![]() | ![]() |
பியோ (FIEO) என்பது பெடரேஷன் ஆப் இண்டியன் எக்ஸ்போர்ட்டர்ஸ் ஆர்கனைஸேஷன் என்பதன் சுருக்கம் ஆகும். இது ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் ஒரு ஏற்றுமதி வளர்ச்சி குழுமத்தில் ஒன்றாகும்.
பே-பால் என்பது ஒரு ஆன்லைன் மணி டிரான்ஸ்பர் கம்பெனி. இது 202 நாடுகளில் தற்போது உபயோகத்தில் உள்ளது, 218 மில்லியன் (அதாவது 21.8 கோடி மக்கள்) உபயோகிக்கின்றனர். பே-பால் மூலமாக வாடிக்கையாளர்கள் 25 கரன்சிகளில் பணங்களை விரைவாக, குறைந்த செலவில் அனுப்பவும், பெறவும் உதவுகிறது. சிறிய அளவில் செய்யும் ஏற்றுமதி இறக்குமதிகளுக்கு இந்த வகையில் பேமண்ட் பெறுவது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
அவக்கோடா
அவக்கோடா என்பது ஒரு வகையான பழம். இது பல நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் அதிகம் விளைவதில்லை. ஆதலால் இதன் உபயோகம் இந்தியாவில் அதிகம் இல்லை. ஆனால் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்கப்படுகிறது. இது மிகவும் சத்துள்ள ஒரு பழம். விலை மிகவும் அதிகமானது.
தற்போது இந்த பழத்தை பதப்படுத்தி மெக்ஸ்கோவில் இருக்கும் கம்பெனிகள் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளன. மெக்ஸிகோ அவக்கோடா பழத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
நைஜிரியா ஏற்றுமதி
நைஜிரியா என்றாலே ஏற்றுமதியாளர்களுக்கு ஒருவித பயம் இருக்கும். காரணம் அங்கு இறக்குமதியாளர்களில் ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது தான். ஆனால் ஒரு சில நூறு ஏமாற்று இறக்குமதியாளர்களால் அந்த நாட்டுக்கே ஒருவிதமான கெட்ட பெயரை உருவாக்கி விட்டார்கள்.
ஆனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி நைஜிரியாவிற்கு கூடிக் கொண்டு தான் இருக்கிறது. 2016ம் ஆண்டு இந்தியாவிலிருந்து 1.74பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியும், 7.41 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதியும் செய்திருக்கிறோம் என்பது தான் உண்மை.
சரி, போலி இறக்குமதியாளர்களை எவ்வாறு இனம் காண்பது. அது எளிது. முதலாவது உங்களுக்கு வரும் ஆர்டர் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தால்,குறிப்பாக நைஜிரியா போன்ற நாடுகளிலிருந்து. இரண்டாவது வரும் ஆர்டர் பெரியஆர்டராக இருந்தால். அதாவது 10,000 டன் அரிசி, 100,000 பீஸ் டீ சர்ட் போன்றவை.மூன்றாவது உங்களிடமிருந்து 500 டாலர் கொடுங்கள், 1000 டாலர் கொடுங்கள்,நாங்கள் உங்கள் கம்பெனியை எங்கள் அரசாங்கத்திடம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்என்று கூறும் மெயில்கள் அவர்களிடமிருந்து வந்தால். இது ஆப்பிரிக்க நாடுகள் தாம்என்று இல்லை, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்தும்வரலாம். இறக்குமதியாளர் நல்லவரா என்று நன்னபிக்கை அறிக்கை எடுத்து பார்த்துவிட்டு ஏற்றுமதி செய்வது நல்லது.
ஆர்கிட் மலர்கள் ஏற்றுமதி
பல நாடுகளில் மலர் ஏற்றுமதியில் ஆர்கிட் மலர்கள் தாம் பெரும் இடத்தை
பிடித்துள்ளன. குறிப்பாக தைவான் நாட்டை எடுத்துக்கொண்டால், அந்த நாட்டின்மலர்கள் ஏற்றுமதி 150 மில்லன் டாலரில் 77 சதவிதத்தை ஆர்கிட் மலர்கள் தாம் எடுத்துக்கொண்டுள்ளன. இந்தியாவிலும் இந்த மலர் வளர்ப்புக்கு நல்ல வாய்ப்புக்கள் உள்ளது. புனே அருகில் உள்ள
தலேகான் என்ற இடத்தில உள்ள மலர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.
