அம்­ப­லப்­ப­டுத்­தும் ஜக்­கம்மா!

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019

புதிய தலை­மு­றை­யில் ஒளி­ப­ரப்­பா­கும் ‘கிச்­சன் கேபி­னட்’  அர­சி­யல் நையாண்டி நிகழ்ச்­சி­யில் மேலும் ஒரு புதிய பாத்­தி­ர­மாக ஜக்­கம்­மா­வும் இடம்­பெ­று­கி­றது.  

ஜக்­கம்மா வேடிக்­கை­யான அறி­வார்ந்த ஒரு வீதி ஜோதிட பெண்­மணி. அர­சி­ய­லில் கடந்த காலத்­தை­யும், எதிர்­கா­லத்­தை­யும் செய்தி வடி­வில் வெளிப்­ப­டுத்­தும் அவள்,  தன் சாது­ரிய கருத்­துக்­க­ளு­டன், அர­சி­யல்­வா­தி­க­ளின்  வாழ்க்­கை­யில் கடந்த காலத்தை கடந்து, அவர்­க­ளின் எதிர்­கா­லத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றாள். இந்த கதா­பாத்­தி­ரத்­து­டன், எளிய நகைச்­சு­வை­யு­டன் சொல்­லும் இந்த நிகழ்ச்சி, ஒரு அபத்­த­மான உண்மை அல்­லது அர­சி­யல்­வா­தி­க­ளின் முரண்­பாட்டை அம்­ப­லப்­ப­டுத்­தும் ஜக்­கம்­மா­வாக இந்­நி­கழ்ச்­சியை தொகுத்து வழங்­கு­கி­றார் ஹேமா.