ஒற்றைத்தலைமை தேவை என்ற கோரிக்கை இனி அதிமுகவில் எழாது: ஜெயக்குமார் பேட்டி

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 14:25

சென்னை,

ஒற்றைத்தலைமை தேவை என்ற கோரிக்கை இனி அதிமுகவில் எழாது என இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட   அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதிமுக  தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலுக்கு பின்னால் நடக்கக்கூடிய வழக்கமான கூட்டம் தான். ஒரு பிரச்னையும் இல்லை.

தற்போது நடைபெற்றது வழக்கமான ஆலோசனை கூட்டம் தான். கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதகமும் இல்லை.

ஒற்றைத்தலைமை தேவை என்ற கோரிக்கை இனி அதிமுகவில் எழாது.

உள்ளாட்சித்தேர்தல், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்னையே இல்லை, அதுகுறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை.

இவ்வாறு, அமைச்சர் ஜெயக்குமார்  கூறினார்.