ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்பு; 2 பேர் காயம்

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 18:08

ஸ்ரீநகர்,

   ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் கே.பி சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு  பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் வீரர்கள் மீது கையேறி குண்டுகளை வீசினர். பிறகு வீரர்களை குறி வைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த தக்குதலில் அனந்தநாக் போலீஸ் நிலையத்தின் அதிகாரி அர்ஷாத் அகமது என்பவரும் பொது மக்களில் ஒருவரும் காயமடைந்தனர். அவர்கள்  ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.