பாட்டிமார் சொன்ன கதைகள் – 220 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 14 ஜூன் 2019


மந்­தி­ரம் பலித்து விட்­டது!

அவ­ளுக்­குத் தான் என்ன உதவி செய்ய முடி­யும்? ஒன்­றும் தோன்­ற­வில்லை. இப்­ப­டிப்­பட்ட பகற் கன­வு­க­ளில் நியம நிஷ்­டை­கள் தவ­றிப்­போ­வ­துண்டு.

 அவள்­மீது தனக்கு ஏற்­பட்ட கருணை நாள­டை­வில் ஒரு பீடை­போல் தன்­னைப் பிடிக்­கத் தொடங்­கி­விட்­ட­தென்று உணர்ந்து கொண்­டான். அவ­னு­டைய பிதா­வான மக­ரி­ஷிக்கு அந்­தப் பீடை முதல் முதல் இன்­ன­தென்று விளங்­க­வில்லை. குரு­வின் சினே­கி­தர்­கள் நடந்­த­தைத் தெரி­வித்­தார்­கள். பிறகு பிள்­ளை­யின் தந்­தை­யும் பெண்­ணின் தந்­தை­யும் சந்­தித்­துப் பேசி­னார்­கள்.

 பிரம்த்­வ­ரையை குரு­வுக்­குக் கன்­னி­கா­தா­னம் செய்து கொடுப்­ப­தாக பெரி­யோர்­க­ளால் நிச்­ச­யம் செய்­யப்­பட்­டது. தானம் செய்­யப்­ப­டு­வ­தாக இருந்த கன்­னி­கை­யும் அப்­ப­டியே ஆக வேண்­டு­மென்­றும் நிச்­ச­யித்­தி­ருந்­தாள். அப்­ப­டிப்­பட்ட தானம் பெற வேண்­டு­மே­யென்று அந்த பிரம்­ம­சா­ரி­யும் தவம் கிடந்­தான். ஆனால் விதி வேறு வித­மாக நிச்­ச­யித்து விட்­ட­து­போல் தோன்­றி­யது.

 விவாக காலம் சமீ­பித்­து­விட்­டது. தபோ­வ­னத்­தில் ஒரு பக்­கத்­தில் பிர­மத்­வரை தோழி­க­ளோடு உற்­சா­க­மாய் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்­தாள். ` ஆம் ஹஸ்த நட­சத்­தி­ரத்­தில் தான் முகூர்த்­தம் ‘ என்று அவர்­க­ளில் ஒருத்து வேறொ­ருத்­திக்­குச் சொல்­லிக்­கொண்டே மணப்­பெண்­ணை­யும், மாப்­பிள்­ளை­யை­யும் பரி­க­சித்து ஒரு பாட்­டுப் பாடத் தொடங்­கி­விட்­டாள்.

  பிர­மத்­வரை அவர்­களை விட்டு ஒரு பூ மரத்தை நாடிப் போனாள். ஊஞ்­ச­லாட வேண்­டு­மென்று. வழி­யில் குறுக்கே அது என்ன ? நீண்டு கிடக்­கி­றதே? வேர்­தானா ?  பாரா­மல், காலால் மிதித்து விட்­டாளே!

 அங்கே நீண்டு படுத்­தி­ருந்­தது பாம்­பு­தான். அந்த அழ­கான தளிர்­போன்ற அடி­க­ளில் ஒன்­றைச் சுற்­றிக்­கொண்டு தன் பற்­கலை பதித்து விட்­டது.

 ஒரு கணம் அந்­தக் காலில் அது கொலுசு போல் கிடந்­தது. தோழி­கள் பார்த்­தார்­கள். `` அப்­படி ஆப­ர­ணம்­மா­வ­தைத் தவிர அவ­ளுக்­குக் கெடுதி செய்­யச் சர்ப்­பத்­திற்­குக் கூட மனம் வருமா ?’ என்று எண்­ணிக் கொண்டே ஓடி வந்­தார்­கள். பாம்பு ஒரு புற்­றுக்­குள் மறைந்­து­விட்­டது. பிர­மத்­வரை தீடி­ரென்று பூமி­யில் சாய்ந்­து­விட்­டாள். `` ஐயையோ! மாந்­த­ளிர் போலி­ருந்த மேனி­யின் நிறம் எப்­படி மாறி­விட்­டது ? அக்­கி­னிச் சுடர் போல் ஜொலித்­துக் கொண்­டி­ருந்த அந்த ஓளி­யும் குன்­றிப் போய்­விட்­டதே !’ என்று பிர­லா­பித்­தார்­கள்.

 ஆப­ர­ணங்­கள் நழுவி விழுந்து கிடக்க, தலை மயிர் அவி­ழுந்து கிடக்க, வெறும் தரை­மேல் தூங்­கிக்  கொண்­டி­ருப்­ப­வள் போல் இருந்­தால் பிர­மத்­வரை. அவ­ளு­டைய பிதா­வும் மற்ற ரிஷி­க­ளும் வந்து பார்த்து கண்­ணீர் வடித்­தார்­கள். குரு­வும் கொஞ்ச நேரம் பார்த்து கொண்­டி­ருந்­தான். ` இந்த நிலை­யி­லும் அழ­கா­கவே இருக்­கி­றாள்’ என்று அழத் தொடங்­கி­னார்­கள். குரு மட்­டும் கண்­ணீர் விட­வில்லை. அழ­வு­மில்லை. அந்த கூட்­டத்தை விட்டு எங்­கேயோ வெளி­யில் விரைந்து சென்­றான்.

