சாதனை நாயகன்

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

ஆந்­திரா முதல்­வ­ராக பத­வி­யேற்­றுள்ள ஜெகன்­மோ­கன் ரெட்டி, இதற்­காக தான் பத்து வரு­டங்­கள் காத்­தி­ருந்­தார். ஆந்­திர முதல்­வ­ராக இருந்த இவ­ரது தந்தை ஒய்.எஸ்.ராஜ­சே­கர ரெட்டி, 2009, செப்­டம்­பர் 9ம் தேதி ஹெலி­காப்­டர் விபத்­தில் பலி­யா­னார். அவ­ரது தந்­தை­யின் இடத்­திற்கு ஜெகன்­மோ­கன் ரெட்டி உரிமை கோரி­னார். அவ­ரது குடும்­பத்­தார் மூன்று மாதம் வரை­யி­லும் முதல்­வ­ரின் அதி­கார இல்­லத்தை காலி செய்ய மறுத்­த­னர். காங்­கி­ரஸ் தலை­வ­ராக இருந்த சோனியா காந்தி,ஜெகன் மோகன் ரெட்­டிக்கு முதல்­வர் பதவி தர மறுத்­தார். கட்­சி­யில் இருந்த சிலர், பிரச்­னையை முடி­வுக்கு கொண்டு வர அவ­ருக்கு கட்சி தலை­வர் பதவி வழங்­க­லாம் என்று ஆலோ­சனை கூறி­னார்­கள். அதை­யும் சோனியா காந்தி ஏற்­றுக் கொள்­ள­வில்லை. இறு­தி­யில் ஜெகன்­மோ­கன் ரெட்டி, ஓய்.எஸ்.ஆர்.காங்­கி­ரஸ் என்று அழைக்­கப்­ப­டும் ‘யுவ­ஜனா சர்­மிகா ரியுது காங்­கி­ரஸ்’ என்ற தனிக்­கட்­சியை தொடங்­கி­னார். பத்து வரு­டங்­கள் கழித்து கதையே தலை­கீ­ழாக மாறி­விட்­டது. சமீ­பத்­தில் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் காங்­கி­ரஸ் படு­தோல்­வியை சந்­தித்­தது. ஜெகன்­மோ­கன் ரெட்­டி­யின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்­சியை அமைத்­துள்­ளது.

ஜெகன்­மோ­கன் ரெட்டி அவ­ரது தந்தை ராஜ­சே­கர ரெட்டி முத­ல­மைச்­ச­ராக இருந்த போது (2004–2009) கடைப்­பி­டித்த அதே வழி­களை கடைப்­பி­டித்­தார். அவர் கீழ் மட்­டத்­தில் உள்ள மக்­களை கவர பல்­வேறு நலத்­திட்­டங்­களை அறி­வித்­தார். இதன் மூலம் ஏழை­க­ளுக்கு உத­வும் தலை­வர் என்ற தோற்­றம் உரு­வா­கி­யது. இதே போல் ஜெகன்­மோ­கன் ரெட்டி மக்­களை சந்­திக்­கும் நிகழ்ச்­சி­களை நடத்தி, மீண்­டும் ராஜன்னா ராஜ்­யம் (ராஜ­சே­கர ரெட்டி ஆட்சி) கொண்டு வரு­வோம் என்று சூளு­ரைத்­தார். அவ­ரது தந்தை 2004ல் மாநி­லம் முழு­வ­தும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டார். 2018–19ல் அதே போல் ஜெகன்­மோ­கன் ரெட்­டி­யும் ‘பிரஜா சங்­கல்ப் யாத்­திரை’ என்ற பெய­ரில் பாத­யாத்­தி­ரை­யாக சென்­றார். இவர் 341 நாட்­கள் 3,648 கி.மீட்­டர் பாத­யாத்­தி­ரை­யாக சென்று ஒரு கோடி பேரை சந்­தித்­தார். அவ­ரது தந்தை முதல்­வ­ராக இருந்­த­போது கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள், நண்­பர்­கள், அதி­கா­ரி­க­ளுக்கு சலுகை காட்­டி­னார்.  அதற்கு பிர­தி­ப­ல­னாக லாபம் அடைந்­தார் என்று கூறி வழக்கு தொட­ரப்­பட்­டது. இந்த வழக்கு விசா­ர­ணைக்கு ஒவ்­வொரு வெள்­ளிக்­கி­ழ­மை­யும் நேரில் ஆஜர் ஆகி கொண்டே, அடித்­தட்டு மக்­களை சந்­திக்­கும் பாத­யாத்­தி­ரை­யும் தொடர்ந்­தார்.

