தொட்டாலே... எலும்பு முறியும் சாதனை நாயகி....! – லட்சுமி

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019

கடந்த ஜூன் 2ம் தேதி நடந்­து­மு­டிந்­தது யுபி­எஸ்சி சிவில் சர்­வீஸ் முதல்­நிலை தேர்வு. ஒவ்­வொரு ஆண்­டும் பல லட்ச மக்­கள் பல மாத பயிற்­சிக்கு பின் பற்­பல கன­வு­க­ளோடு இத்­தேர்­வுக்­காக காத்­தி­ருப்­பர். அவர்­க­ளில் ஒரு­வரே லத்­தீஷா அன்­சாரி. ஆனால், மற்­ற­வர்­களை போலல்ல லத்­தீஷா. தேர்வு ஹாலுக்­குள் அவர் நுழை­கை­யிலே, உடன் சற்று பெரிய ஆக்­ஸி­ஜன் சிலிண்­டர் ஒன்­றை­யும் எடுத்­துச் சென்­றார். ஏனெ­னில், லத்­தீ­ஷா­வால் தொடர்ந்து 30 நிமி­டங்­க­ளுக்கு மேல் சுவாச உப­க­ர­ணங்­க­ளின்றி சுவா­சிக்க இய­லாது...

ஆனால், கடந்த ஓராண்­டு­க­ளாக தான் இந்த பாதிப்பு... பிறக்­கை­யிலே எளி­தாய் எலும்­பு­கள் முறி­வு­றும் ஆஸ்­டி­யோ­ஜெ­னெ­ஸிஸ் இம்­பெர்­பெக்ட எனும் அரிய நோயி­னால் பாதிக்­கப்­பட்­டார் அவர். 16 கிலோ எடை­யும், 2 அடி உய­ர­மும் உடைய அவ­ரால், மற்­ற­வர்­கள் உத­வி­யின்றி எந்­த­

வே­லை­யும் செய்ய இய­லாது. ஆனால் இத்­த­டை­கள் எதை­யுமே லத்­தீஷா, அவ­ரு­டைய இலக்கை நோக்­கிய பய­ணத்­தின் தடங்­கல்­க­ளாக கரு­தி­ய­தில்லை. கேரள மாநி­லம் கோட்­ட­யத்­தின் எரு­மேலி பகு­தி­யைச் சேர்ந்த லத்­தீஷா அன்­சாரி ஒரு எம்.காம் பட்­ட­தா­ரி­யும், கீ போர்டு பிளே­ய­ரும் கூட... கூடவே துணிச்­சல்­மிகு பெண்­ணும்!

“நான் ஆஸ்­டி­யோ­ஜெ­னெ­ஸிஸ் இம்­பெர்­பெக்டா என்ற நோயி­னால் பாதிக்­கப்­பட்டு உள்­ளேன். பொது­வாக எளி­தில் எலும்பு முறி­வு­றும் நோய் என்று அறி­யப்­ப­டு­கி­றது. இத­னால், எனக்கு கை கொடுப்­ப­வர்­கள் சற்று வேக­மாக குலுக்­கி­னாலே என் எலும்­பு­கள் உடைந்­து­வி­டும். அது­போன்ற  முறி­வு­கள், கடந்த 23ஆண்­டு­க­ளில் பல­முறை நடந்­துள்­ளது. நான் பிறந்­த­வு­டனே எனக்கு  இப்­ப­டி­யொரு நோய் இருக்­கி­றது என்­பதை கண்­ட­றிந்­து­விட்­ட­னர். அப்­போ­தி­ருந்தே, என் பெற்­றோர் எப்­படி ஒரு உடை­யக்­கூ­டிய கண்­ணா­டியை பத்­தி­ர­மாக பொத்தி பார்த்து கொள்­வார்­களோ, அப்­படி என்னை கவ­னித்து கொள்ள தொடங்­கி­விட்­ட­னர்.

