ஒரே ராசியில் திருமணம் செய்யலாமா? – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019

பெற்­றோர்­கள் தங்­கள் மகள் அல்­லது மகன் திரு­ம­ணம் செய்ய எண்­ணும் போது அதா­வது எந்த நட்­சத்­தி­ரத்­தில் திரு­ம­ணம் செய்­ய­லாம் எந்த எந்த நட்­சத்­தி­ரம் திரு­ம­ணத்­திற்கு உகந்­தது அல்ல, அது மட்­டுமா எந்த நட்­சத்­தி­ரம் தம் பிள்­ளைக்கு பொருந்­தும் என்­றெல்­லாம் சந்­தே­கம் எழு­வதை நாம் கண்­கூ­டாக பார்த்து வரு­கி­றோம்.

ஏக நட்­சத்­தி­ரத்­தில் பொருத்­தம் செய்­ய­லாமா-? மற்­றும் ஏக ராசி­யில் பொருத்­தம் செய்­ய­லாமா என்­ப­து­தான். ‘ஏக’ என்பது வட­மொழி சொல், அது, தமி­ழில்,

ஒன்று எனப் பொருள்­ப­டும். அதா­வது ஒரே நட்­சத்­தி­ரத்­தில் பிறந்­த­வர்­களை இணைக்­க­லாமா என்ற எண்­ணம் அனை­வ­ருக்­கும் தொன்று தொட்டு வரு­கி­றது. ஒரே நட்­சத்­தி­ரம் அல்­லது ஒரே ராசி இரு­வ­ருக்­கும் வந்­தால் திரு­ம­ணம் செய்­ய­லாமா, வேண்­டாமா என்ற கேள்­விக்கு இந்த இத­ழில் தரு­கி­றேன்.

பொது­வாக ஜோதிட சாஸ்­தி­ரத்­தில் உள்ள படி சில நட்­சத்­தி­ரங்­கள் ஒரே நட்­சத்­தி­ரத்­தில் வந்­தால் திரு­ம­ணம் செய்­ய­லாம் என்­றும், சில நட்­சத்­தி­ரங்­கள் வந்­தால் திரு­ம­ணம் செய்­யக்­கூ­டாது என்­றும் ‘கால­பி­ர­கா­சிகா’ என்ற ஜோதிட நூல் விளக்­கு­கி­றது.

இணைக்­கக்கூடாத ஒரே நட்­சத்­தி­ரங்­கள் : பரணி, ஆயில்­யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்­டம், சத­யம், பூரட்­டாதி.

மேற்­கண்ட நட்­சத்­தி­ரங்­கள் இவை­ மண­ம­கள், மண­ம­கன் நட்­சத்­தி­ரங்­கள் ஒரே நட்­சத்­தி­ர­மாக வந்­தால் திரு­ம­ணம் செய்­யக்­கூ­டாது. சிறிது கூட பொருத்­தம் இல்லை. இந்த நட்­சத்­தி­ரக்­கா­ரர்­களை ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் இணைக்கக்கூடாது என்று ‘கால­பி­ர­கா­சிகை’ குறிப்­பி­டு­கி­றது.

இணைக்­கக்கூடிய ஒரே நட்­சத்­தி­ரங்­கள் : ரோகிணி, திரு­வா­திரை, மகம், அஸ்­தம், விசா­கம், திரு­வோ­ணம், உத்­தி­ரட்­டாதி, ரேவதி ஆகிய நட்­சத்­தி­ரங்­கள் மண­ம­கன் அல்­லது மண­ம­கள் நட்­சத்­தி­ரங்­கள் ஒன்­றாக வந்­தால் திரு­ம­ணம் செய்­ய­லாம். இவை நல்ல பலன்­களை கொடுக்­கும். திசா சந்­திப்பு தோஷம் உண்­டாக முடி­யாது என்­றும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

சுமா­ராக இணைக்­கக்கூடிய ஒரே நட்­சத்­தி­ரங்­கள்: அஸ்­வினி, கிருத்­திகை, மிரு­க­சீ­ரி­டம், புனர்­பூ­சம், பூசம், பூரம், உத்­தி­ரம், சித்­திரை, அனு­சம், பூரா­டம், உத்­ரா­டம்

மேலே குறிப்­பிட்ட நட்­சத்­தி­ரங்­கள் ஒரே நட்­சத்­தி­ர­மாக வந்­தால் திரு­ம­ணம் செய்­ய­லாம். ஆனால், மத்­தி­மம் பொருத்­தம்தான். அதா­வது சுமா­ரான பொருத்­தம்­தான். மொத்­தத்­தில் திரு­ம­ணம் செய்ய பாத­கம் இல்லை. பொருத்­த­முள்ள ஒரே நட்­சத்­தி­ரத்தை மண­ம­கள், மண­ம­கன்­க­ளுக்கு திரு­ம­ணம் செய்­யும் போது நட்­சத்­தி­ரத்­தின் முந்தை­ய பாதம் ஆணுக்­கும் பிந்தைய பாதம் பெண்­ணுக்­கும் இருந்­தால் திரு­ம­ணம் செய்­ய­லாம். (உ–ம்) மணப்­பெண், மண­ம­கன் ரோகிணி நட்­சத்­தி­ரம் என்று வைத்­துக் கொள்­வோம். ரோகிணி நட்­சத்­தி­ரத்­தின் முதல் பாதம் ஆணுக்­கும் இரண்டு மூன்று நான்கு ஏதா­வ­தொரு பாதம் பெண்­ணுக்கும் இருப்­பது நற்­ப­லன்­கள் கொடுக்­கும். பெண் நட்­சத்­தி­ரப்­பா­தம் முந்­தி­யும் ஆண் நட்­சத்­தி­ரப்­பா­தம் பிந்­தி­யும் இருந்­தால் திரு­ம­ணம் செய்­வது சிறப்­பான பலன் இல்லை.

