சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 396– எஸ்.கணேஷ்

11 ஜூன் 2019, 06:12 PM

நடி­கர்­கள்: ஸ்ரீகாந்த், சினேகா, மணி­வண்­ணன், விவேக், தேவ­தர்­ஷினி மற்­றும் பலர்.

இசை: வித்­யா­சா­கர், ஒளிப்­ப­திவு: ஆர். திவா­க­ரன், எடிட்­டிங்: சுரேஷ் அர்ஸ், தயா­ரிப்பு:   டி.ஜி. தியா­க­ரா­ஜன், திரைக்­கதை, இயக்­கம்: கரு. பழ­னி­யப்­பன்

பார்த்­தி­பன் (ஸ்ரீகாந்த்) மார்­கெட்­டிங் எக்­ஸக்­யூட்­டி­வாக பணி­பு­ரி­யும் ஒரு கனவு இளை­ஞன். நண்­பர்­க­ளோடு சேர்ந்து ஊர் சுற்­று­வ­தில் விருப்­ப­மாக இருப்­ப­வ­ருக்கு தனது திரு­ம­ணத்­தைப் பற்றி ஒரு கனவு உண்டு. பெற்­றோர் நிச்­ச­யிக்­கும் திரு­ம­ணத்­தில் நம்­பிக்­கை­யின்றி தனது விருப்­பங்­க­ளுக்கு ஏற்ற பெண்­ணிற்­காக காத்­தி­ருக்­கி­றார். ஒரு நாள் தனது கனவு நாய­கியை (சிநேகா) பார்க்­கி­றார். அவரை தினந்­தோ­றும் பின் தொடர்ந்து அவ­ரைப் பற்­றிய விவ­ரங்­களை சேக­ரிக்­கி­றார். இரு­வ­ரது ரச­னை­க­ளும் ஒத்து போகவே அவரை தனக்­குள்­ளேயே காத­லிக்­கத் தொடங்­கு­கி­றார். இதற்­கி­டையே பெற்­றோ­ரின் வற்­பு­றுத்­த­லுக்­காக பெண் பார்க்க மணி­வண்­ணன் வீட்­டிற்கு செல்­கி­றார். அங்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்­தி­ருக்­கி­றது. மணி­வண்­ண­னின் மகள் சத்­யா­தான் (சிநேகா) அவ­ரது காதலி. தனது காத­லியே மனை­வி­யாக வரு­வ­தை­ய­றிந்து மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றார்.

இரு­வ­ருக்­கும் சிறப்­பாக திரு­ம­ணம் நடை­பெ­று­கி­றது. திரு­ம­ணம் முடிந்து வீடு திரும்­பும் வழி­யில், தினந்­தோ­றும் பின்­தொ­ட­ரும் இடத்­தில் அவ­ரது காத­லியை பார்க்­கி­றார். அப்­போ­து­தான், தான் மணந்­தி­ருப்­பது தனது காத­லி­யைப் போன்ற தோற்­றம் கொண்ட சத்­யாவை என்று புரிந்து கொள்­கி­றான்.

தன் காத­லியை தேடி அவ­ளது அலு­வ­ல­கத்­திற்கு சென்று விசா­ரிக்­கி­றான். அவள் பெயர் ஜனனி (சிநேகா) என்­றும், வேறு ஊரி­லி­ருந்து பணி தொடர்­பாக தற்­கா­லி­க­மாக இங்கு வந்­தி­ருப்­ப­தும் தெரி­ய­வ­ரு­கி­றது. ஏமாற்­ற­ம­டை­யும் பார்த்­தி­பன், மனைவி சத்­யா­வி­ட­மி­ருந்து வில­கியே இருக்­கி­றான். மிகுந்த பொறு­மை­யும், அன்­பும் உடைய சத்யா, பார்த்­தி­பன் ஏதோ குழப்­பத்­தில் இருப்­பதை உணர்ந்து கொள்­கி­றாள்.

பார்த்­தி­ப­னின் நண்­பன் மனோ (விவேக்), சத்­யா­வின் நல்ல மனதை எடுத்­துக்­கூறி அவளை ஏற்­றுக்­கொள்­ளு­மா­றும், பார்த்­தி­ப­னின் தவ­றான கணிப்­பால் அவளை வருந்­த­வைக்க வேண்­டாம் என்­றும் அறி­வுரை கூறு­கி­றான். சிறிது சிறி­தாக சத்­யா­வின் அன்­பி­லும் கலை­ர­ச­னை­யி­லும் பார்த்­தி­ப­னின் மனம் மாறத்­தொ­டங்­கு­கி­றது. அனை­வ­ரும் ஆச்­ச­ரி­யப்­ப­டும் விதத்­தில் ஜனனி இவர்­க­ளின் எதிர் பிளாட்­டிற்கு குடி­வ­ரு­கி­றாள். சத்­யா­வும், ஜன­னி­யும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் கண்டு ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தோடு நல்ல தோழி­க­ளா­க­வும் மாறு­கி­றார்­கள். குடும்­பத்­தார் அனை­வ­ரும் ஜன­னி­யைக் கண்டு மகிழ்ச்­சி­ய­டை­கி­றார்­கள்.

