கொப்பரைக் தேங்காய்களுக்கான அடிப்படை ஆதார விலை நிர்ணயம் - தமிழ்நாடு அரசு அரசாணை

பதிவு செய்த நாள் : 10 ஜூன் 2019 19:14

சென்னை,

கொப்பரைக் தேங்காய்களுக்கான அடிப்படை ஆதார விலையாக கிலோவுக்கு 90 முதல் 95 ரூபாய் வரை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திருப்பூர், ஈரோடு, கோவை, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்பட 21 மாவட்டங்களில் சுமார் 4.36 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. 

ஆண்டுக்கு 2.06 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஜூன் முதல் நவம்பர் வரை கொப்பரை தேங்காய்களின் வரத்து அதிகமாக இருக்கும். 

தற்போது தமிழக சந்தைகளில் கொப்பரைத் தேங்காய் கிலோவுக்கு 82 ரூபாய் வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கொப்பரை தேங்காய்க்களின் விலை நிலையற்ற தன்மையோடு இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் பயன்பெறும் நோக்கில், கொப்பரை தேங்காய்களுக்கு கொள்முதல் விலையை கிலோவுக்கு 90 முதல் 95 ரூபாய் வரை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.