 யாரு­மில்­லாத காட்­டுக்­குள்  போய்க்­கொண்­டே­யி­ருந்­தான். மனுஷ்ய சஞ்­சா­ர­மில்­லாத ஒரு நதிக் கரையை அடைந்­தான். பழைய ஞாப­கங்­கள் அலை­மேல் அலை­யாய் பொங்கி வந்­தன. தான் விசா­ரித்து அறிந்து கொண்­டி­ருந்த அடை­யா­ளங்­க­ளி­லி­ருந்து, ` இந்த இடத்­தி­லே­தான் என் கண்­ம­ணி­யா­கிய காத­லி­யைத் துறந்து போயி­ருக்க வேண்­டும். இரக்­க­மில்­லாத  பாவி­யாகி அவள் தாய்’’ என்று ஊகித்­துத் கொண்­டான். உடனே விச­னம் தாங்­கா­மல் கத­றி­னான். அது­வரை அணை போட்டு வைத்­தி­ருந்த கண்­ணீர் அந்­தக் காட்­டாறு போலப் பெரு­கத் தொடங்­கி­யது. எவ்­வ­ளவு நேரம் கத­றி­னான். என்று அவ­னுக்கே தெரி­யாது. கடை­சி­யாக கத­ற­வும் முடி­யா­மல் மிக­வும் தீன­மாக அழு­தான். பிறகு அந்த அழு­கை­யும் நின்­று­விட்­டது. கண்­ணீ­ரும் வறண்டு போயிற்று. ` ஆம் அவள் உறாங்­கிக்­கொண்­டு­தான் இருக்­கி­றாள். அந்த அன்­பிற்­கும் அழ­குக்­கும் மர­ணம் உண்டோ ? ஒரு வேளை போய்­விட்­டா­லும் என்­னைத் தனியே விட்டா போய்­வி­டு­வாள்> என் உயி­ரை­யும் உடன் அழைத்­துக்­கொண்டு போவாள். என்­றெல்­லாம் புலம்­பிக்­கொண்டே மூர்ச்­சித்­துப் போனான்.

 இவன் யார் ?  என்ன ஓளி! கால் பூமி­யில் பதி­ய­வில்லை ஒஹோ, தேவ தூதனா ? நல்­லது தேவர்­களா உன்னை அனுப்­பி­யி­ருக்­கி­றார்­கள். குரு­வுகு இதம் சொல்­லித்  தேற்ற வேண்­டு­மென்று ? சரி­தான். ஆனால் உன்­னு­டைய வார்த்­தை­க­ளா­லும் எனக்கு ஆறு­தல் அளிக்க முடி­யாது. போன ஆயுள் திரும்­பு­வ­தில்­லை­யென்­று­தானே சொல்­லப் போகி­றாய் ? இது சொல்­லத் தேவ­தூ­தனா வர­வேண்­டும் ?’ என்று வழக்­கா­டு­கி­றான் காத­லன்.

 தேவ­தூ­தனோ பளிச்­சென்று ` அவள் பிழைப்­ப­தற்கு ஒர் உபா­யம் உண்டு. கேள்’ என்று சொன்­னான்.

 உடனே `சரி­யா­கச் சொல். தேவர்­கள் சொல்லி அனுப்­பிய அந்த உபா­யத்தை ‘ என்று கேட்­டான் குரு.

 ` அவ­ளுக்கு ஆயுள் போய்­விட்­டது. ஆனால் உன்­னு­டைய ஆயு­ளில் ஒரு பாதி­யைக் கொடுத்­தால் அவள் எழுந்­தி­ருப்­பாள் ‘ என்­றான் தேவ­தூ­தன்.

 ` தேவ சிரேஷ்­டனே ! அப்­ப­டியே கொடுக்­கி­றேன். என் ஆயு­ளின் அந்த ஒரு பாதி­யைக் கொண்டு என் செல்வி, என் வாழ்க்­கைத் துணை எழுந்­தி­ருக்­கட்­டும் ‘ என்று பிரார்த்­தித்­தான் குரு.

 விழித்­துக்­கொண்ட பின்­பும் குரு­வுக்கு அது கனவு போலத் தோன்­ற­வில்லை. தேவட் தூதனை அவ்­வ­ளவு பிரத்­யட்­ச­மாக பார்த்து விட்­டான். தியா­ன­மும் தரி­ச­ன­மும் ஒன்­றல்­லவா ரிஷி­க­ளுக்கு ?

 பிர­மத்­வரை தூங்­கு­வது போலக் கிடந்த தபோ­வ­னத்­துக்­குத் திரும்பி வந்­தான் குரு. அவ­ளும் அப்­போ­து­தான் தூங்கி எழு­வது போல் எழுந்து உட்­கார்ந்­தான். ரிஷி­க­ளுக்­கெல்­லாம் பரம சந்­தோ­ஷம். ` என் மந்­தி­ரம் பலித்­து­விட்­டது ‘ என்­றார் ஒரு­வர். ` இல்லை. நான் கொணர்ந்த மூலிகை தான் சஞ்­சீ­வி­யாக இருந்­தது. ‘ என்­றார் வேறொ­ரு­வர்.                                    

(தொட­ரும்)