அய்யய்யோ காணோம்...!

பதிவு செய்த நாள் : 14 ஜூன் 2019


அரோரா தீவுகள் என கேள்விப்பட்டிருக்கிறீர்களா...

அது, இன்று பூமியிலிருந்தே மறைந்து விட்டது.

தென் அட்லான்டிக் கடலில், பயணம் செய்த கப்பலின் கேப்டன், இந்த மூன்று குட்டி தீவுகளை கண்டுபிடித்தார்; தன் கப்பலின் பெயரான, 'அரோரா...' என பெயரிட்டார்.

அதன்பின், தென் அமெரிக்காவுக்கு செல்லும் ஸ்பானிஷ் கப்பல்கள் அனைத்தும், வழி குறிப்பிடும் இடமாக, இந்த தீவுகள் இருந்து வந்தன.

ஒரு நாள், திடீரென காணாமல் போய் விட்டன.

இந்த தீவுகள், எரிமலையின் உள் வெடிப்பால், கடலிலிருந்து எழுபவை; ஆக, இவை எழுவதும், பின், ஒரு நாள் மறைந்து போவதும், 'அந்த பகுதியில் அப்படி ஒன்று இருந்ததா...' என, கேட்க வைப்பதும், இயல்பு தான்.

அரோரா தீவுகளுக்கு வடக்கே, பாந்தம் தீவுகள் ஐலாந்துக்ரான்னே போன்றவை இருந்தன. அவையும், ஒரு நாள் காணாமல் போய் விட்டன. இதே போல், டேவிஸ் லேண்ட் என, ஒரு தீவு இருந்தது; அதுவும், காணாமல் போன போது, அனைவரும் அதிர்ந்தனர்.

பிரசில் தீவு என, ஒரு தீவு உள்ளது; இது தோன்றிய நாள் முதல், இன்று வரை எழுவதும், மறைவதுமாகவே இருந்து வருகிறது.

–- ராஜிராதா.