‘நிரந்­தர’ பிரேக் எடுக்­கலே! – சந்­தோஷி

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019

ஒரு நேரத்­தில், ஒரே சம­யத்­தில் தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், மலை­யா­ளம் ஆகிய நான்கு மொழி­க­ளி­லும் பல சீரி­யல்­க­ளி­லும் நடித்­த­வர், சந்­தோஷி.  அதோடு பல திரைப்­ப­டங்­க­ளி­லும் நடித்­துள்­ளார்.  தற்­போது அவர் கர்ப்­ப­மாக இருப்­ப­தால் இப்­போ­தைக்கு நடிப்­ப­தி­லி­ருந்து வில­கி­யுள்­ளார்.

அவ­ரு­டைய பேட்டி:

 ‘‘நான் எட்­டா­வது வய­சுல இருந்து  டிவி­யிலே நடிச்­சுக்­கிட்டு இருக்­கேன். என் அம்­மா­வும் (நடிகை பூர்­ணிமா) ஒரு நடி­கை­தான். ‘வாழ்க்கை,’ ‘ருத்ர வீணை,’ ‘அண்ணி,’ ‘அம்மு,’ ‘அரசி,’ ‘இள­வ­ரசி,’ ‘வாடகை வீடு,’ ‘பொண்­டாட்டி தேவை,’ ‘இல்­லத்­த­ரசி,’ ‘பாவ­மன்­னிப்பு,’ ‘மர­கத வீணை’ உட்­பட பல சீரி­யல்­கள்­ல­யும் நடிச்­சி­ருக்­கேன்.

ராதிகா மேடம் எனக்கு பெரிய இன்ஸ்­பி­ரே­ஷன். ‘இள­வ­ரசி’ உட்­பட அவங்­க­ளோட தயா­ரிப்­பிலே நிறைய சீரி­யல்­கள்ல நடிச்­சி­ருக்­கேன். ‘இள­வ­ர­சி’­­­யிலே ஆறரை வரு­ஷம் நடிச்­சேன். அந்த அனு­ப­வத்தை எல்­லாம் என்­னால மறக்­கவே முடி­யாது. ‘மர­கத வீணை,’ நான் நடிச்ச கடைசி சீரி­யல். இது­வரை சினிமா வாய்ப்பு கேட்டு யார்­கிட்­ட­யும் நான் போன­தில்லே. எல்­லாம் என்னை தேடி வந்­த­து­தான்.  அது­வும் எனக்கு பிடிச்ச கதை­கள்­ல­தான் நடிச்­சேன். ஹீரோ­யி­னா­க­வும், கேரக்­டர் ரோல்­கள்­ல­யும் சில படங்­கள்ல நடிச்­சேன்.  ‘பாபா,’ ‘ஆசை ஆசை­யாய்,’ ‘பாலா,’ ‘மாறன்,’ ‘உன்னை சர­ண­டைந்­தேன்,’ ‘மிலிட்­டரி’ இதெல்­லாம் நான் நடிச்ச படங்­கள். டைரக்­டர் என்­கிட்ட கதை சொல்ல வரும்­போதே நான் கிளா­மரா நடிக்­க­மாட்­டேன்­னும், பாலி­யல் வன்­கொ­டுமை, முத்­தக்­காட்­சி­கள்ல நடிக்­க­மாட்­டேன்­னும் ஸ்டிரிக்டா சொல்­லி­டு­வேன். அத­னால, பல சினிமா வாய்ப்­பு­களை தவிர்த்­தேன். இதன் கார­ணமா நம்­மால சினி­மா­விலே புகழ் பெற முடி­ய­லை­யேன்னு கொஞ்­சம் கூட வருத்­தப்­ப­டலே. அதே சம­யம், சீரி­யல்­கள்ல நல்ல நல்ல கேரக்­டர்­கள் கிடைச்­சிச்சு. அத­னால பல வரு­ஷமா சீரி­யல்­கள்ல நடிச்­சேன்.

எனக்கு பேஷன் டிசை­னிங் மேலே ரொம்ப பிரி­யம் உண்டு.  அதி­லேயே புதுசா பிசி­னஸ் பண்­ண­லாம்னு நினைச்­சேன். அப்­படி நானும் என் ஹஸ்­பன்­டும் பார்ட்­னர்­ஷிப் சேர்ந்து ‘பிலஷ் போடிக் & பியூட்டி லாஞ்ச்’ அப்­ப­டீங்­கற பேர்ல ஒரு கடையை சில வரு­ஷங்­க­ளுக்கு முன்­னாடி சென்­னை­யிலே ஆரம்­பிச்­சோம்.  கல்­யாண பொண்­ணுக்­கான ஆடை­கள், மேக்-­­­கப், ஆப­ர­ணங்­கள்ன்னு எல்­லாமே கிடைக்­கிற கடை. அது மட்­டு­மில்லே, கல்­யாண போட்­டோ­கி­ரா­பி­யும் பண்­றோம். வெளி­நா­டு­கள்ல இருந்து பல பேரும் என்­கிட்ட பிராக்­டீ­சுக்கு வர்­றாங்க. இப்போ மொத்­தம் ரெண்டு கிளை­கள் இருக்கு. மது­ரை­யி­லும் ஐத­ரா­பாத்­தி­லும் கிளை­கள் ஆரம்­பிக்க போறோம்.

எனக்கு ரெண்­டா­வது குழந்தை பிறக்க போகுது. அத­னால கிட்­டத்­தட்ட ஒரு வரு­ஷத்­துக்கு என்­னால நடிக்க முடி­யாது. அதுக்கு பிறகு நல்ல கதை­கள் வந்­துச்­சுன்னா, கண்­டிப்பா நடிப்­பேன்.  நடிப்­புத்­து­றை­யிலே நிரந்­த­ரமா வேலை இருக்­காது. அத­னால, பிசி­னசை பார்த்­துக்­கிட்டே நடிக்­க­லாம்ணு இருக்­கேன். நடிக்­கி­ற­திலே இருந்து நிரந்­தர ‘பிரேக்’ எடுக்­கலே. இதை நான் வலி­யு­றுத்தி சொல்­லிக்க ஆசைப்­ப­டு­றேன்.”