நடிகர் சங்க தேர்தல் : விஜயகாந்திடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணி

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 14:38

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் (பாக்யராஜ் அணியினர்) இன்று தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நடிகர்கள் பாக்யராஜ், உதயா, பிரஷாந்த், குட்டி பத்மினி மற்றும் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் சென்று சந்தித்தனர். விஜயகாந்தை சந்தித்த அவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விஜயகாந்தை சந்தித்த பின் பேட்டி அளித்த இயக்குநர் பாக்யராஜ் கூறியதாவது:

எங்கள் அணிக்கு ஆதரவு தருவதாக விஜயகாந்த் கூறியுள்ளார். எங்கள் அணி வெற்றிபெறும் என விஜயகாந்த் தெரிவித்தார்.

நாடக நடிகர்கள் ஓட்டுக்கு பணம் பெறுவார்கள் என நான் கூறவில்லை.

ஐசரி கணேஷ் கூறும்போது,

சுவாமி சங்கரதாஸ் அணிக்கு பெரும்பாலான நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என கூறினார்.