இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவு

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 19:59

மும்பை,

  வார வர்த்தகத்தின் 2 நாட்களாக உயர்வுடன் இருந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று இழப்புகளை சந்தித்து மும்பை குறியீட்டு எண் 193 புள்ளிகள் சரிவில் நிறைவடைந்தது.

5 முக்கிய விஷயங்களில் சீனாவுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால்   சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செயது கொள்வதில் ஆர்வம் இல்லை   என்று நேற்று டிரம்ப் அறிவித்தார். நிலைமை சீராக இல்லை என்பதை டிரம்பின் பேச்சு காட்டுவதாக சந்தைகள் இன்று வீழ்ச்சியடைந்தன.

இன்றைய வர்த்தக நேரம் முழுவதும் சென்செக்ஸ்      சரிவடைந்து வந்தது. இன்று வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 193.65 புள்ளிகள் சரிந்து 39,756.81 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 59.40 புள்ளிகள் சரிந்து 11,906.20 புள்ளிகளில் நிலைபெற்றது.  வங்கி மற்றும் ஆட்டோ நிறுவன பங்குகள் சரிவடைந்தது.

யெஸ் பாங்க் மட்டும் இன்று 3.34 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.

மாருதி, கொடாக் பாங்க், ஹீரோ மோட்டோகோர்க், பஜாஜ் ஆட்டோ இன்டஸ் இன்ட் வங்கி , பஜாஜ் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 1.79 சதவீதம் சரிந்தது.

இதன் மறுபக்கம் டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, வேதாந்தா, சன் பார்மா, டிசிஎஸ், ரிலையன்ஸ், எச்.யூ.எல் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.60 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இன்று காலை (12-06-2019) வர்த்தகம் துவங்கியதும், அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் அதிகரித்து  ரூ.69.38 காசுகளாக இருந்தது. இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ69.32 காசுகளாக நிலைபெற்றது.

நேற்றைய நாணய மாற்று வீதம் ரூ.69.44 ஆகும்