குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்பு

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 15:50

புதுடில்லி

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சந்தித்துப் பேசினார்.

மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டது.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு, அமைச்சரவையில் முக்கிய இடம் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு உள்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, அமித் ஷா இன்று சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என ராஷ்டிரபதி பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமித் ஷா டுவிட்டரில்,”இன்று காலை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினேன். அவரை சந்திப்பது என்பது எப்போது மகிழ்ச்சியானதாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.