ஒவ்வொரு இலாகா செயலாளரும் ஐந்தாண்டு செயல் திட்டம் வகுக்க அமைச்சரவைச் செயலாளர் ஆணை

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 15:38

புதுடெல்லி

மத்திய அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு இலாகாவும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என மத்திய அமைச்சரவை செயலர் பி.கே. சின்ஹா வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆணையை பி.கே. சின்ஹா வழங்கினார்.

மத்திய அமைச்சரவை செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் பி கே சின்ஹா துவக்க உரையாற்றினார். அப்பொழுது

பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் நெருக்கமாக கலந்துரையாடும் பழக்கம் உடையவர் இயக்குனர், உதவி செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுடன்கூட அவர் உரையாற்றும் பழக்கத்தை சென்ற முறை பிரதமராக இருந்த பொழுது பின்பற்றினார். இப்பொழுதும் இந்த நடைமுறையில் மாற்றம் இராது.

இப்பொழுது அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு இலாகாவின் செயலாளரும் அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கான செயல் திட்டத்தை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும். இந்த செயல் திட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக் கான இலக்குகள் என்ன என்றும்  அந்த இலக்குகளை அடைவதற்கு படிப்படியான செயல் திட்டத்தையும் தயாரித்து செயலர்கள் வழங்க வேண்டும் என பி கே சின்ஹா குறிப்பிட்டார்.

இது தவிர ஒவ்வொரு இலாகாவும் தான் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகள் என்னென்ன என்று முடிவுகளை பட்டியல் இட்டு தாக்கல் செய்ய வேண்டும். இந்த முடிவுகள் எந்த காலவரிசையில் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும் ஒவ்வொரு முடிவுக்கும் நூறு நாட்களுக்குள் உரிய அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அமைச்சரவைச் செயலாளர் பி கே சின்ஹாவின் உரையைத் தொடர்ந்து செயலாளர்கள் தங்கள் கருத்துக்களை அலட்சியம் ஆகியவை குறித்து விரிவாக பேசினார்கள்.

கொள்கை முடிவுகளை நிர்வாக அடிப்படையில் எடுப்பது குறித்தும் உணர்வு பூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், தகவல் தொடர்பு தொழில்நுட்ப முன்முயற்சிகள். கல்வி சீர்திருத்தம், சுகாதார நலன் பேணுதல், தொழிற் கொள்கை, பொருளாதார வளர்ச்சி, திறன் மேம்பாடு ஆகிய துறைகள் குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

பிரதமர் மோடி பேச்சு

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசும்பொழுது, 2014 ஜூன் மாதம் இதேபோல அமைச்சரவையில் உள்ள இலாகாக்களின் செயலாளர்கள் கூட்டத்தில் தான் பேசியதை நினைவு கூர்ந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பற்றி குறிப்பிட்ட நரேந்திர மோடி, சென்ற 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்கு மக்கள் பரிசாக தேர்தல்களில் வாக்குகளை வழங்கி இருக்கிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கடினமாக உழைத்ததற்கு பரிசுகள் தந்து இருக்கிறார்கள் என மோடி கூறினார்.

சாதாரண மனிதர்கள் இந்த அரசினை எவ்வாறு நம்புகிறார்கள் என்பதற்கு மீண்டும் ஆட்சியை பரிசாக தந்து இருப்பதே சான்றாகும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த தேர்தலில் இந்திய வாக்காளர்கள் தாங்கள் விரும்புவது என்ன என்பதை சூசகமாக கோடிட்டுக் காட்டி இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்களை நிறைவேற்றும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இதனை சவாலாக கருதவேண்டியதில்லை. நாம் ஒரு வாய்ப்பாக கருதலாம்..

இந்திய சமூகம் பல இயற்கைச் சூழல்களை கொண்ட கூட்டு அமைப்பாக அமைந்திருக்கிறது. இந்த வித்தியாசமான பின்னணிகளை சிறப்பாக நாம் பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவின்ஒவ்வொரு  ஒவ்வொரு மாவட்டமும், ஒவ்வொரு மாநிலமும் 5 லட்சம் டாலர் மதிப்புள்ள இந்திய பொருளாதாரத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது என்ற உணர்வு நம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். இந்த லட்சியத்தை எட்டும் வகையில் நமது முன்னேற்றம் அமைய வேண்டும்..

இந்தியாவில் தொழில் தொடங்கி நடத்துவதற்கான சிக்கல்கள் குறைக்கப்பட்டு சுலபமாக்கப் பட்டுள்ளது.

இந்த எளிமைப்படுத்துதல் அல்லது சுலபமானதாக மாற்றுதல் சிறு தொழில் மற்றும் சிறு வர்த்தகர்கள் செயல்களிலும் பிரதிபலிக்கும்படி நமது பணி அமைய வேண்டும்.

அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு இலாகாவும் பல்வேறு வாழ்க்கை துறைகளைச் சார்ந்த மக்களின் வாழ்க்கையை சிக்கல் இல்லாமல் சுலபமானதாக வளர்த்தெடுப்பதை  தங்களது இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

நீராதாரம், மீன்கள், கால்நடை வளர்ப்பு, ஆகியவை அரசின் முக்கியமான களங்களாக கருதப்பட வேண்டும்.

நடந்த விவாதத்தின்போது செயலாளர்கள் லட்சியம், ஈடுபாடு, செயல் ஊக்கம், ஆகியவற்றுடன் நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல துடிப்புடன் செயல்படுவதை அறிய முடிந்தது.

இந்த குழுவின் செயல்பாடு குறித்து பிரதமர் என்ற வகையில் நான் பெருமைப்படுகிறேன்,

ஒவ்வொரு துறையின் பணியையும் பயன்களையும் மேம்படுத்துவதற்காக அனைவரும் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்த வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.

நம்முடைய சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியாவை தலைசிறந்த நாடாக மாற்றுவதற்கும் மக்கள் தங்கள் பங்களிப்பை ஆற்றும்படி நாம் அவர்களுக்கு உணர்வூட்ட வேண்டும். மக்களின் லட்சியங்களை நிறைவேற்ற நாம் அனைவரும் முழு மூச்சுடன் செயல்படத் துவங்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகிறேன் என பிரதமர் மோடி உருக்கமாக உரையாற்றினார்.