ்­டம். இப்­பவே மகா சந்­தே­கப்­ப­டுறா! ஏன் வாரா­வா­ரம் பெங்­க­ளூரு போறீங்­கன்னு கேட்­கிறா.... என்­னால பதில் சொல்லி சமா­ளிக்க முடி­யலை. ஈசி­ஆர் ரோடு வில்லா பக்­காவா ரெடி­யா­யி­டுச்சு. பர்­னிஷ் பண்­ணி­யாச்சு. ஸ்விம்­மிங் பூல் கூட நல்லா அமைஞ்­சி­ருக்கு. நீ சீக்­கி­ரம் இங்கே வந்­திடு வந்­தனா.’’  ஏதோ பதில் கூற,

‘‘அதெல்­லாம் நீ வந்த பிறகு பார்த்­துக்­க­லாம். ஷூட்­டிங்­குக்கு இங்­கே­யி­ருந்தே போய்க்­க­லாம். இப்போ நடிச்­சுக்­கிட்டு இருக்­கிற படம் தவிர புதுசா எதை­யும் கமிட் பண்­ணாதே. நம்­ம­கிட்ட பணம் ஏரா­ளமா இருக்கு. நீ நடிச்­சுத்­தான் ஆக­ணும்னு இல்லே.’’ அதற்கு மேல் கேட்க சக்­தி­யில்­லா­மல் சுந்­த­ரம் கீழே இறங்­கி­னார். சாவியை ஹால் மேஜை­யில் வைத்­து­விட்டு வெளியே வந்­தார். மனம் பத­றி­யது. மகா­லட்­சு­மிக்கு தெரி­யும்­போது எப்­படி துடித்­துப் போவார் என்­பதை நினைத்து பார்க்­கக்­கூட முடி­ய­வில்லை.

வாரம் ஒன்று ஓடி­விட, ஒரு நாள் சுந்­த­ரத்­தைக் கூப்­பிட்ட ராம்­கு­மார்,

‘‘சுந்­த­ரம்! நான் வழக்­கமா வரு­வேன்ல அந்த பெங்­க­ளூரு பிளைட்ல நாளைக்கு 2 கெஸ்ட் வரு­வாங்க. அவங்­களை ரிசீவ் பண்ணி, ஈசி­ஆர்ல நாம ஒரு புது வில்லா வாங்­கி­னோமே, அங்கே கொண்டு விட்­டுட்டு வந்­தி­டுங்க. அவங்க நம்ம பெங்­க­ளூரு கிளை­யண்ட். அப்­ப­டியே ஏதா­வது ஒரு ஸ்டார் ஓட்­டல்ல டிபன் வாங்­கிக் கொடுத்­தி­டுங்க.’’

சுந்­த­ரம் ஏர்­போர்ட்­டில் காத்­தி­ருக்க, ‘மகா கிரா­னைட்ஸ்’ பிளாக்­காட்டை பார்த்து இரண்டு பெண்­கள் அரு­கில் வந்­த­னர்.

‘‘நீதான் சுந்­த­ரமா?

‘‘வாங்­கம்மா! உங்­களை ரிசீவ் பண்ணி, ஈசி­ஆர் பங்­க­ளா­வில் கொண்­டு­விட சொல்லி ஐயா அனுப்­பி­னாரு’’ என்­றார் சுந்­த­ரம் மனக்­க­சப்பை வெளிக்­காட்­டா­மல்...

‘‘ஏன் உங்க ஐயா­வுக்கு வர நேர­மில்­லையோ? சார் பிசியோ?’’

‘‘வந்­தனா! பேசாம வா!’’ அதட்­டி­னாள் அவள் அம்மா.

அவர்­களை கொண்டு போய் ஈசி­ஆர் வில்­லா­வில் விட்­டு­விட்டு திரும்­பி­னார் சுந்­த­ரம்.

மறு­நாள் வீட்­டிற்கு வந்த சுந்­த­ரத்தை மகா அழைத்­தாள்.

