இது உங்கள் இடம்!

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019


சில்­லறை பிரச்னை!

தமி­ழக அரசு பேருந்­து­க­ளில் பய­ணம் செய்­யும் பய­ணி­க­ளுக்­கும், நடத்­து­னர்­க­ளுக்­கும் பெரும் சங்­க­டம் தரு­வது சில்­லறை பிரச்னை தான். கிரா­மங்­க­ளில் 9 ரூபாய், 11 ரூபாய், 13 ரூபாய் என்­றெல்­லாம் பயண கட்­ட­ணம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது. இத­னால் சில்­லறை தட்­டுப்­பா­டும் பய­ணி­க­ளுக்­கும் நடத்­து­னர்­க­ளுக்கு மிடையே வாக்­கு­வா­தங்­கள் ஏற்­ப­டு­கின்­றன. இதனை தவிர்த்து கட்­ட­ணத்தை முழு­மை­யான தொகை வரு­வது போல் அமைத்­தால் பிரச்னை ஏற்­பட வாய்ப்பு இருக்­கா­தல்­லவா? இதனை போக்­கு­வ­ரத்து துறை கவ­னத்­தில் கொள்ள லாமே... பயண சீட்­டு­கள் வழங்­கு­வ­தும் தவிர்க்­கப்­ப­ட­லாம். முயற்சி செய்­ய­லாமே...

– குலசை ஜேம்­சன், திருச்­செந்­துார்.

***

விபத்தை தடுக்க வேகத்­தடை!

எங்­கள் ஊரின் தென்­பு­றம் கடை­யம் செல்­லும் சாலை­யில் கடந்த ஆண்டு புதி­தாக சாலை போடப்­பட்­டது. அதற்கு முன் அந்த பாதை­யில் நன்­றாக வேகத்­த­டுப்பு போட்­டி­ருந்­த­னர். அத­னால் அந்த வழி­யில் அதிக விபத்­து­கள் ஏற்­ப­டாத வண்­ணம் தடுக்­கப்­பட்­டது. ஆனால் இப்­பொ­ழுது தெற்­கே­யி­ருந்து வரும் ஒரு சில வாக­னங்­கள் வேக­மாக வந்து விபத்­திற்­குள்­ளா­கின்­றன. அந்த சாலை­யின் வட­து­பு­றம் துாத்­துக்­குடி – கொல்­லம் தேசிய நெடுஞ்­சாலை உள்­ளது. எனவே, நெடுஞ்­சா­லைத் துறை­யி­னர் நன்­றாக வேகத்­த­டுப்பு போட்டு வாக­னங்­க­ளில் செல்­வோ­ருக்கு பாது­காப்­ப­ளிக்க வேண்­டு­மென்று கேட்­டுக் கொள்­கி­றோம்.

– கே. பாரி தங்­க­ரத்­தி­னம், தென்­காசி.

*** 

உரிய நட­வ­டிக்கை வந்து விடுமா?

ராய­கிரி, தென்­காசி நக­ராட்சி தொகு­திக்­குள் அமைந்த ஊர். ஆனால், ராய­கி­ரி­யி­லி­ருந்து தென்­கா­சிக்கு சென்று வர நேர­டி­யாக பஸ் வசதி ஒன்­று­மில்லை. தென்­கா­சிக்கு செல்ல வேண்­டு­மா­னால் ராய­கி­ரி­யி­லி­ருந்து சிவ­கி­ரிக்கு சென்று அங்­கி­ருந்து பஸ் மாற வேண்­டும். அல்­லது புளி­யங்­குடி சென்று பஸ் மாற வேண்­டும். ஒரு காலத்­தில் மதிய வேளை­யில் ஒரே ஒரு பஸ் இங்­கி­ருந்தே தென்­கா­சிக்கு சென்று வந்­த­து­தான்! அது நிறுத்­தம் ஆகி நீண்ட கால­மா­கி­விட்­டது. பய­ணி­க­ளின் கூட்­டத்­திற்கு குறை­வில்லை. சாலை வச­தி­க­ளி­லி­ருந்­தும் மக்­க­ளின் மனக்­கு­றையை போக்க சம்­பந்­தப்­பட்ட துறை அலு­வ­லர்­க­ளின் நட­வ­டிக்கை வந்து விடுமா? ராய­கிரி டூ தென்­காசி பஸ் வர வேண்­டும்.

– கோம­தி­நா­ய­கம், ராய­கிரி.

சிறுவனின் நேயம்!

சில தினங்களுக்கு முன்பு நெல்லை நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பேருந்தில் கட்டுக்கடங்காத கூட்டம். நிற்க கூட இடமில்லாமல் இருந்த பேருந்தில் ஒரு இளம் பெண் சுமார் ஒரு வயது குழந்தையுடன் ஏறினார். பேருந்து புறப்பட்டதும் குழந்தையுடன் நிற்கவே மிகவும் சிரமப்பட்டார். எழுந்து இடம் கொடுக்கலாம் என்று நான் விரும்பிய போதும் கூட்டத்தை நினைத்து யோசனையில் எழுந்திருக்காமலேயே அமர்ந்திருந்தேன். அப்போது என் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் சற்றும் யோசிக்காமல் எழுந்து அந்த பெண்ணுக்கு உட்கார இடம் கொடுத்தான். அப்பெண்ணும் இருக்கையில் மகிழ்வுடன் அமர, அப்போதுதான் கவனித்தேன் அச்சிறுவன் ஒரு மாற்றுத்திறனாளி என்று. ஒரு காலில் கிளிப் மாட்டியிருந்தான். உனக்கு நிற்பதற்கு கஷ்டமாக இல்லையா என்று நான் கேட்டதற்கு ‘‘என்னைவிட குழந்தையுடன் நிற்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். என்னால் சமாளிக்க முடியும். ஆனால் குழந்தையுடன் அவர்களால் சமாளிக்க முடியாது’’ என்றான் மிக யதார்த்தமாக. உண்மையில் இறைவன் அவர்கள் உடலால் குறையை வைத்திருந்தாலும் மிக பரந்த மனதை கொடுத்திருக்கிறான் என்பதை உணர்ந்தேன். அச்சிறுவனை என் மடியில் அமர வைத்துக் கொண்டேன்.

– ஆர். பகவதி, பத்தமடை.