பானிபட்டும் ஏற்றுமதியும் பானிபட் ஏற்றுமதியில் இறங்கி 45 வருடங்கள் ஆகிவிட்டது. துணி மற்றும் கார்பெட் ஆகியவைகளுக்கு பானிபட் மிகவும் புகழ் பெற்றது. நாற்பது வருடங்களுக்கு முன்பு விஜ் என்ற குடும்பம் சிறிய அளவில் ஆரம்பித்த ஏற்றுமதி இன்று பெரிய அளவில் நடக்கிறது. அவர்கள் மட்டும் தற்போது 4000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.
பங்களாதேஷ் கார்மெண்ட் ஏற்றுமதி
சிறிய நாடான பங்களாதேஷ் இன்று கார்மெண்ட் ஏற்றுமதியில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. காரணம் அந்த நாட்டுக்கு கொடுக்கப்படும் டாரிப் சலுகைகள் தாம்.
நிறைய சலுகைகள் அளிக்கப்படுவதால் பங்களாதேஷ் கார்மெண்ட் ஏற்றுமதி, இந்தியாவின் கார்மெண்ட் ஏற்றுமதியை விட நான்கு மடங்கு கூடுதலாக இருக்கிறது. ஜி.எஸ்.டி. ரீபண்ட் தாமதமும் ஏற்றுமதி குறைவிற்கு ஒரு காரணம்.
இதனால் இந்தியா அந்த நாட்டுடன் போட்டி போட இங்கும் சில சலுகைகள் அளிக்கப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுருத்தப்பட்டு வருகிறது. இல்லாவிடில் இந்தியாவின் ஏற்றுமதி இன்னும் குறைய வாய்ப்புகள் இருக்கிறது.
ஜியாரபிகல் ஐடண்டிபிகேஷன்
வாங்கியாச்சா?
ஜியாரபிகல் ஐடண்டிபிகேஷன் வாங்கவில்லையென்றால் இந்தியாவின் புகழ் பெற்ற பொருட்களுக்கு கூட வேறு நாடு பெயர் வாங்கிக் கொண்டு போய் விடும். இப்படி சில பொருட்களை நாம் இழந்திருக்கிறோம். இதனால் தற்போது ஜியாரபிகல் ஐடண்டிபிகேஷன் வாங்குவது என்பது மிகவும் முக்கியமாகிவிட்டது. அதாவது உங்கள் ஊர் பக்கம் மிகவும் புகழ் பெற்ற பொருட்களுக்கு அது உங்கள் ஊர் பேமஸ் என்ற ஐடண்டிபிகேஷன் வாங்குவது தான் இது. தற்போது மஹாராஷ்டிராவில்
மரத்வாடாவின் புகழ்பெற்ற கேசர் மாம்பழம் (மிகவும் சுவீட்டான ஒரு வெரைட்டி),
தஹானு கோல்வால்டு சிக்கு (சப்போட்டா) பழம் (1888ம் வருடம் இங்கு பயிரிட ஆரம்பிக்கப்பட்ட சிக்கு இன்னும் சிறப்பாக வருடந்தோறும் கிடைப்பது ஒரு ஆச்சரியமான விஷயம். இது அந்த மண்ணின் மகிமை),
ஜல்கான் மாவட்ட வாழைப்பழம் (அருகில் தாபி நதி ஓடுவதால் அந்த மாவட்ட வாழைப்பழத்திற்கு அவ்வளவு சுவை),
முல்ஷியின் அரிசி,
பிவாப்பூர் மிளகாய் (மிகவும் சிவப்பாக இருக்கும் இந்த மிளகாய வயிற்றுக்கு கியாஸ் தொந்தரவுகளை கொடுக்காது) ஆகியவைகளுக்கு ஜி.ஐ. சர்ட்டிபிகேஷன் வாங்கப்பட்டுள்ளது.
இந்த சர்ட்டிபிகேஷன் வாங்குவதற்கு 3 வருடங்கள் வரை ஆனது என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் இப்படி சிறப்பாக இருக்கும் பொருட்களை தேடிப்பிடித்து, தமிழ்நாடு அரசு ஜி.ஐ. சர்ட்டிபிகேஷன் வாங்க வேண்டும். அப்போது தான் நாம் அவற்றை ஏற்றுமதி செய்யும் போது ஒரு தனித்துவம் இருக்கும்.