ஆன்மிக கோயில்கள் : இழந்த வேலைவாய்ப்பு கிடைக்க செய்யும் ஞீலிவனேஸ்வரர்

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019

தல வர­லாறு: பிராம்மி, மாகேஸ்­வரி, கவு­மாரி, வைஷ்­ணவி, வாராகி, இந்­தி­ராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்­னி­க­ளும் தங்­க­ளது திரு­ம­ணத்­திற்கு முன்பு திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு அம்­பா­ளின் தரி­ச­னம் வேண்டி தவம் செய்­த­னர். அவர்­க­ளுக்கு அம்­பாள் காட்சி தந்து, தகுந்த காலத்­தில் நல்ல வரன்­கள் அமை­யப்­பெற்று சிறப்­பு­டன் வாழும்­படி வரம் தந்­தாள். சப்­த­கன்­னி­கள் அம்­பாளை இங்கே எழுந்­த­ரு­ளும்­படி வேண்­டி­னர். எனவே அம்­பாள் இங்கு எழுந்­த­ரு­ளி­னாள். அவள் சப்த கன்­னி­க­ளி­டம்,‘‘நீங்­கள் வாழை மரத்­தின் வடி­வில் இருந்து நீண்­ட­கா­லத்­திற்கு என் தரி­ச­னம் காண்­பீர்­கள்,''என்­றாள். அதன்­படி சப்த கன்­னி­கள் வாழை மரங்­க­ளாக மாறி இங்­கேயே தங்­கி­னர். பிற்­கா­லத்­தில் வாழை வனத்­தின் மத்­தி­யில் அம்­பாள் இருந்த இடத்­தில் சிவ­னும் சுயம்­பு­வாக லிங்க வடி­வில் எழுந்­த­ரு­ளி­னார்.

தல­ பெ­ருமை:

தல விருட்­சம்: இங்கு வாழை மரமே தல­வி­ருட்­சம். திரு­மண தோஷம் உள்­ள­வர்­கள் வாழை மரத்­திற்கு தாலி கட்டி பரி­கார பூஜை­கள் செய்­கின்­ற­னர். இவ்­வாறு செய்­வ­தால் விரை­வில் திரு­ம­ணம் நடக்­கும் என்­பது நம்­பிக்கை.

தர்­ம­ராஜா சன்னிதி: திருக்­க­டை­யூ­ரில் எமனை காலால் உதைத்து சம்­ஹா­ரம் செய்­தார் சிவன். இத­னால், உல­கில் இறப்பு என்­பதே இல்­லா­மல் உயிர்­கள் அனைத்­தும் நீண்ட ஆயு­ளு­டன் இருந்­தன. பாரம் தாங்­காத பூமா­தேவி சிவ­னி­டம் முறை­யிட்­டாள். ஒரு தைப்­பூச தினத்­தன்று சிவன், இத்­த­லத்­தில் எமனை தன் பாதத்­தின் அடி­யில் குழந்­தை­யாக எழும்­படி செய்­தார். தர்­மம் தவ­றா­மல் நடக்­கும்­படி அறி­வு­றுத்தி அவ­ருக்கு மீண்­டும் பணி கொடுத்­தார். இங்கு பிர­ாகா­ரத்­தில் எம­னுக்கு தனி சன்னிதி இருக்­கி­றது. இச்­சன்னி­தி­யில் சிவன், அம்­பாள் மற்­றும் முரு­க­னு­டன் சோமாஸ்கந்­த­ராக இருக்க, சுவா­மி­யின் பாதத்­தின் கீழ் குழந்தை வடி­வில் எமன் இருக்­கி­றார். இச்­சன்னிதி குட­வ­றை­யாக அமைந்­தி­ருப்­பது சிறப்பு. இங்கு அறு­ப­தாம் கல்­யா­ண­மும், ஆயுள் விருத்தி ஹோம­மும் அதி­க­ள­வில் நடத்­து­கின்­ற­னர்.

எமன் சனிக்கு அதி­பதி என்­ப­தால் இங்கு நவக்­கி­ர­கங்­கள் இல்லை. நந்­திக்கு முன்­பு­றம் உள்ள தீபங்­க­ளையே கிர­கங்­க­ளாக எண்ணி வணங்­கு­கின்­ற­னர். கோயில் ராஜ­கோ­பு­ரத்தை ராவ­ணன் வாயில்' என்­கின்­ற­னர். இக்­கோ­பு­ரத்­திற்கு கீழே சுவாமி சன்னி­திக்கு செல்ல ஒன்­பது படிக்­கட்­டு­கள் இருக்­கி­ன்றன. இந்த படி­கள் ராவ­ண­னி­டம் அடி­மை­யாக இருந்த நவக்­கி­ர­கங்­களை குறிப்­ப­தாக சொல்­கி­றார்­கள்.