எங்க அப்­பா­வுக்கு என் மீது அள­வற்ற அக்­கறை உண்டு. ஸ்கூலுக்கு தூக்­கிக் கொண்டே போயிட்டு வரு­வார். மற்ற குழந்­தை­கள் போல எல்­லாத்­தை­யும் எனக்கு வழங்கி வளர்த்த என் பெற்­றோ­ருக்கு தான் நன்­றியை தெரி­விக்க வேண்­டும். கிரா­மத்­தில் எங்க அப்பா நடத்­தி­வ­ரும் சின்ன டீ கடை­யி­லி­ருந்து வரும் மொத்த பணத்­தை­யும் என் படிப்­புக்­கா­கவே

செல­வ­ழித்­தார்”

ஐந்­தாம் வகுப்பு படித்து கொண்­டி­ருக்­கும் போது, லத்­தீ­ஷா­வுக்கு இசை மீதான ஆர்­வம் பெருக, அவ­ரு­டைய தந்தை உட­ன­டி­யாக குருவை நிய­மித்து முறைப்­படி கீபோர்டு இசைக்க கற்று கொடுத்­துள்­ளார். இப்­போது லத்­தீ­ஷா­வால் சொந்­த­மாக ஒரு மெட்டு இசைக்க முடி­யும். கேரள டிவி இசை நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்று, பார்­வை­யா­ளர்­களை பர­வ­சப்­ப­டுத்தி உள்­ளார். இசை மட்­டு­மல்­லாது லத்­தீ­ஷா­வின் கைவண்­ணத்­தில் வரை­யப்­பட்­டுள்ள அவ­ரது கிளாஸ் பெயிண்­டிங் அனைத்­தும் அடிப்­பொலி ரகம். விரை­வில், ஓவிய கண்­காட்சி ஒன்றை நடத்­த­வும் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தா­க­வும் கூறு­கி­றார் அவர்.

“குழந்­தை­கள் கட­வுள்­க­ளின் பரிசு என்­பதை மக்­கள் உணர வேண்­டும். ஸ்பெஷல் குழந்­தை­க­ளும் பரந்த உல­கத்தை பார்த்து வளர்­வ­தற்­கான வாய்ப்பை வழங்க வேண்­டும். தவிர்த்து, அவர்­களை மூலை­யில் முடக்கி வைக்­க­கூ­டாது,” என்று தெரி­வித்­துள்­ளார் அன்­சாரி.

தன்­னம்­பிக்கை நாய­கி­யின் அடுத்த இலக்கே யுபி­எஸ்சி சிவில் சர்­வீஸ் தேர்வு. கடந்­தாண்டே சிவில் சர்­வீஸ் தேர்­வில் பங்­கேற்க தயா­ரா­கி­னார் அவர். ஆனால், நுரை­யீ­ரல் ரத்த அழுத்­தம் இருப்­பது அச்­ச­ம­யத்­தில் தான் கண்­ட­றிப்­பட்­ட­தால்,  அப்­போ­தி­ருந்தே ஆக்­ஸி­ஜன் உத­வி­யு­டன் வீட்­டிலே அதி­க­ப­டி­யான நேரத்தை செல­வ­ழித்­துள்­ளர். ஆனால், இம்­முறை தேர்­வில் உறு­தி­யா­யி­ருந்து பங்­கேற்­றார்.

 “அன்­றாட தேவைக்­காக ஆக்சிஜன் கான்­சென்­ரேட்­ட­ரும் சிலிண்­ட­ரும் பயன்­ப­டுத்தி வரு­கி­றேன். தொடக்­கத்­தில் 24 மணி­நே­ர­மும் ஆக்சிஜன் சப்ளை தேவைப்­பட்­டது. இப்­போது, சிறிது நேரத்­திற்கு சாத­ர­ண­மாக சுவா­சிக்க முடி­கி­றது. ஆனால், தேர்­வில் கலந்து கொள்ள நான் ஆக்சிஜன் சிலிண்­டரை எடுத்­துச் செல்­ல­வேண்­டும். இதற்­கா­கவே கடந்த ஆண்டு என் சிவில் சர்­வீஸ் கன­வு­களை ஒதுக்கி வைக்க வேண்­டி­யி­ருந்­தது.” தேர்­வுக்கு செல்­லும் முன்னே கோட்­ட­யம் கலெக்­ட­ரின் உத­வி­யும் கிடைத்­தது. ஆம், கோட்­ட­யம் கலெக்­டர் சுதீர் பாபு­வின் தலை­யீட்­டால், தேர்வு அறைக்­குள் ஆக்­ஸி­ஜன் கான்­சென்­ரேட்­டர் லத்­தீ­ஷா­வுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­பட்டு தேர்வை வெற்­றி­க­ர­மாய் எதிர்­கொண்­டார் அவர்.

ஜெயம் பெற வாழ்த்­து­கி­றோம் வருங்­கால கலெக்­டரே!