ஊழல் புகார்கள் எதிரொலி: 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: குடியரசு தலைவர் அதிரடி

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 16:15

புதுடில்லி

ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ள ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர், உதவி ஆணையர் உள்ளிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேருக்கு குடியரசு தலைவர் கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராம் குமார் பார்கவா (உதவி ஆணையர், லக்னோ), 

அலோக் குமார் மித்ரா (ஆணையர், கொச்சி), 

சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா (ஆணையர், நொய்டா), 

அருளப்பா பி (ஆணையர், கொச்சி), 

அஜோய் குமார் சிங் (ஆணையர், கொல்கத்தா), 

பிபி.ராஜேந்திர பிரசாத் (ஆணையர், குஜராத்), 

ஹோமி ராஜ்வன்ஷ் (ஆணையர், தமிழ்நாடு), 

ஸ்வேதாப் சுமன் (இடைநீக்கத்தில் உள்ள ஆணையர், கவுஹாத்தி), 

அண்டசு ரவீந்தர் (கூடுதல் ஆணையர், புவனேஷ்வர்), 

விவேக் பாத்ரா (கூடுதல் ஆணையர், தமிழ்நாடு), 

அசோக் குமார் அகர்வால் (இணை ஆணையர், புதுடில்லி), 

சந்தர் சயின் பாரதி (கூடுதல் ஆணையர், அலகாபாத்) 

ஆகியோருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படவுள்ளதாக நிதித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,கிளாஸ் ஜே வில் உள்ள 56வது சட்டத்தின் கீழ் குடியரசு தலைவர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கியுள்ளார். அவர்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஊழல், பாலியல் கொடுமை, நில மோசடி, பண மோசடி என பல புகார்கள் இந்த அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,