மாற்றம்!

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019


நியூஸ் 7 தமி­ழில் நாள்­தோ­றும் மதி­யம் 2 மணிக்கு ‘டிக் டிக் செய்­தி­கள்’ ஒளி­ப­ரப்­பா­கி­றது. தொடர் நேரலை செய்தி வடி­வத்­தி­லி­ருந்து மாறு­பட்டு விறு­வி­றுப்­பாக அந்த நாளின் நிகழ்­வு­களை சுருக்­க­மா­க­வும், மக்­க­ளின் மன­துக்கு நெருக்­க­மா­க­வும் செய்­தி­யாக்கி தரு­கி­றது இச்­செய்தி அறிக்கை. சிவ­சங்­க­ரி­யும், மனோ­ஜும் தொகுத்து வழங்­கு­கின்­ற­னர்.

தமி­ழக, தேசிய அர­சி­யல் நகர்­வு­கள், அரசு அறி­விப்­பு­கள், கல்வி மற்­றும் வேலை வாய்ப்பு தக­வல்­கள், சமூக வலைத்­தள சர்ச்­சை­கள், சுவா­ரஸ்­ய­மான திரை­யு­லக தக­வல்­கள், அர­சி­யல் கட்சி தலை­வர்­க­ளின் கருத்­துக்­கள், பதற வைக்­கும் விபத்­து­கள், உறைய வைக்­கும் குற்­றச் செய்­தி­கள், உலகை உலுக்­கும் நிகழ்­வு­கள், கண்ணை கவ­ரும் திரு­வி­ழாக்­கள், பொரு­ளா­தா­ரம் என அனைத்து தரப்­பட்ட செய்­தி­க­ளை­யும் செய்­திச் சர­மாக கோர்த்து வழங்­கு­கி­றது. சாப்­பாட்டு நேரத்­தையே தக­வல் களஞ்­சி­ய­மாக மாற்­றும் அள­விற்கு தேர்ந்­தெ­டுத்த செய்­தி­க­ளின் சர­வெ­டி­யாக நிமி­டத்­திற்கு நான்கு செய்­தி­கள் வரை­க­லைத் தொழில்­நுட்­பம் மற்­றும் ஒளிப்­ப­டக் காட்­சி­க­ளு­டன் அணி­வ­குக்­கி­றது.