சமீ­பத்­தில் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் ஆந்­தி­ரா­வில் உள்ள 25 தொகு­தி­க­ளில் 22 தொகு­தி­க­ளில் ஒய்.எஸ்.ஆர் காங்­கி­ரஸ் கைப்­பற்­றி­யுள்­ளது. இதே போல் சட்­ட­சபை தேர்­த­லில் மொத்­த­முள்ள 175 இடங்­க­ளில் 151 இடங்­களை கைப்­பற்றி ஆட்சி அமைத்­துள்­ளது. ஏறக்­கு­றைய எதிர்­கட்­சியே இல்லை என்ற நிலையே.

ஆந்­திர முதல்­வ­ராக இருந்த சந்­தி­ர­பாபு நாயுடு ஊட­கங்­க­ளின் நாய­கர் போல் வலம் வந்­த­வர். ஜெகன்­மோ­கன் ரெட்­டியை பற்றி எதிர்­ம­றை­யான செய்­தி­களே வெளி­யா­யின. “ஆனால் பிரஜா சங்­கல்ப் யாத்­தி­ரை­யின் மூலம் தொலை தூரத்­தி­லும் உள்ள அடித்­தட்டு மக்­களை சந்­தித்து, அவர்­க­ளின் மன­நி­லையை அறிய வாய்ப்­பாக அமைந்­தது. அவர் மக்­களை நோக்கி கையெ­டுத்து கும்­பிட்டு தெலுங்கு தேசத்­தின் ஆட்­சியை அகற்ற ஒரு முறை வாய்ப்பு தாருங்­கள் என்று வேண்­டு­கோள் விடுத்­தார். இதற்கு பலன் கிடைத்­தது. மக்­கள் ராஜ­சே­கர ரெட்­டி­யின் நல திட்­டங்­களை நினை­வில் வைத்­துள்­ள­னர்” என்று கூறு­கின்­றார் ஏ.பிர­சன்ன குமார். இவர் விசா­கப்­பட்­டி­னத்­தில் உள்ள சென்­டர் பார் பாலிசி ஸ்டடிஸ் என்ற ஆய்வு நிறு­வ­னத்­தின் நிறு­வன தலை­வர்.

ஜெகன்­மோ­கன் ரெட்டி தேர்­தல் பிர­சா­ரத்­திற்­காக நிபு­ணர்­க­ளின் உத­வி­யை­யும் பெற்­றார். 2014ல் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்­தில் தெலுங்கு தேசத்­தி­டம் தோல்வி அடைந்­தார். இத­னால் இந்த தேர்­தல் உத்­தி­களை வகுக்­க­வும், பிர­சா­ரத்­திற்­கும் நிபு­ணர்­க­ளின் உத­வியை பெற்­றார். தேர்­தல் உத்தி வகுப்­பா­ளர் பிர­சாந்த் கிஷோ­ரின் இந்­தி­யன் பொலி­டி­கல் ஆக்­சன் கமிட்­டி­யைச் சேர்ந்­த­வர்­கள் தேர்­தல் பிர­சா­ரத்தை திட்­ட­மிட்­ட­னர். மக்­களை கவ­ரும் பல கோஷங்­களை வடி­வ­மைத்­த­னர். ஜெகன்­மோ­கன் ரெட்­டி­யின் சகோ­தரி சர்­மிளா ரெட்­டி­யும் 11 நாட்­கள் பேருந்­தில் பய­ணம் செய்து பிர­சா­ரம் செய்­தார்.

இந்த திட்­ட­மிட்ட பிர­சா­ரம், மக்­களை கவ­ரும் கோஷங்­க­ளுக்கு நல்ல பலன் கிடைத்­தது. லோக்­சபா, சட்­ட­சபை தேர்­தல்­க­ளில் அதிக வாக்­கு­க­ளும், அதிக இடங்­க­ளில் வெற்­றி­யும் கிடைத்­தது. மறைந்த என்.டி.ராம­ரா­வுக்கு கூட, இந்த அளவு செல்­வாக்கு  இல்லை. 49.9 சத­வி­கித வாக்­கு­களை ஓய்.எஸ்.ஆர் காங்­கி­ரஸ் பெற்­றுள்­ளது. ஆளும் கட்­சி­யாக இருந்த தெலுங்கு தேசம், பல்­வேறு  சலு­கை­களை அளித்­தா­லும், வளர்ச்சி திட்­டங்­களை நிறை­வேற்­றி­னா­லும், மக்­கள் மத்­தி­யில் ஆட்­சிக்கு எதி­ரான மன­நிலை இருந்­தது என்று அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். இத்­து­டன் தெலுங்கு தேசத்­தின் தோல்­விக்கு மற்­றொரு கார­ணம் நடி­கர் பவன் கல்­யாண் தொடங்­கிய ஜன கல்­யாண் கட்­சி­யும் தேர்­த­லில் போட்­டி­யிட்­டது. இது ஒரு சட்­ட­சபை தொகு­தி­யில் மட்­டும் வெற்றி பெற்­றது. 6.7 சத­வி­கித வாக்­கு­களை வாங்­கி­யது. சந்­தி­ர­பாபு நாயு­டு­வின் தலை­மை­யி­லான தெலுங்கு தேசம் கட்­சி­யின் தோல்­விக்கு, நடி­கர் பவன் கல்­யான் கட்­சி­யும் ஒரு கார­ணம் என­லாம். தெலுங்கு தேசம் 39.1 சத­வி­கித வாக்­கு­களை வாங்­கி­யுள்­ளது.