‘‘சுந்­த­ரம் அண்ணா! ஐயா­வுக்கு லஞ்ச். அவ­ருக்கு ரொம்ப பிடிச்ச மஷ்­ரூம் பிரி­யாணி பண்­ணி­யி­ருக்­கேன். தானா சாப்­பிட்டா நல்லா சாப்­பி­ட­மாட்­டாரு, கூட இருந்து பரி­மா­றிட்டு வாங்க. சிப்ஸ், தயிர், ரய்தா எல்­லாம் வச்­சி­ருக்­கேன்!’’ சுந்­த­ரம் வாங்­கிக் கொண்டு கிளம்ப...

‘‘அண்ணா! இந்த டப்­பா­வில் உங்­க­ளுக்­கும் வச்­சி­ருக்­கேன். சாப்­பிட்­டுட்டு எப்­படி இருக்­குன்னு சொல்­லுங்க. இந்த வாரம் உங்க ஐயா பெங்­க­ளூரு போக­லேல்ல அதான் ஸ்பெஷல் சமை­யல்.’’

சின்­னக் குழந்தை மாதிரி குதுா­க­லிக்­கும் மகாவை பார்க்க கஷ்­ட­மாக இருந்­தது சுந்­த­ரத்­திற்கு.

ஆபீஸ் வந்­த­வரை ராம்­கு­மார் அழைக்க,

‘‘சுந்­த­ரம், பெரிய வண்டி சாவியை கொடுங்க! இன்­னைக்கு லஞ்­சுக்கு கிளை­யண்ட்­டோட வெளி­யிலே போறேன்.’’

‘‘சார்! அம்மா ஸ்பெஷலா பிரி­யாணி பண்ணி கொடுத்­த­னுப்­பி­யி­ருக்­காங்க. உங்­களை சாப்­பிட வச்­சிட்டு வர சொன்­னாங்க.’’

‘‘அந்த பிரி­யா­ணியை நீங்க கொண்­டு­போங்க! அம்­மா­கிட்ட நான்   சாப்­பிட்­டேன்னு சொல்­லி­டுங்க. உங்­க­ளுக்கு வேணாம்னா குப்­பை­யிலே கொட்­டுங்க’’ பேசிக்­கொண்டே வெளியே நடந்­தார் ராம்­கு­மார்.

அவன் எந்த கிளை­யண்ட்டை பார்க்க போகி­றான் என்­பது புரிய மனம் கசந்­தது.

மகா­லட்­சுமி தன் சித்தி மகள் கல்­யா­ணத்­திற்கு ஒரு நாள் முன்­ன­தாக போய்­விட ராம்­கு­மார்,

‘‘சுந்­த­ரம்! ஈசி­ஆர் வில்­லா­விலே தங்­கி­யி­ருக்­கிற பெங்­க­ளூரு கிளை­யண்ட்ஸ் நமக்கு முக்­கி­ய­மா­ன­வங்க. நிறைய பிசி­னஸ் கொடுத்­தி­ருக்­காங்க. நம்ம வீட்டை பாக்­க­ணும்னு சொன்­னாங்க. போய் கூட்­டிட்டு வாங்க’’ என்று கூற, வந்­தனா அம்மா இல்­லா­மல் அவள் மட்­டும் கிளம்பி வந்­தாள்.

‘‘நீங்க வீட்­டுக்கு போங்க சுந்­த­ரம்! அவங்க கால் டாக்­சி­யில் திரும்பி போயிடு வாங்க!’’ என்­றார் ராம்­கு­மார்.

மறு­நாள் சுந்­த­ரம் வந்­த­போது, எது­வுமே நடக்­காத மாதிரி, எந்த உறுத்­த­லும் இல்­லா­மல் ஆபீஸ் போக கிளம்­பிக் கொண்­டி­ருந்­தார் ராம்­கு­மார். காரில் ஏறப்­போ­கும் நேரம் போன் வர, கார்­ட­னில் தனியா போய் பேசிய ராம்­கு­மார் வார்த்­தை­கள் லேசாக காதில் விழ, சுந்­த­ரம் அவ­ரை­யும் அறி­யா­மல் அவர்­கள் பேசி­யதை கேட்க துவங்­கி­னார்.