இறை­வ­னின் திரு­வி­ளை­யா­டல்: திருத்­த­ல­யாத்­திரை சென்ற திரு­நா­வுக்­க­ர­சர் ஞீலி­வ­ன­நா­தரை தரி­சிக்க வந்து கொண்­டி­ருந்­தார். வழி­யில் அவர் பசி­யால் களைப்­ப­டைந்து ஓரி­டத்­தில் நின்­றார். அப்­போது, அர்ச்­ச­கர் ஒரு­வர் அவர் முன் சென்று, சோறு (அன்­னம்) கொடுத்து அவ­ரது பசியை போக்­கி­னார். பின் நாவுக்­க­ர­சர் அவ­ரி­டம் திருப்­பைஞ்­ஞீலி தலம் எங்­கி­ருக்­கி­றது எனக் கேட்­டார். தான் வழி­காட்­டு­வ­தா­கச் கூறிய அர்ச்­ச­கர் அவரை இங்கு அழைத்து வந்­தார். வழி­யில் அவர் திடீ­ரென மறைந்­து­வி­டவே கலங்­கிய நாவுக்­க­ர­சர் சிவனை வேண்­டி­னார். சிவன் அவ­ருக்கு காட்சி தந்து தானே அர்ச்­ச­க­ராக வந்­ததை உணர்த்­தி­னார். அவ­ரது வேண்­டு­த­லுக்­காக லிங்­க­மாக எழுந்­த­ரு­ளி­னார். இவர் ‘சோற்­று­டைய ஈஸ்­வ­ரர்’ என்ற பெய­ரில் கோயி­லின் முன்­பு­றத்­தில் தனி சன்னி­தி­யில் இருக்­கி­றார். சித்­திரை மாதம், அவிட்­டம் நட்­சத்­தி­ரத்­தில் இச்­சன்னி­தி­யில் சோறு படைத்த விழா நடக்­கி­றது.

ஓவிய நட­ரா­ஜர்: வசிஷ்ட முனி­வர் சிதம்­ப­ரம் நட­ரா­ஜரை தின­மும் அர்த்­த­ஜாம நேரத்­தில் தரி­ச­னம் செய்­யும் வழக்­கம் உடை­ய­வர். ஒரு­ ச­ம­யம் அவர் இத்­த­லத்­திற்கு வந்­த­போது இர­வில் இங்­கேயே தங்­கி­விட்­டார். அவர் நட­ரா­ஜ­ரி­டம் தனக்கு நட­னக்­காட்சி தரும்­படி வேண்ட, சுவாமி இங்கே நட­னக்­காட்சி தந்­த­ரு­ளி­னார். இதனை உணர்த்­தும் வித­மாக சுவாமி சன்னி­திக்கு முன்­பு­றம் நட­ரா­ஜர் சித்­திர வடி­வில் வரை­யப்­பட்டு இருக்­கி­றார். எதிரே வசிஷ்­டர் ஓவி­ய­மும் இருக்­கி­றது. இத்­த­லத்­திற்கு ‘மேலச்­சி­தம்­ப­ரம்’ என்ற பெய­ரும் உள்­ளது.

பிரார்த்­தனை : இழந்த வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திரு­மண தடை நீங்க ஆயுள் நீடிக்க இங்கு வேண்­டிக்­கொள்­ள­லாம். எமன் சன்­ன­தி­யில் ஆயுள் ஹோமங்­கள் செய்­கி­றார்­கள்.

நேர்த்­திக்­க­டன்:  பிரார்த்­தனை நிறை­வே­றி­ய­தும் அன்­ன­தா­னம் செய்­வது சிறப்­பா­கும்.

திரு­விழா:  சித்­தி­ரை­யில் 10 நாட்­கள் பிரம்­மோற்சவம், அப்­பர் குரு பூஜை, தைப்­பூ­சத்­தில் எம­னுக்கு சிறப்பு பூஜை.  

பொது தக­வல்: இங்கு மூல­வர் சன்னி­தி­யின் மேல் உள்ள விமா­னம் பத்ர விமா­னம் எனப்­ப­டும். இத்­தல விநா­ய­கர் ‘வசந்த விநா­ய­கர்’ என்ற பெய­ரில் அருள்­பா­லிக்­கி­றார். ஐந்து பிர­ாகா­ரங்­க­ளு­டன் உள்ள இக்­கோ­யி­லில் விசா­லாட்சி, எமன், கல்­யாண, அக்னி, தேவ, அப்­பர், மணி­யங்­க­ருணை என மொத்­தம் ஏழு தீர்த்­தங்­கள் இருக்­கி­ன்றன.  பிர­ாகா­ரத்­தில் உள்ள விநா­ய­கர் சிவன் மற்­றும் செந்­தா­ம­ரைக் கண்­ணன் எனும் பெரு­மா­ளு­டன் சேர்ந்­த­படி இருப்­ப­தும், தட்­சி­ணா­மூர்த்­தி­யிகீழ் நந்தி இருப்­ப­தும் வித்­தி­யா­ச­ மா­ன­தா­கும். கொடி­ம­ரத்­திற்கு அரு­கில் சுயம்பு நந்தி இருக்­கி­றது.

திறக்­கும் நேரம்: காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்­தி­ருக்­கும்.

முக­வரி: ஞீலி­வ­னேஸ்­வ­ரர் திருக்­கோ­யில், திருப்­பைஞ்­ஞீலி - 621 005. திருச்சி மாவட்­டம்.