டி.வி.பேட்டி: சவாலாக ஏற்று நடிக்கிறேன்!

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019

*    “என்னுடைய கேரியரில் இதுவரை நடித்திராத மிகவும் சவாலான கேரக்டரில் இதில் நடிக்கிறேன்!” என்று மிக வும் குதூகலத்தோடு சொல்கிறார்  “அருந்ததி” ஹீரோ தர்ஷக்  கவுடா.

*    ‘சண்முகம்’ என்ற கேரக்டரில் இதில் நடித்து வருகிறார்.

*    அவருக்கு இதுவே முதல் தமிழ்  சீரியல்.

*    அவருடைய டேட் ஆப் பெர்த் -  அக்டோபர்  14, 1991.

*    பூர்வீகம், பெங்களூரு.

*    பெங்களூருவிலுள்ள ஸ்ரீவாணி எஜுக்கேஷன் சென்டர் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

*    அதன்பின், டான் பாஸ்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.இ. (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்),  டாக்டர். அம்பேத்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எம்.டெக். (மெஷின் டிசைன்)  படித்து முடித்தார்.

*    5 அடி 8 அங்குலம் உயரமும், 75 கிலோ எடையும் உடையவர்.

*    திருமணமானவர்.  மனைவி, ஷில்பா  ரவி.  அவரும் ஒரு பிரபல கன்னட நடிகைதான்.  “நாகினி” சீரியலில்  நெகட்டிவ் கேரக்டரில் நடித்தவர்.

*    இவர்கள் இருவரும் ஒரு தனிப்பட்ட  விழாவில் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.  குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள்  மட்டும் திருமண வைபவத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

*    ”கண்மணி” கன்னட சீரியலில் முதன்முதலாக அறிமுகமானார் தர்ஷக். இது தமிழில் “காவ்யா” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்

பட்டு சன் லைப் டிவியில் ஒளிபரப்பானது.

*    அதன்பின், “பத்மாவதி” கன்னட சீரிய லில் நடித்தார்,

*    “அருந்ததி”யில் நடிப்பதை பற்றி தர்ஷக் சொல்லும் போது –  ”சென்னையிலிருக்கும் என் அம்மாவை அமெரிக்காவுக்கு அழைத்துக் கொண்டு போவதற்காக அங்கிருந்து வருகிறேன். அப்படி வந்த சமயத்தில்,  எதிர்பாராவிதமாக கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி எனக்

குள் புகுந்து விடு கிறது. அதன் காரண

மாக, அந்த ஆவிப் பெண்ணின் நடவடிக் கைகள் எனக்கு வந்து விடு கின்றன. அந்த வித்தியாசமான நடிப்பை அனுபவித்து நடிக்கிறேன்!” என்று குறிப்பிட்டார்.

*    தர்ஷக்குக்கு தமிழ் அவ்வளவாக தெரி யாது. என்றாலும், அதை சவாலாக எடுத்துக்

கொண்டு நடித்து வருகிறார். “நடிப்பை பொறுத்தவரை தமிழிலும், கன்னடத்திலும் ஒன்றுதான். தமிழில் சினிமாவை போல் பிரம்மாண்டமாக செட் போடுகிறார்கள். சீரியல் சிறப்பாக வருவதற்கு மிகவும் கஷ்டப் பட்டு உழைக்கிறார்கள். பல சமயங்களில் இரவு வெகு நேரம் வரை ஷூட்டிங் நடத்தப் படுகிறது!”

*    ஆடியன்ஸ் மனதில் நிலைத்து நிற்கும்படியான கேரக்டர்களில் நடிப்பதற்கு மிகவும் ஆசைப்படுகிறார் தர்ஷக்.    

-– இருளாண்டி