அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நிறைவு - அதிகாரப்பூர்வமான 5 தீர்மானங்கள் நிறைவேறியதாக அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 12:06

சென்னை,

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்ற சர்ச்சைக்கு இடையே அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை – ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில், இன்று காலை தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக செய்தித் தொடர்பாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், 5 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.


அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்களின் நகல் கீழே தரப்பட்டுள்ளன.