பார்த்­தி­பன் ஜன­னியை முன்­னரே தெரிந்­த­தாக காட்­டிக்­கொள்­ளா­மல் அவ­ளோடு நட்­பாக பழ­கு­கி­றான். மனோ­வுக்கு மறு­ப­டி­யும் பார்த்­தி­ப­னின் மனம் ஜன­னி­யி­டம் போய்­வி­டுமோ என்ற பயம் ஏற்­ப­டு­கி­றது. ஜன­னி­யி­டம் அனைத்து உண்­மை­க­ளை­யும் சொல்லி பிரச்­னையை முடிக்க நினைக்­கும் மனோ,  ஜனனி என்று நினைத்து சத்­யா­வி­டம் எல்­லா­வற்­றை­யும் சொல்­லி­வி­டு­கி­றான். ஜன­னி­யின் நாக­ரீக உடை­யி­லி­ருக்­கும் சத்யா, தன் கண­வ­னின் முந்­தைய காதல் தெரிந்­த­தும் உடைந்து விடு­கி­றாள். தனது பெற்­றோர் வீட்­டிற்கு சென்று விடு­கி­றாள். பார்த்­தி­பனை கோயி­லில் சந்­திக்­கும் ஜனனி தன் மேல் இருக்­கும் காதலை பற்றி கேட்­கி­றாள். முன்பு ஜன­னியை விரும்­பி­யது உண்­மை­தான், ஆனால் தனது மனைவி சத்­யா­வின் காதலே தனக்கு வேண்­டும் என்­றும், அவள் தனது உண்மை அன்பு புரிந்து வரும் வரை காத்­தி­ருக்­கப் போவ­தா­க­வும் பார்த்­தி­பன் கூறு­கி­றான். சத்­யா­விற்கு உண்­மையை புரிய வைப்­ப­தற்­காக ஜனனி செய்த ஏற்­பா­டு­தான் இந்த சந்­திப்பு. தனது கண­வர் தன்னை மட்­டுமே விரும்­பு­வதை உண­ரும் சத்யா அவனை அணைத்­துக் கொள்ள, அனை­வ­ரது குழப்­பங்­க­ளும் தீர்­கின்­றன. ஜனனி தனது ஊருக்கு திரும்ப மன­மொத்த தம்­ப­தி­யாய் பார்த்­தி­ப­னும், சத்­யா­வும் அவ­ளுக்கு விடை கொடுக்­கி­றார்­கள்.

அதி­ரடி ஆக்­க்ஷன் படங்­க­ளுக்கு மத்­தி­யில் அழ­கான, அமை­தி­யான பட­மாக வெளி­வந்து வெற்றி பெற்­றது 'பார்த்­தி­பன் கனவு.' நாய­கி­யாக ஜோதி­காவை நினைத்­தி­ருந்த இயக்­கு­நர், அவ­ரது தேதி­கள் கிடைக்­காத கார­ணத்­தால் சிநே­காவை நாய­கி­யாக்­கி­னார். முதன்­மு­றை­யாக இரட்டை வேடத்­தில் நடித்த சிநே­கா­வும், தான் ஒரு சிறந்த நடிகை என நிரூ­பித்­தார்.

தெளி­வான காதல் காட்­சி­க­ளுக்கு இடையே விவேக், தேவ­தர்­ஷினி மற்­றும் நண்­பர்­க­ளின் காமெடி படத்தை சுறு­சு­றுப்­பாக்கி ­யது. தெலுங்­கில் 'அம்­மாயி பாகுந்தி' என்ற பெய­ரி­லும், மலை­யா­ளத்­தில் 'மஞ்சு பெய்­யும் முன்பே' என்ற பெய­ரி­லும் மறு உரு­வாக்­கம் செய்­யப்­பட்­டது.

2003-ம் ஆண்­டுக்­கான தமிழ்­நாடு திரைப்­பட விரு­து­கள் பல­வற்றை படம் பெற்­றது.  

சிறந்த இயக்­கு­நர் – கரு. பழ­னி­யப்­பன், சிறந்த நடி­கர் – ஸ்ரீகாந்த், சிறந்த நகைச்­சுவை நடி­கர் – விவேக், சிறந்த நகைச்­சுவை நடிகை – தேவ­தர்­ஷினி, சிறந்த பாட­லா­சி­ரி­யர் – கபி­லன் (ஆலங்­கு­யில்), சிறந்த பாடகி – ஹரிணி (ஆலங்­கு­யில்). வித்­யா­சா­க­ரின் இசை­யில் பாடல்­கள் அனைத்­தும் தேனாய் இனித்­தன.