புதிய மிகு­மின் கடத்தி கண்­டு­பி­டிப்பு!

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019

மின்­சா­ரத்தை கம்பி வழியே அனுப்­பும்­போது, விர­யம் ஏற்­ப­டு­வதை தடுக்க முடி­யாது. ஆனால், ‘மிகு­மின் கடத்­தி’­கள், மின்­சா­ரத்தை முழு­மை­யாக மறு முனைக்கு சேர்க்­கும் திறன் உடை­யவை. இருந்­தா­லும், மிகு­மின் கடத்­தி­களை மின்கம்­பி­க­ளாக பயன்­ப­டுத்த முடி­யாது. கார­ணம், அவை அறை வெப்­பத்­தில் இயங்­கு­வ­தில்லை. அவை மிகு­மின் கடத்­தும் திறனை, -234 டிகிரி செல்­ஷி­யஸ் அள­வுக்கு குறை­வான வெப்­ப­நி­லை­யில்தான் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

அண்­மை­யில், ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்­ஞா­னி­கள், லான்­த­னம் ஹைட்­ரைடு என்ற மிகு­மின் கடத்­தியை குளிர்­வித்து மின்­சா­ரம் பாய்ச்­சி­னர்.  லான்­த­னம் ஹைட்­ரைடு கம்­பி­கள், -23 டிகிரி செல்­ஷி­யஸ் குளிர்ச்­சியி­லேயே முழு­மை­யாக மின்­சா­ரத்தை கடத்­தி­யது. இது அறை வெப்­ப­நி­லைக்கு அரு­கா­மை­யில், ஒரு மிகு­மின் கடத்­தியை உரு­வாக்­கும் பந்­த­யத்­தில், முக்­கி­ய­மான மைல்­கல் என, ‘நேச்­சர்’ இதழ் அங்­கீ­க­ரித்­துள்­ளது.

பர­வ­லாக மின்கம்­பி­க­ளாக பயன்­ப­டுத்­தப்­ப­டும் தாமி­ரம், அலு­மி­னி­யம் போன்­றவை, கணி­ச­மாக மின்­சா­ரத்தை வீண­டிக்­கின்­றன. உற்­பத்­தி­யா­கும் மின்­சா­ரத்தை முழு­மை­யாக அனுப்ப முடிந்­தால், உல­கெங்­கும் உள்ள மின்­வா­ரி­யங்­கள், நஷ்­ட­மில்­லா­மல் இயங்க

முடி­யும்.