சட்­ட­சபை தேர்­தல் இறுதி முடி­வில் தெலுங்கு  தேசம் 23 இடங்­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ளது என்ற தக­வல் வெளி­யா­னது. இதை பற்றி ஜெகன்­மோ­கன் ரெட்டி, “கட­வுள் சந்­தி­ர­பாபு நாயு­டுவை தண்­டித்­து­விட்­டார். 2014ல் சட்­ட­சபை தேர்­தல் முடிந்த பிறகு, ஒய்.எஸ்.ஆர் காங்­கி­ரஸ் கட்­சியை சேர்ந்த 23 எம்.எல்.ஏ.,க்களை சந்­தி­ர­பாபு நாயுடு கட்சி மாற­வைத்­தார். தற்­போது அதே எண்­ணிக்­கை­யில் மட்­டுமே வெற்றி பெற்­றுள்­ள­னர்” என்று கூறி­னார்.

சந்­தி­ர­பாபு நாயுடு நரேந்­திர மோடிக்கு மாற்­றாக தேசிய அள­வில் மாற்று அணியை உரு­வாக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்­டார். இதற்­காக பல நக­ரங்­க­ளுக்கு சென்று கட்சி தலை­வர்­களை சந்­தித்து பேசி­னார். ஆந்­தி­ரா­வுக்கு சிறப்பு மாநில அந்­தஸ்து வழங்க மோடி அரசு மறுத்த்து. இதன் பிறகு பா.ஜ..வுட­னான உறவு முறிந்­தது. சந்­தி­ர­பாபு நாயு­டு­வின் திட்­டம் பலிக்­க­வில்லை.

சந்­தி­ர­பாபு நாயுடு அமைத்த ‘உண்மை நில­வ­ரப்­ப­டி­யான ஆளுமை சமு­தா­யம்’ (Real--–Time Governance Society) என்ற திட்­டத்­தின் கீழ் கிடைத்த தவ­றான புள்ளி விப­ரங்­க­ளால், அவர் தவ­றான பாதை­யில் சென்­றார். அவர் கற்­ப­னை­யில் வாழ்ந்­தார். 85 சத­வி­கித மக்­கள் திருப்­தி­க­ர­மாக உள்­ள­னர் என்ற யதார்த்­துக்கு புறம்­பான தக­வ­லால் ஏமாந்­தார் என்று சந்­தி­ர­பாபு நாயு­டு­வின் முன்­னாள் ஊடக ஆலோ­ச­கர் பிர­கலா பிர­பா­கர் தெரி­வித்­தார். அவர் மேலும் கூறு­கை­யில், “அர­சின் திட்­டங்­கள் சரி­யாக மக்­க­ளுக்கு போய் சேர­வில்லை. தெலுங்கு தேச அர­சின் ஊதா­ரித்­த­ன­மான செல­வு­க­ளால் மாநில கடன் ரூ. 2 லட்­சத்து 85 ஆயி­ரம் கோடி என்ற அள­வில் அதி­க­ரித்த்து. இதற்கு  வட்­டி

­யாக மட்­டும் வரு­டத்­திற்கு 20 ஆயி­ரம் கோடி ரூபாய் கட்ட வேண்­டும்.

