திருமண விழாவில் பங்கேற்க புதுக்கோட்டைக்கு வந்த மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 14:54

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நடைபெற்ற மும்பை தொகுதி எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழாவில், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார்.

மும்பை, சயான் கோலிவாடா தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் கேப்டன் தமிழ்ச்செல்வன். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், பிலாவிடுதி ஆகும்.

தமிழ்ச்செல்வனின் மகள் திருமணம் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது.

இந்த திருமண விழாவில், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இவ்விழாவில், தமிழ்நாடு  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.