சல்மான் மீது தபு கோபம் ?

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019

பாலிவுட்­டில் இப்­போது எங்கு பார்த்­தா­லும், சல்­மான் கான் நடித்­துள்ள ‘பாரத்’ படம் பற்­றிய பேச்­சு­தான். இதில் சல்­மா­னின் சகோ­த­ரி­யாக நடித்­துள்ள நடிகை தபு, புெரா­மோ­ஷன் நிகழ்ச்­சி­க­ளில் பங்­கேற்­க­வில்லை. சல்­மான் மீதான கோபத்­தால்­தான் தபு ஒதுங்­கி­யி­ருக்­கி­றார், அஜய் தேவ்­கன் தலை­யீட்­டால் தபு ஒதுங்­கி­யி­ருக்­கி­றார் என்­றெல்­லாம் சமூக வலை­த­ளங்­க­ளில் கிசு­கிசு வளர்ந்­தி­ருக்­கி­றது.

இதில் நொந்­து­போ­யி­ருக்­கும் தபு வெளி­யிட்­டுள்ள விளக்­கம்: ‘பாரத்’ படத்­தில் சல்­மான் சகோ­த­ரி­யாக நடித்­துள்­ளேன். படத்­தில் ஒரே ஒரு காட்­சி­யில் மட்­டும்­தான் வரு­கி­றேன். எனி­னும், அதை மிக­வும் அழ­கான தரு­ண­மாக கரு­து­கி­றேன்.

சினி­மா­வுக்கு வந்த காலத்­தி­லி­ருந்தே சல்­மான் மற்­றும் அஜய் தேவ்­க­னு­டன் நடித்து வரு­கி­றேன். இந்த இரு நடி­கர்­க­ளு­டன் நடிப்­ப­தில் எனக்கு ஆர்­வம் உண்டு. சல்­மா­னு­டன் நீண்ட நாட்­க­ளா­கப் பழகி வரு­கி­றேன். அவ­ரும் நானும் ஒரே குடும்­பத்­தி­னர் போன்­ற­வர்­கள். அவர் மீது எந்த கோப­மும் கிடை­யாது’’.