‘‘வந்­தனா! அவ­ச­ரப்­ப­டாதே.... மகா­கிட்ட விவ­கா­ரத்து பத்தி சீக்­கி­ரமா பேசு­றேன். அவ அப்பா பெரிய பிசி­னஸ்­மேன். பணக்­கா­ரர். அவளை அவ்­வ­ளவு சீக்­கி­ரம் கழட்­டி­விட முடி­யா­தும்மா. ஏதா­வது பிளான் பண்ணி அவ பேர்ல ஏதா­வது பழியை போட்­டுத்­தான் விவா­க­ரத்து கேட்­க­ணும்.’’ அவ்­வ­ளவு பேர் சப்­போர்ட்­டும் அவ­ளுக்­குத்­தான். நான் நேர­டி­யா­கவே பேசு­றேன்.

திரும்பி வந்த ராம்­கு­மாரை சுமந்து கொண்டு கிளம்­பிய கார் ஆபீசை அடைய, ரூமுக்கு வந்த ராம்­கு­மாரை தொடர்ந்து பின்னே வந்த சுந்­த­ரம் கார் சாவியை அவர் கையில் கொடுத்­தார்.

‘‘தம்பி! நான் உங்க அப்பா காலத்­தி­லி­ருந்து உங்­க­கிட்ட வேலை பார்க்­கி­றேன். அந்த உரி­மை­யிலே பேசு­றேன். பெரி­ய­வரை இன்­னைக்­கும் எல்­லோ­ரும் தெய்­வமா வணங்­கு­றாங்­கன்னா, அப்­ப­ழுக்கு இல்­லாத வாழ்க்­கையை அவர் வாழ்ந்­தாரு. அவர் போட்ட உப்பை தின்­னுட்டு நான் பேசாம இருந்தா அது அவ­ருக்கு பண்ற துரோ­கம். நம்ம சின்­னம்மா மகா­லட்­சுமி கையால பல தடவை சாப்­பிட்­டி­ருக்­கேன்.  அவங்­களை மாதிரி ஒரு பெண் தெய்­வத்தை பார்க்க முடி­யாது ஐயா. அவங்க உங்க மேலே அப­ரி­மி­த­மான அன்­பும், மதிப்­பும் வச்­சி­ருக்­காங்க. அவங்­க­ளுக்கு நீங்க துரோ­கம் பண்­றதை இனி­யும் என்­னால பார்த்­துக்­கிட்டு இருக்க முடி­யாது. கண்ட கழு­தைங்க பேச்சை கேட்­டுக்­கிட்டு அம்­மா­வுக்கு துரோ­கம் பண்­ணா­தீங்க. இனி­மே­லா­வது திருந்தி வாழுங்க.’’

ராம்­கு­மார் முகம் சிவக்க சுந்­த­ரத்தை பார்த்து கத்­தி­னார்.

‘‘மைண்ட் யுவர் வேர்ட்ஸ்’ ஆப்­ட­ரால் நீ ஒரு வேலைக்­கா­ரன்’’ கார் சாவியை அவர் கையில் போட்ட சுந்­த­ரம்,

‘‘அடச்சீ போய்யா.... நீயெல்­லாம் ஒரு பெரிய மனு­ஷன்! நீ வேலையை விட்டு நிறுத்­தினா நான் சாப்­பாட்­டுக்­குத்­தான் கஷ்­டப்­ப­டு­வேன். ஆனா உங்­க­கிட்ட வேலை பாத்தா சாப்­பாடே உள்ளே இறங்­கா­தய்யா... நான் வர்­றேன். புத்­தி­யி­ருந்தா திருந்து!’’

ரொம்ப நாளாக உறுத்­திக் கொண்­டி­ருந்த குற்ற உணர்­வி­லி­ருந்து விடு­பட்­ட­வ­ராய் வெளியே நடந்­தார் சுந்­த­ரம். ஆனால் மனம் மட்­டும் பாறாங்­கல்­லாய் கனத்­தது, மகா­லட்­சு­மியை நினைத்து.

***