அன்பு பேச்சுக்கு உலகமே கட்டுப்படும்!

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019

* சண்டன் என்பது?

    உயிரைப் பறிக்க வேகமாக வருவதால்.

* எது பயன்படாது?

    அன்பில்லாத வைராக்கியம். அது உயிரில்லாத உடம்பைப் போன்றது.

 * அறிவின் பயன்?

    எவ்வுயிரிடத்தும் இரக்கம் கொள்வது.

 * உலகம் யாரிடம் கட்டுப்படும்?

    எவன் புன்சிரிப்புடன் அன்பாகப் பேசுகின்றானோ, அவனிடம்.

 * யாருடைய பாவத்துக்கு கழுவாய் கிடையாது?

    நண்பருக்கு துரோகம் செய்தவன், நன்றி கொன்றவன், பெண் கொலை செய்தவன், கோள் சொல்கின்றவன் ஆகியோர் செய்த பாவத்துக்கு.

 * அறிவினால் செய்யப்படும் காரியம்?

    உத்தமம்.

 * சவுகரியத்தால் செய்யப்படும் காரியம்?

    மத்திமம்.

* வலிமையால் திரிந்து செய்யும் காரியம்?

    அதமம்.

* எவன் பெரிய ஆபத்தில் மூழ்கமாட்டான்?

    அறிவும், நீதிநூல்களில் திறமையும் உடையவன்.

* உலகம் எதனால் கட்டுப்படுகிறது?

    நம்பிக்கையால்.

* துக்கத்தை தருவது எது?

    வேண்டாத இடத்தில் வசிப்பதும், விரும்பிய பொருளை இழப்பதும்.

 ‘வாரியாரின் ஒரு வரி பதில்’

நூலிலிருந்து...