ஸ்லோகமும் பொருளும்!

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019

யதா ஸந்நிதாநம் கதா மாநவா மே

பவாம்போதிபாரம் கதாஸ்தே ததைவ!

இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்!!

பொருள்: பராசக்தியின் புதல்வனே! உன் சன்னிதானத்தை அடைந்தவர்கள் பிறவிக்கடலில் இருந்து கரையேறி விடுவர் என்பதை உலக மக்களுக்கு உணர்த்தவே கடற்கரையோரம் (திருச்செந்துாரில்) கோயில் கொண்டிருக்கிறாய். உன்னைச் சரணடைந்த என்னை ஈடேற்றுவாயாக.