கிர்கிஸ்தான் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 15:08

பிஷ்கேக்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று கிர்கிஸ்தானுக்கு வந்தடைந்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில், 8 உறுப்பு நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று கிர்கிஸ்தான் வந்தடைந்தார். மனஸ் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு, கிர்கிஸ்தான் அரசு உயரதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஷாங்காய் ஒத்திழைப்பு மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி, கிர்கிஸ்தான் அதிவர் ஜீன்பெகோவ் ஆகிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.