27 நட்­சத்­தி­ரம் திரு­ம­ணம் செய்­ய­லாமா?

பெண்­ணின் நட்­சத்­தி­ரத்­தி­லி­ருந்து ஆணின் நட்­சத்­தி­ரத்தை கணக்­கி­டும் போது 27வது நட்­சத்­தி­ர­மாக வந்­தால் பெண்­ணின் நட்­சத்­தி­ரம் ஆணின் நட்­சத்­தி­ர­மும் ஒரே ராசி­யில் இருந்­தால் திரு­ம­ணம் பொருத்­தம் உண்டு. திரு­ம­ணம் செய்­ய­லாம். உத்­தம பலன்­கள் உண்­டா­கும் அப்­படி அல்­லா­மல் இரு­வர் ராசி­யும் வேறு வேறு இருந்­தால் திரு­ம­ணம் செய்­யக்­கூ­டாது. இதற்கு தினப்­பொ­ருத்­தம் இல்லை நற்­ப­ல­னும் இல்லை என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பொது­வாக இரு­வ­ரும் ஒரே நட்­சத்­தி­ர­மாக இருந்­தா­லும் சரி, ஒரே ராசி­யாக இருந்­தா­லும் சரி மண­ம­கன் மற்­றும் மண­ம­கள் இரு­வ­ரை­யும் இணைப்­பதை தவிர்ப்­பது நல்­லது என்­பேன். கார­ணம் என்­ன­வென்­றால் இவர்­கள் இரு­வ­ருக்­கும் ஆயு­ளில் பாத­கம் ஏற்­ப­டாது. மாறாக, நல்ல அன்­யோன்­யம் மிகும். அதா­வது அன்பு அதி­க­மா­கவே இருக்­கும். ஆனால் மற்ற மற்ற சவுக­ரி­யங்­கள் குறை­யு­டன் இருப்­பதை காண­லாம். உதா­ர­ண­மாக ஒரே ராசி­யா­கவோ அல்லது ஒரே ராசி­யில் பிறந்து வேறு வேறு நட்­சத்­தி­ர­மா­கவோ அல்­லது ஒரே நட்­சத்­தி­ர­மா­கவோ பிறந்­த­வர்­கள் தம்­ப­தி­க­ளாக இருப்­பார்­கள் என்று வைத்­துக்­கொள்­வோம். இவ்­வி­ரு­வ­ருக்­கும் ஏழ­ரைச் சனி, கண்­ட­கச் சனி, அஷ்­ட­மத்­துச் சனி, அர்த்­தாஷ்­ட­மச் சனி வரும்­போது இரு­வ­ருக்­கும் ஒன்­றா­கவே துன்­பம் வரும். இதே போன்று குரு பக­வா­னும் ஜென்ம குரு­வா­க­வும், அஷ்­டம குரு­வா­க­வும் வரும்­போ­தும் துன்­பங்­க­ளையே தரு­கி­றது.

இரு­வ­ருக்­கும் ஒரே கால­கட்­டத்­தில் ஏழ­ரைச்­சனி அல்­லது மேலே குறிப்­பிட்ட ஏதா­வது ஒன்று கோட்­சா­ரப்­படி நடக்­கும் போது அவர்­க­ளின் ஜாத­கத்­தில் நல்ல திசை நடை­பெற்­றால் பர­வா­யில்லை. மாறாக திசை புத்­தி­யும் பாத­க­மாக வந்­தால் அவர்­க­ளின் நிலை என்­ன­வா­கும் என்­ப­து­தான் என் கேள்வி. ஆத­லால், இரு­வ­ரும் வேறு வேறு ராசி­க­ளில் பிறந்­தி­ருந்­தால் அவர்­களை இணைத்­தோ­மே­யா­னால் அவர்­க­ளில் யாரா­வது ஒரு­வ­ருக்கு ஏழ­ரைச் சனி நடந்து  மற்­ற­வ­ருக்கு ஏழ­ரைச்­சனி இல்­லா­மல் இருந்­தால் நன்­மை­யைத் தரும் அல்­லவா? அதா­வது ஒரு­வ­ருக்கு துன்­பம் ஏற்­பட்டு இருக்­கும் போது மற்­ற­வ­ருக்கு இன்­பம் இருக்­கு­மா­யின், துன்­பம் ஏற்­பட்­ட­வ­ருக்கு உறு­து­ணை­யாக உடன் இருந்து உத­வி­பு­ரிய உத­வு­கி­றது. அப்­படி இல்­லா­மல் இரு­வ­ருக்­கும் துன்­பம் ஏற்­பட்டு இருக்­கு­மா­யின், யார் யாருக்கு உதவ முடி­யும்?