அத்­து­டன் சந்­தி­ர­பாபு நாயு­டு­வுக்கு 69 வய­தா­கி­விட்­டது. அவர் கட்­சி­யின் மாவட்ட, பிராந்­திய அள­வி­லான தலை­மையை உரு­வாக்­க­வும் தவ­றி­விட்­டார். இது கட்­சியை சீர்­கு­லை­யா­மல் பார்த்­துக் கொள்­வ­தற்கு அவ­ரது மகன் நாரோ லோகேஷ்க்கு சவா­லா­ன­தாக இருக்­கும். (தற்­போது நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் மங்­க­ல­கிரி தொகு­தி­யில் போட்­டி­யிட்டு தோல்வி அடைந்­தார்.) அதே நேரத்­தில் பார­திய ஜனதா, காங்­கி­ரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்­சி­க­ளில் இருந்து செல்­வாக்­கா­ன­வர்­களை இழுக்க பார்க்­கி­றது. இதன் மூலம் தெலுங்கு தேசத்­திற்கு மாற்­றாக பா.ஜ., என்ற தோற்­றத்தை ஏற்­க­னவே உரு­வாக்கி விட்­டது. காங்­கி­ர­சுக்கு மாற்­றாக ஓய்.எஸ்.ஆர். காங்­கி­ரஸ் என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இது ஜெகன்­மோ­கன் ரெட்­டிக்கு சவா­லா­ன­தாக இருக்­கும். சட்­ட­சபை தேர்­த­லில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உரிமை கோரு­வ­தற்கு முன்­னா­லேயே ஜெகன்­மோ­கன் ரெட்டி, நரேந்­திர மோடியை சந்­தித்­தார். நரேந்­திர மோடி அரசு ஆந்­திர மாநி­லத்­திற்கு சிறப்பு மாநில அந்­தஸ்து கிடைக்­குமா என்ற அச்­ச­மும் உள்­ளது. அவ­ரால் இதை வலி­யு­றுத்­த­வும் முடி­யாது. ஏனெ­னில் லோக்­ச­பா­வில் பா.ஜ.,வுக்கு அறு­திப் பெரும்­பான்மை இருப்­ப­தால், மற்ற எந்த கட்­சி­யின் ஆத­ர­வும் தேவை இல்லை.

சந்­தி­ர­பாபு நாயு­டு­வின் ஆட்­சி­யில் நிலங்­களை கைய­கப்­ப­டுத்தி சேமித்­தல், தலை­ந­கர் அம­ரா­வ­திக்கு நிலம் ஒதுக்­கீடு, காண்ட்­ராக்ட் கொடுத்­தது, போலா­வ­ரம் திட்­டத்­திற்­காக நிதி ஒதுக்­கி­யது, துறை­முக நக­ர­மான விசா­க­பட்­டி­னத்­தில் நிலம் ஒதுக்­கீடு என பல்­வேறு விஷ­யங்­கள் விசா­ரிக்­கப்­ப­டும் என்று ஜெகன்­மோ­கன் ரெட்டி அறி­வித்­துள்­ளார்.

“ஆந்­திரா பொரு­ளா­தார சிக்­க­லில் உள்­ளது. மத்­திய அர­சின் உதவி தேவை. ஆந்­தி­ராவை பிரிக்­கும் போது, 2014ல் பார்­லி­மென்­டில் அளித்த வாக்­கு­று­திப்­படி எல்­லா­வி­த­மான உத­வி­க­ளை­யும் பெற ஜெகன்­மோ­கன் ரெட்டி, அவ­ருக்­குள்ள மற்­ற­வர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தும் திற­மையை பயன்­ப­டுத்த வேண்­டும். ஓய்.எஸ்.ஆர். காங்­கி­ரஸ் கட்­சி­யும், தெலுங்கு தேசம் கட்­சி­யும் அவை­க­ளுக்­குள் உள்ள சச்­ச­ர­வு­களை மறந்து விட்டு, மாநி­லத்­தின் வளர்ச்­சிக்­காக பாடு­ப­ட­வேண்­டும். மாநி­லத்­தில் அமைந்த புதிய அரசு மாநில பிரி­வி­னை­யின் போது அளித்த வாக்­கு­று­திப்­படி ரூ.80 ஆயி­ரம் கோடி பெற முயற்­சிக்க வேண்­டும் முன்­னாள் அரசு அதி­கா­ரி­யும், லோக்­சத்தா கட்சி தலை­வ­ரு­மான டாக்­டர். ஜெய­பி­ர­காஷ் நாரா­ய­ணன் கூறி­னார்.

ஜெகன்­மோ­கன் ரெட்டி கட்சி எம்.எல்.ஏ.,க்களால் சட்­ட­சபை கட்சி தலை­வ­ராக (முத­ல­மைச்­ச­ராக) தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிறகு பேசு­கை­யில், “தற்­போது மக்­கள் நம்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கை­யில் வாக்­க­ளித்து வெற்றி பெற வைத்­துள்­ள­னர். 2024ல் நடை­பெற உள்ள தேர்­த­லில், நமது செயல்­பா­டு­களை பார்த்து இதை­விட அதிக அளவு வாக்­க­ளித்து வெற்றி பெற வைப்­பார்­கள். நாட்­டிற்கே முன்­னு­தா­ரன மாநி­ல­மாக ஆந்­தி­ராவை உரு­வாக்கி, மற்ற மாநி­லங்­களை திரும்பி பார்க்க வைப்­போம்” என்று சூளு­ரைத்­தார்.

நன்றி: இந்­தியா டுடே வார இத­ழில் அமர்­நாத் கே.மேனன் எழு­திய கட்­டு­ரை­யின் சுருக்­கம்.