அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் ஊடகங்களுடன் பேச தடை விதிப்பு

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 13:18

சென்னை

அதிமுக அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் அடுத்த அறிவிப்பு வரும்வரை ஊடகம் , பத்திரிக்கை, சமூகத் தொடர்பு சாதனங்களில் எந்தக கருத்தையும் தெரிவிக்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் அறிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கை விவரம்:


இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செலவமும்  கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமியும் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு அறிவித்துள்ளனர்.

15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என்ற பேச்சுக்கு முடிவுகட்ட  15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க அதிமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட இரண்டு செய்தி குறிப்புகளில் ஒரு முக்கியத் தீர்மானம் குறித்து செய்தி வெளியிடப்படவில்லை என மூத்த செய்தியாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியபடி, ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதம், கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிகாட்டும் தலைமை எண்ணிக்கையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமைப்பாளர், இணை அமைப்பாளர், ஆகிய இருவருடன் புதிதாக துணை அமைப்பாளர்கள் 2 பேரையும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவினால் அமைப்பாளர்கள் உட்பட வழிகாட்டும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

துணை அமைப்பாளர்கள் 2 பேர் யார் என்பதும், வழிகாட்டுதல் குழுவில் சேர்க்கப்பட உள்ள 11 பேர் யார் என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.