காதலர் ‘விழா’ பரிசு பிரபஞ்ச அழகி குஷி

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019

சுஷ்­மிதா சென், பிலிப்­பைசில் 1994ல் நடந்த பிர­பஞ்ச அழகி (மிஸ் யுனி­வர்ஸ்) போட்­டி­யில் பட்­டம் வென்­றார். பட்­டம் வென்ற போது அவ­ரது வயது 18. பின்­னர் பாலி­வுட்­டில் கலக்­கிய அவர், திரு­ம­ணம் செய்து கொள்­ள­வில்லை. இப்­போது 40 வய­தைக் கடந்த நிலை­யில், தன்னை விட 17 வயது குறைந்த ரோமன் ஷாலு­டன் காதல்­வ­யப்­பட்­டுள்­ளார். விரை­வில் திரு­ம­ணம் நடக்­கப் போகி­றது.

இந்­நி­லை­யில், பிர­பஞ்ச அழகி பட்­டம் வென்ற 25வது ஆண்டு விழாவை, சுஷ்­மி­தா­வின் 2 வளர்ப்பு மகள்­க­ளும், ரோமன் ஷாலும் ஏற்­பாடு செய்­த­னர்.

விழா­வில் உற்­சா­க­மா­கப் பங்­கேற்று, கேக் வெட்டி குதுா­க­லித்­தார் சுஷ்­மிதா. அந்த கேக்­கில், பிர­பஞ்ச அழகி பட்­டம் வென்ற போது எடுக்­கப்­பட்ட போட்டோ மற்­றும் அவர் நடித்த ஹிட் சினி­மாக்­க­ளின் ஸ்டில்­கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

இந்த படங்­களை சமூக வலை­த­ளங்­க­ளில் வெளி­யிட்­டுள்ள சுஷ்­மிதா, அதில் இணைத்­துள்ள மல­ரும் நினை­வு­க­ளின் பதிவு: ‘‘எனக்கு பெரு­மை­யான அடை­யா­ளத்தை பெற்­றுத்­தந்த என்­னு­டைய தாய்­வீ­டான இந்­தி­யா­வுக்கு நன்றி. கடந்த 25 ஆண்­டு­க­ளாக மக்­கள் என் மீது அன்­பைப் பொழிந்து வரு­கின்­ற­னர்.

பிர­பஞ்ச அழகி பட்­டம், எனக்கு கிடைத்த மிகப்­பெ­ரிய சன்­மா­னம். 25 ஆண்­டு­கள் நிறை­வ­டைந்­தா­லும், பிலிப்­பைசில் பட்­டம் பெற்ற மகிழ்ச்­சி­யான தரு­ணம், என் இத­யத்­தில் பசு­மை­யா­கப் பதிந்­தி­ருக்­கி­றது. இப்­போ­தும் கூட, பிலிப்­பைசில் பிறக்­கும் குழந்­தை­க­ளுக்கு ‘சுஷ்­மிதா’ எனப் பெயர் சூட்டி மகிழ்­வது எனக்கு மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது’’.